Introduction and Announcements

  
New Original ! 
Aankhon ko - आँखों को

Older Compositions : Haule SeUdalin Thiriyaale , Choolena
Available in iTunes and Amazon !!

Learn Indian Classical Dance in Riyadh   !!

Showing posts with label Poems. Show all posts
Showing posts with label Poems. Show all posts

Sunday, May 29, 2016

கண்ணன் பாடல்கள் - 6 - கொன்றை மலர் கொய்து

Song: Kondrai Malar Koythu - கொன்றை மலர் கொய்து
Composition, Lyrics, Orchestration and Vocals: Murali Venkatraman
Raagam :  Madhyamavati
Mixing : Swamy Kitcha

கண்ணன் பாடல்களில் பல உணர்ச்சிநிலைகள் உண்டு.  தோழனாய், தந்தையாய், மகனாய், காதலனாய் பலரும் கண்ணனைப் போற்றியதுண்டு.  இந்தப் பாடல் தன்னிடம் கருணை காட்டாத கண்ணனால் ஒரு மனம் நொந்த  பக்தனின் புலம்பலாக இங்கே தந்திருக்கிறேன்.  இந்தப் பாடலை எழுதி மெட்டமைத்து கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு மேலாகி விட்டன.  இப்போதுதான் இசைக்கோர்வையுடன் பாட ஒரு வாய்ப்பு கிட்டி இங்கே பகிர்ந்துள்ளேன். இதை முறைமையுடன் தன் நேரத்தைச் செலவழித்து சரியான இசைக்கலைவையாக்கிய திரு சுவாமி கிச்சாவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

பெரும் செல்வந்தர்களை அழகிய கொன்றைப் பூவோடும்,  எளிய பக்தனைத் துளசி இலையோடும் ஒப்பிட்டு எழுதி இருக்கிறேன்.

===


கொன்றை மலர் கொய்து உன்முன்னிலே
கொட்டிக் குவிக்கின்ற பலர் தம்மிலே
ஒற்றைத் துளசியிலை போலுன்னடி
ஒற்றி நடக்கின்ற எனைப் பாரய்யா

அன்று சுதாமனுக்கு வாழ்வளித்த மாலவா
இன்று இவ்வதமனுக்கு அருள் செய்ய வா
நீ வரவில்லையேல் அருள் தரவில்லையேல்
உனை வரும்படியே தாயை உலுக்கிடுவேன்
உன்னைப் போல் அல்லாது அவள் கருணை வடிவம்

சிந்தும் கண்ணீர்த்துளி சாகரமானதே
கொஞ்சி கெஞ்சி விம்மி நொந்தேன்
கல்போன்று நிற்பவனே கரைவாய் மனம்
கைலாய நாதன்போல் தருவாய் வரம்
அடேய் ! உன்னை நான் வேண்டி
கூன் தாங்கி வலி வந்ததே !
உன்னாலே ஓரின்பம் மண்மீதில் நான் கண்டே
நாளானது என்ன சோதனை ?!


Friday, November 01, 2013

கணையாழி

கம்பன் விழாவில் “பேசாப் பொருளான சூடாமணி பேசினால் ?” என்ற தலைப்பில் நடந்த கவியரங்கில் நான் வாசித்த கவிதைகள் .

=====

உம்பர்காள் ! உம்மீதே நம்பிக் கை-இல் !
உயர்வான செந்தமிழின் தாள்கள் மற்றும்
கம்பர்தாள் கள்பற்றிப் புண்ணிய னானேன் !
கவியாகச் சிலவரிகள் கழலில் வைப்பேன் !

அரங்கத்தே அமர்ந்துள்ள சான்றோர் எல்லாம்
பெருமனதாய் என்னுளறல் கேட்டே உள்ளம்
இரங்கத்தே வைகாண்பீர் விண்ணப் பத்தை
வினயமுடன் வைக்கின்றேன் தலையும் தாழ்த்தி !

கணையாழி கம்பனவன் கதையில் எதும்
கூறாதுபோ தாமோ என்றே கேள்விக்
கணைஏற்றிக் கேட்டுள்ளார் விடையாய் நானும்
கவிபோன்று உருமாற்றி முயற்சிக் கின்றேன்.

கணையாழி கம்பனவன் கதையில், ஐயா !
இருபோது வருகிறது அனுமன் மூலம்
மனையாளின் துயர்நீக்க முன்னே போகும்
மால்தம்பி உயிர்காக்கப் பின்னே போகும்

======

அனுமன் கடலைத் தாண்டி சீதையை அடைந்து அசோக வனத்தில் அழகான பெண்டிர் சூழ காவலில் வைக்கப் பட்டுள்ள சீதையைக் காண்கிறான்.

அத்தரைப் பூசிய அழகியர் நடுவே
நித்திரை இன்றியே கார்குழல் நீக்கிச்
சித்திரைத் திங்கள் உதிப்பது போலே
பத்தரை மாற்றுப் பத்தினி கண்டான்

மட்டரை போந்தே ராமனின் பெயரில்
முத்திரை மோதிரம் சட்டென இட்டான்
”அத்திரை கடலினைத் தாண்டியே வந்தேன்
அனுமனாம் ராமனின் அடியவன்” என்பான்

”கட்டளை இட்டால் அன்னையே உம்மவர் 
கையிலே சேர்ப்பனே” ! கைதொழல் செய்வான் !
கட்டவிழ்ந்தோடிடும் ஆறுபோல் காரிகை
காய்ந்த மனவெளி ஊற்றுகள் காணவே !
மட்டிலா மகிழ்வொடு மாதவள் ராமனின்
மணியினை மார்பொடு சேர்ப்பனள் ! காலமே
தொட்டிலா அழகொளிர் தேகமும் கொண்டவள்
தூயவன் அணியினை நோக்கியே கூறுவள் ! 

