Introduction and Announcements

  
New Original ! 
Aankhon ko - आँखों को

Older Compositions : Haule SeUdalin Thiriyaale , Choolena
Available in iTunes and Amazon !!

Learn Indian Classical Dance in Riyadh   !!

Thursday, April 30, 2009

கண்ணன் பாடல்கள் - 4 - குசேலனின் கலக்கம்

கண்ணன் பாடல்களில் கோபியருக்கு கொடுத்த முக்கியத்துவத்தை சுதாமனுக்கு கொடுக்கவில்லை. சில வருடஙளுக்கு முன் நான் நான் எழுதிய ”கொன்றை மலர் கொய்து” என்ற பாடலில் ஒருமுறை சுதாமனைப் பற்றிக் குறிப்பிட்டேன். சில நாட்களுக்கு முன்னே சுதாமனைப் பற்றி இரண்டு பாடல்கள் எழுதத் தோன்றியது.

சுதாமன் கண்ணனைக் கண்ட பின்பு அவருக்கு கிடைத்த செல்வத்தை பற்றி பல கதைகள் வந்துள்ளன. ஆனால், அங்கு செல்லும்போது அவருடைய மனநிலை எப்படி இருந்தது ? அப்படி சென்ற பின், கண்ணன் நன்கு உபசரித்து அனுப்பினான் - வெறும் கையுடனே. அப்படி மீண்டு வரும்போது அவர் மன நிலை எப்படி இருந்தது ?

இந்த இரண்டும் இரண்டு பாடல்களாக என் மனதில் வந்தன. அதிலே முதல் பாடல் சுதாமனுக்கு கண்ணன் களைப்பு தீர பாத பூஜை செய்து வரவேற்கும் நேரத்தில் சுதாமனுடைய மனதில் எழும் சில ஏக்கங்கள் , பயங்கள் பற்றி ஆகும். முக்கியமாக அவர் வாய் விட்டு எதுவும் கேட்பதில்லை. ஆனாலும் அவரது மனதில் இருக்கின்ற சில கவலைகள் பற்றிய பாடல் இது. அதை இங்கே தருகிறேன். இதனை ஆஹீர் பைரவி அல்லது சக்ரவாகத்தில் மெட்டமைத்து இருக்கிறேன். பாடல் வரிகளை இப்போது தருகிறேன். பாடலைப் பின்னர் தருகிறேன்.

====

ராகம் : சக்ரவாகம்
தாளம் : ஆதி

பல்லவி:
=======

கால்களைக் கழுவும் கண்ணா - என்
கையறு நிலை கண்டு கை கழுவாதிருப்பாய்

அனுபல்லவி
===========

காடு மலை கடந்த வலி ஒன்றும் இல்லை - நீ
காண மறுத்திருந்தால் தரையில் மீன் என் நிலை

சரணம் 1:
=======

அடுப்பிலே தீ மூட்டி வாரங்கள் ஆனது
இடுப்பிலே ஈரமாய் கந்தலும் ஆடுது
இளமையை இயலாமை கொன்று தான் போட்டது
இயல்பென வறுமையும் இம்சையாய் ஆனது

கரும் பலகை கண்டு கரிந்த உணவு என
கொடும் பசி உந்தவே குழந்தை வாய் வைக்குது

சரணம் 2:
=======

கோபுரம் தேவையில்லை
கோடிப்பொன் தேவையில்லை
மாடமும் தேவையில்லை
மனை ஏதும் தேவையில்லை
இல்லக் கிழத்தியின்
இளைத்த பிள்ளகளின்
கொல்லும் வறுமை போக
கொஞ்சம் நெல் தாராய்


===