என்னவளே படப் பாடல் வந்த நேரம். மிக நல்ல பாடல் எனப் பட்டது. கரடி பிரபு தேவாவும் பூசணி நக்மாவும் நடித்துக் கெடுத்தனர் அந்தப் பாட்டை. அதை விடக் கெடுத்தது வைரமுத்துவின் "கும்பிட்டுக் கண்ணடிப்பேன்" என்ற பதம். கும்பிடப் போன தெய்வம் sight ஐ குறுக்கே அனுப்பி விட்டது என சொல்ல நினைத்தாரோ என்னவோ, எனக்கு அந்தப் பதம் மட்டும் பிடிக்கவில்லை. நானும் என் முயற்சியில் இறங்கினேன். இதோ அந்த வரிகள்:
பல்லவி:
மஞ்சரியே அடி சுந்தரியே உனை அனுதினம் கண்டிடுவேன்
குஞ்சரியே எழில் பூச்சொரியும் உந்தன் கூந்தலை தீண்டிடுவேன்
உன் சேலையிலே புகும் தென்றலிடம் ஒரு செய்தியை சொல்லி வைப்பென்
என் பாட்டினிலே வரும் ராகத்திலே ஒரு புதுமையும் செய்து வைப்பென் - செழும்
காட்டினிலே வரும் நல்மயில் போன்ற உன் ஆட்டத்தில் மனம் லயிப்பேன்

சரணம் 1:
வஞ்சி உன் கூந்தலில் வந்திடும் வாசத்தில் கண்ணயர்ந்துறங்கிடுவேன்
வஞ்சிர மீனினைப் போன்ற உன் கண்களும் துஞ்சிட இதழ் பதிப்பேன்
கொஞ்சிடும் கைகளை நெஞ்சினில் சேர்த்துனை மஞ்சத்தில் வீழ்த்திடுவேன்
துஞ்சிடும் வேளையில் துகிலினைக் களைந்து உன் முகத்தினில் முகம் பதிப்பேன்
என்காதலிபாரடிஇடையினில் யாழிசைப்பேன்
என் ஆவியில்சேரடிஇடைவெளி நான் வெறுப்பேன்

சரணம் 2:
காதலியே உனைக் காண இயன்றிடின் காற்றினில் கரைந்திடுவேன்
மோகினியே உந்தன் அழகினுக்கே ஒரு ஓவியம் வரைந்திடுவேன்
கடலலை போன்று உன் கவின்மிகு கால்களை தீண்டி மகிழ்ந்திடுவேன்
கொடியெனப் படர்ந்து நீ மேனியைத் தழுவிட சுகமதில் அமிழ்ந்திடுவேன்
நாம் சேர்வதால்சோர்வதால்சொர்க்கமும் தெரியுதடி
நாம்வாழ்வதால்வாழ்ந்து வீழ்வதால்உண்மையும் புரியுமடி
(மஞ்சரியே)

Incredible work Mulla!
ReplyDeleteI couldn't resist myself from commenting. Just came to your blog to look for the entry about the software you use and stumbled upon this one. It walks a thin line between "seyyul" tamil and "menmai" tamil. Reminded me of the ole' songs (sung by seerkazhi, mahalingam, sundarambal and others). I knew the meaning of almost all the words! Once again, very very NEAT!
Naren CECRI 2002