சீதை  கணையாழியை நோக்கிக் கூறுவாள்: 

”ஓகணை யாழியே ! உன்விதி இம்மடப்
பேதையின் விதியென ஆனதோ ! என்போல்
பிறிதொரு ஆடவர் கைபட வந்தனள் 
மன்னவன் விரலையே நீங்கினள் மாசினள் !”

===
அந்தக் கணையாழியில் ஒரு செம்மை படர்ந்து இருப்பதைப் பார்க்கிறாள். துணுக்குறுகிறாள்.  இந்தச் செம்மை இந்தக் கணையாழியின் மேல் எப்படி வந்தது என வினவுகிறாள் கணையாழியிடமே !
===

”கல்லிலும் முள்ளிலும் காய்ந்தவர் நாணுடை
வில்லினைப் பூட்டியே வாழ்பவர் உண்மையின்
சொல்லுடை நாயகர் சிந்திய குருதியும்
உன்னிடை வந்ததோ உரைத்திடு சீக்கிரம் !

உதிரமா ? இல்லை பிறிதொரு மாதின்
அதரமா ? அதனின் சாந்தா ? நெற்றிக்
குங்குமமா எனக் குழம்புகி றேன் !மிக
மங்குதுமா இவள் மீதுள காதலே !

ஊடலும் கூடலும் கண்டவளே ! எனைத்
தேடலும் செய்பவர் வானரனா ? அவர்
சேடனைத் தூதென அனுப்பியதை- ஒரு
கேடெனவா இல்லை சூதெனவா ?”

கணையாழி சொல்கிறது:
==================

”சோக வனத்தைச் சுந்தரமாக்கி-அ
சோக வனமெனப் பெயர் தந்தவளே !
மோக வேட்கையில் மூழ்கியே மாதரைப்
போக வேட்டையில் புணர்ந்திலன் நம்மவன் !

நின்னையே நெஞ்சினில் நிறுத்தியவன் நித்தம்
நித்திரை நேரம் வந்த பின்னே 
தன்னையே நீருகு நேத்திரமாய்ப் பிறர்
காண்பதும் அழகிலைஎன்று தம்கை

கொண்டதை துடைப்பவன் ! இங்கனமே -பல
முறைகளும் செய்திடக் கண்ணிமைகள்
விண்டதே பாருமே எம்முரசலால் துளி
வந்ததே குருதியும் கண்ணகத்தே !

உதிரமும் என்னுடல் பட்டிடச் சட்டென
உறைந்திடச் செம்மையும் சேர்ந்தது காண் !
அதரமல்ல! அதன் சாந்துமல்ல ! அவன்
அழுதிடத் தோன்றிய குருதியம்மா !

====
இப்படி உன்னையே நினைத்துப் புலம்பும் இராமன் தூயவன்.  கணையாழி மேலும் சொல்கிறது
====

உன்னவன் தூயவன் உன்னையே எண்ணியே
விம்மவன் மீதுஏன் சாடுகின்றாய் ?
தென்னவன் மீதுள ஆத்திரம் யாவுமே
தூயவன் மீதுஏன் காட்டுகின்றாய் ?

வானரன் அல்லனீ அனுமனுமே - பலர்
வாழ்த்திட வாழ்பவன் ஐயமில்லை !
வான்நரன் பலருமே வணங்கிடு மாண்புள
வன்!வலி மிக்கோன் பண்பினுரு."

அதிர்ந்து எழுவளே அன்னமும்! மயக்கமும்
தெளிந்து எழுபவள் சொல்லிடுவாள்

அதாவது அனுமன் கணையாழியைக் கொடுத்தவுடன் அந்த அதிர்ச்சியில் மயங்கிப் போனவளின் கனவாகத் தான் இந்த உரையாடலை நான் இங்கே தந்திருக்கிறேன்.  இப்போது அம்மயக்கத்தினின்றும் தெளிந்து அவள் அனுமனைப் பார்த்துச் சொல்லுவாள்.

”நாழி தாழ்த்திடா(து) ராஜன் கணையென
ஆழி தாண்டியே என்னவர் தம்கணை
யாழி எம்கையில் சேர்த்துக் காத்தனை
வாழி வாழிய அருமை அனுமனே !”

நன்றி! வணக்கம் !

கம்பன் விழா - வாழ்த்து - ஒரு கவி மடல்

ஆஸ்ட்ரேலியாவின் கம்பன் கழகம் நடத்தும் ”கம்பன் விழா”விற்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் வந்து சிறப்பித்துத் தருமாறு வேண்டி வாழ்த்தி நான் வரைந்த ஒரு சிறு கவி மடல்.

==================

பாரினில் உள்ளப ழங்குடி மக்கள்
போரினில் மூழ்கியே புண்களைச் சுமந்து
காரிருள் தன்னில் உழன்றிடும் வேளை 
சீர்களால் கவிதைகள் கோர்த்தவர் தமிழர் !

பேரின மெல்லாம் உலகிலே மெச்சப்
பேணினர் தத்தம் மொழியினை - தமிழர்
ஓரினம் தனித்துவ மானவர் என்றே 
உரைத்திடத் தமிழை ஓதுதல் செய்வோம் !

வீரிய முள்ள தமிழரே ! உமது
சீரிய வாழ்வில் தமிழொரு அங்கம் !

