Introduction and Announcements

  
New Original ! 
Aankhon ko - आँखों को

Older Compositions : Haule SeUdalin Thiriyaale , Choolena
Available in iTunes and Amazon !!

Learn Indian Classical Dance in Sydney  !!

Friday, February 04, 2011

A poem for Sindhuja-Karthik Marriage

This is a poem I wrote on the occasion of marriage of Sindhuja Bhakthavatsalam and Karthik Gomadam.

மதியினைத் தூண்டும் முனைவரின் பாடம்
மனதினைத் தீண்டும் மரபிசை ராகம்

கதியெனக் கிடந்த கன்னியுன் வாழ்வில்
கவிதையாய் கார்த்தியும் புகுந்தான் உன்னை

ரதியெனக் கண்டான் ரசனைகள் சேர்த்தான்
நிமிர்ந்த உன்நடை காதலால் சற்றே

நதியென வளைந்து நாணமும் பூண
நாட்களில் உன்னுடை நல்மனம் கனிந்து

பெற்றவர் உற்றவர் பெரியவர் வாழ்த்த
பெருமழை போலே அன்பது பெய்ய

கற்ற உன்குரு கையுடை வீணையால்
கனிவாய் சுரங்களும் கவினோடெழுப்ப

மகவை ஈன்றும் மாளிகை ஈன்றும்
மாசிலா உடல்நிலை மட்டிலா இளமை(யோடு)

அகவை ஆயிரம் கண்டுநீர் வாழ
அன்புடன் வாழ்த்துவம் ! வாழிய ! வாழிய !