Pages

Wednesday, August 24, 2005

P.சுசீலாவுடன் ஒரு பாடல் நிகழ்ச்சி - part 1

திக் திக்குனு நெஞ்சு அடிச்சிக்குது..அப்பப்போ கால் விரல்லேர்ந்து உச்சந்தலை வரைக்கும் மரத்துப் போகுது..இது நெசம் தானான்னு அப்பப்போ சந்தேகம் வருது...

பொறுங்க..இது எனக்கு வந்த நீரிழிவு வியாதி இல்ல.. என்னை மாதிரி ஒரு அற்ப ஜந்துவுக்கு P.சுசீலாவோட மேடையில பாட ஒரு வாய்ப்பு வந்திருக்குன்னு நினைச்சுப் பாத்தா நம்ப முடியல. தோஸ்து ஸ்ரிராம் லக்ஷ்ம்ண் கிட்ட "அம்மா கூட கொஞ்சம் பேசறதுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்க"ன்னு கேக்கப் போயி அவங்க ஃப்ரீயா இருக்காங்கன்னு தெரிஞ்சு, விளையாட்டுப் போக்கில பாட்டுக் கச்சேரி ஒண்ணு வெச்சுக்கலாமான்னு கேட்டு, அவங்க ஒத்துக்கிட்டு, பாட்டு தேர்வு செஞ்சு, குறிப்பு எடுத்து, அசுர வேகத்துல போய்க்கிட்டு இருக்கு..கூடவே ஜமுனா ராணியம்மா கூடவும் பாடுற மாதிரி வாய்ப்பு.. நம்ப முடியல நெசம்தானான்னு...

என்ன ஒரே பயம்னா, பாடுற தேதி அன்னிக்கு தொண்டை கட்டிக்காம இருக்கணும். ஏற்கனவே சுமாரா பாடுற ஒருத்தனுக்கு தொண்டை வேற கட்டிப் போச்சுன்ன, அவுங்களைப் போல பெரியவங்களோட கச்சேரி கெட்டுப் போயிரும். ஆண்டவன் வழி விடுவான்னு நெனக்கிறேன்.

Date : 28 th august
Time : 2:00 pm
Venue: Meadowcreek Highschool,
4455 Steve Reynolds Boulevard
Norcross, GA 30093

Saturday, August 20, 2005

நோக்கமில்லா கலைமனம்

சித்திரம் தீட்டிட சிந்தனை செய்தால்
சத்திரம் போலே சலசலப்பு
பொத்தியே வைத்த மனதினில் இன்று
புகுந்தவை எல்லாம் அருவெறுப்பு

கண்களில் காணும் காட்சிகள் எல்லாம்
காற்றினைப் போலே மறைவதனால்
நுண்கலனாகிட வேண்டிய மனதில்
சலனங்களாலே எரிஅடுப்பு

பண்ணிட வேண்டிய படைப்புக்கள் எல்லாம்
எண்ணிட அழகே மனம் அறியும்
கட்டியம் இல்லா கலங்கிய மனதால்
காலமும் தன் தழல் தனிலெரியும்
கலையுமே அதிலேதான் விரயம்.