அணிகலன் அல்லநம் அருந்தமிழ் ! நெஞ்சக்
குருதியில் ஓடிடும் குன்றாச் செம்மை !
பணியெனக் கருதியே வாரும் நீக்க
பிணியெனப் பிடித்த மொழியின் சிதைவை !

பன்மொழி கற்பீர் கற்றபின் அவற்றின்
பண்புறு கலைகளை தமிழிலே தாரீர்
தொன்மொழித்  தொய்வை நீக்கிடும் கடமை
சேய்-உம தேயாம் ! சேவைகள் தாரீர் !

வடமொழி தொட்டே கம்பனும் கவினாய்
வரைந்தரா மாயணம் அதில்தலை அன்றோ ?
உவமைகள் பலதும் படிப்பார் உள்ளத்(து)
உவகை ஊற்றைப் பெருக்கிடச் செய்யும் !

ஆசிக் கண்டத் தமிழா ! உந்தன்
ஆவல் தன்னை தூண்டும் வகையே
நாசிக் காற்றில் தமிழை நிரப்பும்
கம்பன் கழகக் தமிழர் விழாவே !

ஆழ்நிலைச் சிந்தையில் கம்பன் இருந்தால்
வருகிற தலைமுறை வளர்ந்திட நல்ல
சூழ்நிலை வருமே ! சுணங்குதல் வேண்டா !
வருவாய் ! தமிழைச் சுவைப்போம் களிப்போம் !

========

Wednesday, September 26, 2012

My composition : சிட்னி முருகன் துதி - A hymn on Sydney Murugan

Song : Sydney Murugan thudhi - சிட்னி முருகன் துதி 
Written, Composed and Rendered by : Murali Venkatraman



I wrote and sang the following stuti on Sydney Murugan Temple at Westmead as part of my concert "Paattum Bharathamum".

1)
பட்டினி அண்டுமோ ? பஞ்சமும் அண்டுமோ?
மட்டினி உண்டுமோ ? மண்ணுல கின்பமே !
விட்டினி போவனோ வேறிடம் நானுமே
சிட்டினி குமரனின் பொற்பதம் கண்டபின் !

Meaning :

மட்டினி = மட்டு + இனி
விட்டினி = விட்டு + இனி

Sydney Murugan Temple – The abode of Lord Murugan ! In this city where Lord Murugan resides, Will starvation dare to hit ? No !  Will famine dare to strike ?  No ! Will there be a limit to the joys of the world ? No ! Now that I have seen the golden feet of Lord Murugan, will I ever want to go to another place ? No !

2)
ஈடில் குகனே ! ஈசன் மகனே !
வீடில் ; பீடில் ; ஆசியில் புலம்பெயர்ந்
தீடும்  பலரை மாண்பாய் மேற்கு
மீடில் நின்றே மீட்கும் குமரா !

Meaning:

ஈடில் = ஈடு இல்லாத,
வீடில் = வீடு இல்லாத ,
பீடில் = பீடு (பெருமை) இல்லாத,
ஆசியில் = அவுஸ்த்ரேலியாவில்
புலம்பெயர்ந்தீடும் = immigrating, மேற்கு மீடில் = West mead ல்

Oh incomparable Lord Guha ! The son of Shiva ! Many poor people and refugees immigrate to Australia without any comforts ! They do not even have a home to stay ! From the temple at Westmead, you shower your grace and rescue them from the vagaries of life !

3)
பலமும் இன்றிப் பணமும் இன்றி
புலமும் பெயர ரணமும் தாங்கி
கலமும் ஏறிக்  கடலில் வருவோர்
நலமும் பெறவே நாடுவ துனையே !

 Meaning :
The refugees who try to immigrate by boats lack strength, money and take an arduous journey in the quest of a life  of peace and comfort in Australia. Throughout their travel they keep chanting your holy  name !

4)
ஆசிக் கண்டச் சைவர்  உந்தன்
ஆசிக் கன்றோ இரைவர் ? நீறு
பூசிக்கொள்வார் ! பூசை செய்வார் !
மாசில் முருகா ! மாயோன் மருகா !

Meaning:

Oh Lord Muruga ! Nephew of Vishnu! You are impeccable ! The Shaivaites of Australia yearn for your blessings ! They smear their foreheads with the holy ash ! They perform the holy rituals !

 

Tuesday, May 29, 2012

Poetry in Mathematics ? Euler and Bharathiyaar

Was reading the article "What Poetry Is Found in Mathematics? What Possibilities Exist for Its Translation?" ( http://www.springerlink.com/content/5u154707755313mx/ )

My attempt to translate Euler's equation in line with Bharathi's Poem :
"தனி  ஒருவனுக்கு உணவில்லையெனில்  ஜகத்தினை  அழித்திடுவோம்"
 which means : "If, even a single person goes food-less, we will destroy this world"
 
 

Thursday, April 26, 2012

கனவு கலையும் காலையில் - பாடல் வரிகள்

காலையில் கணவனும் மனைவியும் கட்டிலில் காதல் உறவாடுகின்ற நேரம் எழுவது போல் அமைந்த பாடல்.  வரிகளும் மெட்டும் தயார்.  இசைக்கோர்வை (orchestration) இன்னும் முடியவில்லை..முதலில் வரிகள் இங்கே..

பல்லவி :
========

பெ : கனவு கலையும் காலையில்
        கண்கள் திறக்க மறுக்கிறாய்
        கைகள் கோர்த்து வருடியே
        காதல் மீண்டும் கேட்கிறாய் !

Thursday, February 09, 2012

விரகம் - 4 - "கவிதைகள் வரையும் கைகளின் விரல்கள்"

An online friend Aisoorya Vijayakumar composed a song for which she requested I write lyrics.  The project has been dormant for a while and in the meanwhile I thought I could share just the lyrics I wrote.

பல்லவி
=======

கவிதைகள்  வரையும்  கைகளின்  விரல்கள்
கண்களைப்  பறித்தல்  கூடாது

காதலில்  பூக்கும்  மனமது  தனிமை  
காட்டுக்குள்  கருகல்  கூடாது

Saturday, February 12, 2011

ஓலைமேல காத்தாக - Lyrics of one of my folk compositions

பல்லவி
=======

பெ: ஓலைமேல காத்தாக – என்
உசிர வந்து ஒரசுறியே

தரிசா கெடந்த என் மனச
தளிர வச்சு பாக்குறியே

எங்கேன்னு கண்ணுதானே ஏங்குறதே (ஏங்குறதே)..
நீ முன்ன வந்து நின்னா தேங்குறதே (தேங்குறதே)..

அட பஞ்சா என் நெஞ்சு..
பறந்தோடப் பாத்தாலும்
ஒரு தீயா உன் பிம்பம்
அதை தீண்டிப் பாக்குறதே..

Saturday, January 23, 2010

விரகம் - 3

மனமேதான் உன்னன்பு மடியில் தஞ்சம்.
மரிக்காத சடலத்தில் ஆர்வப் பஞ்சம்.

கனமேதும் இல்லாத பஞ்சாய் நெஞ்சம்.
காலக்காற் றாலூசல் ஆடும் கெஞ்சும்.

தினமேநாம் கணிப்பொறியின் திரையின்மூலம்
திரைகடலும் தாண்டிமின் தொடர்புற்றாலும்

சினமேதான் வருகிறது சித்திரமே பொய் !
உயிர்ப்புள்ள நீயேமெய் சீக்கிரமே வா !

Meaning:

மனமேதான் உன்னன்பு மடியில் தஞ்சம் : My mind seeks solace on your lap

மரிக்காத சடலத்தில் ஆர்வப் பஞ்சம் : I am like a zombie..a living deadbody with no interest in life

கனமேதும் இல்லாத பஞ்சாய் : Like a weightless cotton ball

நெஞ்சம்
காலக்காற்றாலூசல் ஆடும்: my heart gets battered by the wind of time

கெஞ்சும் : and pleads for mercy.

தினமேநாம் கணிப்பொறியின் திரையின்மூலம் : On the computer screen

திரைகடலும் தாண்டிமின் தொடர்புற்றாலும் : we see and talk to each other through video chat across the pacific

சினமேதான் வருகிறது : I still get irritated because

சித்திரமே பொய் ! Your image is not you. It is unreal.

உயிர்ப்புள்ள நீயேமெய் : You,with the heartbeat, are real.

சீக்கிரமே வா ! : Come Soon
!


(The last 2 lines have been inspired from the old hindi lyrics :
jo baat tujh mein hai..teri tasveer mein nahin)



விரகம் - 2

"இல்லாளோடுன் வாழ்க்கை இன்புற்றுண்டோ ?"
இங்கனமே கேட்போர்க்கு : "அவளே இங்கு

இல்லாள்"என் றுரைக்கின்ரேன் இதழில் ஏக்கப்
புன்னகையும் புண்சுவடாய் பதிந்தே போமோ !

நல்லாளாய் ஆவணங்கள் வெகுநாள் முன்னே
நாம்வைத்தும் புலப்பெயர்ச்சி ஊழியரெல்லாம்

பொல்லாளாய் இருக்கின்றார் பொறுமை எல்லை
போயேதான் விட்டதடி புலம்பல் உச்சம்.

Meaning:

"இல்லாளோடுன் வாழ்க்கை இன்புற்றுண்டோ ?" : How is your new life after marriage ? are you happy ?

இங்கனமே கேட்போர்க்கு : To those who pose this question,

"அவளே இங்கு இல்லாள்"என் றுரைக்கின்ரேன் : I say : " She is not here with me"

இதழில் ஏக்கப் புன்னகையும் புண்சுவடாய் பதிந்தே போமோ ! Will my lips get scarred by the fleeting sad smile ?

நல்லாளாய் ஆவணங்கள் வெகுநாள் முன்னே நாம்வைத்தும் : We submitted all our documents very early. Even then,

புலப்பெயர்ச்சி ஊழியரெல்லாம் பொல்லாளாய் இருக்கின்றார் : Immigration officials are so slow and take their own sweet time

பொறுமை எல்லை போயேதான் விட்டதடி: This has gone beyond my tolerance level.

புலம்பல் உச்சம்: And I am at the pinnacle of my rantings and ramblings.

Monday, January 18, 2010

விரகம் - 1

விழியாலே வீழ்ந்தேன்பின் விரைந்தே உள்ளம்
விரியும்வரை விண்ணப்பம் இட்டேன் எந்தன்

மொழியாலே மோனங்கள் உந்தன் வாயில்
முறுவலுடன் கொணர்ந்தேனே ! முனைந்தே பெற்றோர்

பழியாதே பாங்கோடு பண்பும் வழுவா(து)
பதமாயே மணம்செய்தொம் கொடிதாம் காலச்

சுழியாலே நீஅங்கே நான் இங்கென்று
சுகமின்றி வாழுநிலை ஏனோ கண்ணே ?

விழியாலே வீழ்ந்தேன் : I fell in love looking at your eyes.

பின் விரைந்தே : Then I rushed and...

உள்ளம் விரியும்வரை விண்ணப்பம் இட்டேன் : kept requesting you till your heart opened up for me.

எந்தன் மொழியாலே : With my words,

மோனங்கள் உந்தன் வாயில் முறுவலுடன் கொணர்ந்தேனே ! : I brought a silent accepting smile on your lips (as in I pestered you and you accepted me)

முனைந்தே பெற்றோர் பழியாதே : We tried hard and got the approval of our parents

பாங்கோடு பண்பும் வழுவா(து) பதமாயே மணம்செய்தொம் : And married traditionally with all dignity

கொடிதாம் காலச் சுழியாலே: But because of the cruel kaala chakra (to translate it as circle of time would be stupid)

நீஅங்கே நான் இங்கென்று
சுகமின்றி வாழுநிலை ஏனோ கண்ணே ? : we are apart and unhappy, my dear.

Wednesday, June 10, 2009

குரு வந்தனம்

வேதாந்தம் கற்றுக் கொள்ளும் காலத்தில், என் நண்பர்களுடன் அளவளாவும்போது ஏற்பட்ட வாதங்களில் குருவைப் பற்றி எழுந்த வாதத்திற்கு நான் கொடுத்த கவி வடிவம்.

குரு என்பது ஒரு மனிதன் அல்ல. உண்மை தான் குரு என்பதே இதன் சாராம்சம்.

நண்பன் 1:
========

கருவறை
வாழும்
கரிய தெய்வமும்
மறுவுரை பகரா !
மதியிலீர் ! ஞானக்

குருவரை சென்று
குவிகரம் செய்து
திருவுரை கேட்டே
திருந்துதல் வேண்டும்

குறுகிய மனமும்
குவலயமாகும்
இறுகிய இதயம்
இளகியே போகும்

அறியா மையது
அண்டாதொழியும்
குறையா மையது
குணமென ஆகும்

நண்பன் 2:
========


குருவெனச் சொன்னால்
குறுகிய மனித
உருவினில் உண்டென
உருவகிக்காதே !


பரந்த வானம்
விரிந்த பூமி
சுரந்த நீரும்
நகர்ந்த காற்றும்

எரிந்த தீயும்
எண்திசைக்கோளும்
செரிந்த சான்றோர்
கண்டதைப் பகரும்

கண்டது எல்லாம்
விளங்கிட நீயும்
சிந்தனை செய்தே
உய்தலும் வேண்டும்

பொறிகள் மூலம்
புரிகிறதாலே
பொறியும் குருவே !
புரிதலும் குருவே!

நூலும் குருவே !
நுண்ணியம் குருவே!
நாலும் குருவே !
உண்மைதான் குருவே !

Saturday, May 09, 2009

கண்ணன் பாடல்கள் - 5 - கண்ணனின் ஏக்கம்

கண்ணன் கதைகளில் ராதையின் இடம் மிக முக்கியமானது. ராதை கண்ணனுடனே பிறந்து வளர்ந்து காதல் செய்து களிப்புடன் வாழ்ந்த மங்கை. ஆனால், கண்ணன் ஏன் ராதையை மணமுடிக்காமல் போனான் என்ற கேள்விக்கு சரியான பதில் எதிலும் இல்லை. சில கதைகளில் கண்ணன் அக்ரூரருடன் கிளம்பிப் போனபின் தொலை தூரத் தொடர்பை (long distance relationship) காக்க முடியாமல் அந்தக் காதல் தடுமாறிப் போனதாக சொல்லப் படுகிறது. ஆனால், பல கதைகளில் மற்றும் பாடல்களில் ராதைக்கு கண்ணனின் ராசலீலைகள் பிடிக்காமல் போனதற்கான பல தகவல்கள் உள்ளன. தன்னிடம் மிக்க காதல் கொண்டிருந்தாலும், பிற பெண்டிரிடம் கண்ணன் கொண்டிருந்த அன்பு காரணமாக ராதையின் மனதில் கண்ணன் மேல் மிகுந்த கோபம் இருந்ததாகத் தெரிய வருகிறது. லகான் படத்தில் கூட வரும் பாடல் “ராத கைஸே ந ஜலே” என்ற பாடல் கூட இந்த கருத்தில் எழுதப்பட்டது தான்.

ஆனால் ஒவ்வொன்றிலும் கண்ணன் செய்கைகள சிறிதே நியாயப் படுத்தி அல்லது “அதுதான் பேராண்மைக்கு அழகு” என்று ரசிப்பது போன்று எழுதப் பட்டு இருக்கிறது. அப்படி என்றால் ராதை என்ன கிள்ளுக் கீரையா ? ஏன் ? அவள் பிரிதொரு ஆடவனிடம் கூடி வந்திருந்தால் இந்த உலகம் கண்ணனைப் போற்றிய அளவு அவளைப் போற்றி இருக்குமா ? கோவலனுக்குப் பதில் கண்ணகி தவறு செய்திருந்தால் அவளை இழித்து அல்லவா தூற்றி இருக்கும் ? எனவே இது ஒரு ஆணாதிக்கக் கண்ணோட்டததிலிருந்து எழுதப் பட்ட சரிதம் அல்லவா ?

அப்படி அல்லாமல் கண்ணனை ராதா பிரிந்து வேறு ஒருவரை மணம் செய்ய காரணம் கண்ணனின் இந்த நிலையில்லாத மனமாகக் கூட இருக்கலாமே ! அப்படி இருந்தக்கால், தன்னை மதித்து தன்னுடன் மட்டுமே உறவாடும் ஒருவனை அவள் திருமணம் செய்து கொள்வதாக தான் அவளின் வாழ்க்கை அமைந்திருக்க வேண்டும். அப்படி அவள் தன்னை விட்டுச் செல்லும்போது தான் கண்ணன் அவளுடைய அருமையை உணர்ந்திருக்க வேண்டும். அப்படி உணரும்போது, அவள் மணம் ஆகி செல்லும்போது, அவன் சோகப்படுதல் போல் ஒரு பாடலைத் தான் இங்கு தந்திருக்கிறேன். இதுவும் ஆஹீர் பைரவியில் அமைந்தது தான். வரிகள் தற்போது. பாடல் பிற்போது.


பல்லவி
=======

ஒளியும் கதிரை நீங்குமோ ?
சுவாசம் நின்ற பின்னும் சடலம்
என்ன காற்றைத் தேடுமோ ?

சரணம் 1
==========

காம வேள்வியில் நானும் விட்டிலாய்
கனன்று எரிந்தாலும்

காதல் தீயது ராதை அன்றியோர்
கண்ணில் கண்டதில்லை

ஆணுக்கொர் நீதி பெண்ணுக்கொர் நீதி
இல்லை என்று சொன்னாய்

வேறு கூடல்கள் வேண்டாம் என் காதல்
ஆணை என்று சொன்னாய்

ஆணையை நான் மறந்தேன் - இந்த
ஆணையே நீ மறந்தாய்

(ஒளியும்)

சரணம் 2
==========

காற்று இன்றி குழல் இதிலே
நாதம் ஏது சொல்லடி

ஊற்று இன்றி பாலையிலே
உயிர்கள் வாழ்வதெப்படி ?

செல்பவளே உன்னிதழில்
முன்னம் நான் வைத்த ஈரம் இனிது

நீ செல்லவே என் கண்ணிலே
இன்று நீ கொணர்ந்த ஈரம் கொடிது

(ஒளியும்)



Thursday, April 30, 2009

கண்ணன் பாடல்கள் - 4 - குசேலனின் கலக்கம்

கண்ணன் பாடல்களில் கோபியருக்கு கொடுத்த முக்கியத்துவத்தை சுதாமனுக்கு கொடுக்கவில்லை. சில வருடஙளுக்கு முன் நான் நான் எழுதிய ”கொன்றை மலர் கொய்து” என்ற பாடலில் ஒருமுறை சுதாமனைப் பற்றிக் குறிப்பிட்டேன். சில நாட்களுக்கு முன்னே சுதாமனைப் பற்றி இரண்டு பாடல்கள் எழுதத் தோன்றியது.

சுதாமன் கண்ணனைக் கண்ட பின்பு அவருக்கு கிடைத்த செல்வத்தை பற்றி பல கதைகள் வந்துள்ளன. ஆனால், அங்கு செல்லும்போது அவருடைய மனநிலை எப்படி இருந்தது ? அப்படி சென்ற பின், கண்ணன் நன்கு உபசரித்து அனுப்பினான் - வெறும் கையுடனே. அப்படி மீண்டு வரும்போது அவர் மன நிலை எப்படி இருந்தது ?

இந்த இரண்டும் இரண்டு பாடல்களாக என் மனதில் வந்தன. அதிலே முதல் பாடல் சுதாமனுக்கு கண்ணன் களைப்பு தீர பாத பூஜை செய்து வரவேற்கும் நேரத்தில் சுதாமனுடைய மனதில் எழும் சில ஏக்கங்கள் , பயங்கள் பற்றி ஆகும். முக்கியமாக அவர் வாய் விட்டு எதுவும் கேட்பதில்லை. ஆனாலும் அவரது மனதில் இருக்கின்ற சில கவலைகள் பற்றிய பாடல் இது. அதை இங்கே தருகிறேன். இதனை ஆஹீர் பைரவி அல்லது சக்ரவாகத்தில் மெட்டமைத்து இருக்கிறேன். பாடல் வரிகளை இப்போது தருகிறேன். பாடலைப் பின்னர் தருகிறேன்.

====

ராகம் : சக்ரவாகம்
தாளம் : ஆதி

பல்லவி:
=======

கால்களைக் கழுவும் கண்ணா - என்
கையறு நிலை கண்டு கை கழுவாதிருப்பாய்

அனுபல்லவி
===========

காடு மலை கடந்த வலி ஒன்றும் இல்லை - நீ
காண மறுத்திருந்தால் தரையில் மீன் என் நிலை

சரணம் 1:
=======

அடுப்பிலே தீ மூட்டி வாரங்கள் ஆனது
இடுப்பிலே ஈரமாய் கந்தலும் ஆடுது
இளமையை இயலாமை கொன்று தான் போட்டது
இயல்பென வறுமையும் இம்சையாய் ஆனது

கரும் பலகை கண்டு கரிந்த உணவு என
கொடும் பசி உந்தவே குழந்தை வாய் வைக்குது

சரணம் 2:
=======

கோபுரம் தேவையில்லை
கோடிப்பொன் தேவையில்லை
மாடமும் தேவையில்லை
மனை ஏதும் தேவையில்லை
இல்லக் கிழத்தியின்
இளைத்த பிள்ளகளின்
கொல்லும் வறுமை போக
கொஞ்சம் நெல் தாராய்


===

Sunday, February 15, 2009

Beggary of the Disabled

பாலாவின் "நான் கடவுள் " படத்தில் காட்டிய பிச்சைக்காரர்களின் வாழ்க்கை மனதை விட்டு அகல மறுக்கின்றது. அதன் பிரதிபலிப்பாக இதோ எனது சிறுகவி.
(இது பாடலாக வர வாய்ப்பு உள்ளது)

=====
கால்கள் வளர்ந்தது காலளவே -மன
ஊனம் வளர்ந்தது முழு அளவே
கரமாய் சிரமாய்
திசைக்கு ஒன்றாய் தசைகள்

ஊழ்வினையோ ? பெற்றோர் வினையோ ?
இயற்கையின் ஓர வஞ்சனையோ ?

எண்சாண் உடம்பில்லை
ஒரு சாண் வயிறுண்டு
வயிறு வாழ நிதம்
உயிரைக் கரைக்கிறது

ஊனம் ஒன்று தான்
விற்கும் பொருள் இங்கு
விற்ற பின்னாலும்
விட்டுப் போகாமல்
பற்றிக் கொண்டு நிதம்
விற்கும் பொருள் இங்கு

இணையம் கணினி என
இகமோ இன்புறுது
இதயம் பணி விட்டு
இருண்டு உறங்கிடுது

சதையின் அவலமாய்
சடலமாய் வாழ்கின்ற
ஊன வறியார்கள்
உய்ய வழி என்ன ?

===================

Saturday, February 07, 2009

uDalin thiriyaalE - Tribute to Mother - My composition sung by Pradip Somasundaran

 Buy this song from Amazon or iTunes
All proceeds go to Akshayapatra !


Song : udalin thiriyaalE
Composed by : Murali Venkatraman
Lyrics : Murali Venkatraman
Singer : Pradip Somasundaran
Cover Design : Chondryma Chakrabortti


uDalin thiriyaalE - Tribute to Mother - My composition sung by Pradip Somasundaran | Music Upload




A mother's contribution toward's a child's life is immeasurable. This is a song that I wrote and composed as a tribute to my mother.

Kanakaangi is the first mELakartha or "janana" raagams. That is, it is the first among the mother ragams. It is one of my favorite ragams and I believe it epitomizes an emotional tension. My first tryst with Kanakaangi came unsurprisingly with "thom thom" of Sindhubhairavi and then followed "shree gaNanatham bhajamyaham". There are purists who feel that this raga was artificially derived when assembling the Venkatamahi scheme but one could always argue what is natural and what is artifical. To me, kanakaangi evokes a deep feeling which ragas like bhairavi and thoDi do. It may just be a personal feeling.

Every song when conceived by the composer innately comes with the image of the voice which would sing it. The composer has a construct in his mind about the song and delivery. It is the responsibility of the composer to convey the image properly to the singer. It is only some singers that grasp the mental image of the song, polish it and take it to the next level at which point the composer sits back and just enjoys his work being savored.

I can understand how Raveendran would have felt when "souparnikamritha veechikaL" was delivered by Yesudas. When I ended up listening to Pradip's version of souparnikamritha veechikaL I felt equally mesmerized that I ended up listening to it 10 times in a day. And I knew none other than Pradip can bring the required bhaavam for a soulful tribute to mom.

That he is a singer par excellence has already been nationally acclaimed through Lata Mangeshkar award. But what is more rewarding and pedagogical to a younger musician is his untiring effort towards precision.
Precision as in clinical precision and not the engineering precision. As the lyricist, I felt my lines had come to life in his absolutely soothing, expression laden voice with appropriate emphasis on the syllables.

பல்லவி
=======

உடலின் திரியாலே
உயிரின் தீயாலே
ஒளியும் கொடுத்தாயே
உனக்கிணை யார் தாயே ?

அனுபல்லவி
===========

ஆலய தெய்வமும்
தாயில்லை என்றேங்கி
கருவறை என்று தன்
வசிப்பிடம் தன்னை சொன்னதோ ?
என் தாயே - நீ
நந்தாயே என்றும்
நந்தாயே

(உடலின்)

சரணம் :
=======

பரமனைப்பார்த்தொரு நாள்
பரிகசித்தேன் - அவன்
'பதரே எதற்கிந்த
ஏளனம்?' என்றான்.

'அண்டமோ உனது உன்
ஆயுளோ நெடிது - ஆனால்
கண்டதுண்டோ நீயும்
தாயன்பின் அமுதை ?' என்றேன்

இல்லை என்றான் - தலை
நாணி நின்றான் - பரமன்
நாணி நின்றான்

(உடலின்)

For those who do not understand tamil a loose translation:
=========================================

Oh incomparable Mother !

With the body as the wick
and soul as the fire
You gave birth to light that is me.

Even the deity which resides in the temple
Felt it was lifeless since it did not have a mother
And chose to call its residence "garba gruham" (the womb or karuvaRai)
Oh my mother - Your greatness will never cease !

I bantered God the other day
He retorted : "You puny creature ? why are you mocking me ?"
I replied : "The universe is yours. You have infinite lifetime. But have you ever tasted the nectar of a mother's love ?"
He felt humbled and bowed down replying : "No"

Tuesday, June 17, 2008

Vidhata Talapuna - And an old poem of mine - The channel between the blind and mute

Song : Vidhata Talapuna
Movie: Srivennela
Singers : SPB, Susheela
Composer : K.V.Mahadevan
Lyrics : Seetarama Sastry
Performed by : Murali Venkatraman





Vidhata Talapuna - An old telugu karaoke recording | Musicians Available

I am up from the slumber with a telugu number (ooh..sounds like a telugu movie dialogue ? :-)). I have not been exactly inactive musically since composing keeps me busy. But my singing nose-dived because of severely blistered throat which persisted for almost 2 months and the after effects are still haunting me. I have just started recovering and hopefully this song will dust off my rust.


Research has kept me utterly busy that I have started hating it. (Who knows, in some years, if financial situation permits, I will ditch research for music composing.) And I have also been working on some articles on music which will probably get published in dhool and this blog simultaneously.

How would two lovers - one blind and the other mute, communicate ? This was an interesting question I had when I was in college. It inspired me to write a poem in a modern style without alliterations or rhymes. This poem got published in my college magazine.

To my consternation I learn after coming to USA that the answer that K.Vishwanath had provided was in celluloid ! The movie Sirivennela directed by K.Vishwanath featuring Sarvadaman Banerjee (Blind flautist) and Suhasini (Mute fan) went on to be preserved as an all time classic in telugu. He had chosen to portray the girl as mute and the guy as blind whereas in the poem I had chosen the opposite.


I was introduced to this song by one of my friends who had causally remarked in a conversation :"vidhata talapuna in telugu is a great song". Somehow the two words stuck on my memory. And one day, thanks to musicindiaonline.com ended up listening to this song.

As they say in tamil "uyirodu kalandhadhu" - It just dissolved in my soul and became an all time favorite in the very first listnening. IF melodies were queens, their undisuputed king would be SPB. And this is just another song that proves how soulful a song becomes in his voice.

Somehow with an irrepressible desire to sing the song in entirety I have not shared this any of my favorite lady singer friends. SPB, KVM and Susheela and you all - please pardon me.

Since the Karaoke had to be made by ripping the original mp3 and adjusted, the mixing is not that effective. To ease that, I have tried some voice overs. Hope you dont find it irritating.

Special thanks to Sudhamsu for correcting my pronunciation in the first part of the song. (We could not sit for the rest of the song. So whatever good pronuncition you hear is because of him and whatever is bad is because of me. You are welcome to point out the errors as I believe no song should be sung at the expense of its lyrics)

===============================

காற்றின் மேலுள்ள காதல் தன்னாலே
கடல்நீரும் அலைக்கைகள் நீட்டுதுவோ?
சீற்றம் தாஙகாமல் சிதறுதுவோ மட்டுளிகள் ?
சிறிதும் காணாமல் நீரும் சிலிர்த்து
மண்ணின் மனதை மிதித்து இறுக்கிடுதோ ?

வளியோடு வாரியது விளையாடுங் காலை
ஒவ்வாத நிலத்திர்கென் வேலை ?

நினைந்து நடக்கின்றேன்; நீரில் நிற்கின்றேன்;
நீரலைகள் என்பாதம் நீவிவிட நெகிழ்கின்றேன்;

மண்ணில் கோட்டைகள் மட்டின்றி கட்டிடலாம்;
மனதில் வேட்கைகள் குறைவின்றி கொண்டிடலாம்;
கண்ணில் தெரிகின்ற கனவுக ளையெல்லாம்
மெய்யாய்க் கண்டிடவும் ஆசைகள் வைத்திடலாம்;

காலமெனும் கூற்றுவனோ கண்ணின்றி கருக்கிடுவான்;
கனிகின்ற போதினிலும் கருமை படர்த்திடுவான்;

முன்னே நான்செல்ல முயலுங்கால் காண்கின்றேன்;
ஓரடியும் கால்வைக்க இயலாமல் இடறியொரு
கம்பத்தைக் கையில்கொண் டிருப்பவளைப் பார்ப்பேன்நான்
பனியில் கால்வைத்த அணில்போன்றும் பதைக்கின்றேன்
எழுலுருவாய் என்முன்னே நிற்கின்ற என்பெண்ணே !
எங்கே தொலைத்திடாய் உந்தன் பார்வயினை ?

ஒளியோடு வாழுங்கால் ஒருநூறு நண்பர்கள்
உனைசுற்றி வாழ்ந்தாரே ஒருவருமே இன்றில்லை!
களியொடும் கவினோடும் வாழ்ந்திட்ட நாளுன்மேல்
காதல் செய்தேனே!காணாதி ருந்தாயே!

இன்றோ அன்பனென யார்வந்தும் காணாது
இருக்கின்ற நிலையினிலே நின்றாயே - நின்னைக்

கண்ணின்றிக் காணத்தான் காலமெனை விட்டதா ?
வலியில்லை என்நெஞ்சில் வன்துயரம் தாங்கிடவும்.

சிலையாய் நிற்கின்றேன் சிந்தை கலங்கிபோய்!
சிறிதே அண்டிட்டு மேனில்யிலே சிதறுகிறாய்!
கைதொட்டு உனைத்தூக்கி நிறுத்திடவும் செய்திட்டால் - என்
கரம்கொண்ட வளையத்தால் கணத்திலெனை உணர்கின்றாய்!

"நீங்களா.. ?

முன்னம் வாழ்வினிலே சுற்றம்பல விருந்தார்
இன்னம் விழியின்றி இருக்குங்கால் - ஒரு
கழியே - எனக்கு
விழியே - மற்றும்
வழியே

உம்மனதை வெந்திட்டேன் முன்வாழ்விலானாலோ
தம்மனதைத் "தந்திட்டேன்" எனச்சொல்லி எனையேற்பார்
தாரணியில் இலர்போலும்!உளரோ ? சொல்வீர்நீர்!"

கண்ணே!

கடலின் மேற்புறத்தே அலைகள் உண்டென்றும்
ஆழ்புரத்து இல்லை இதுண்மை;மண்ணில்
மேலொன்றும் கீழ்ழோன்றும் (இ)ரண்டென்று இல்லையடி
என்றென்றும் ஓர்நிலையே தான்!

"வாழ்வு இருந்தக்கால் அன்பை நினைந்ததிலை
ஊழின் பயினிங்கு வாட்டுங்கால் உணர்கின்றேன்
ஏற்பீரோ என்னைநீர் இந்நிலையில்"என்றழுது
நிற்கின்றாள் !நினைவேன் நான்!

நின்னை அடைந்திடவே என்னதவம் செய்திருப்பேன் ?

காமத்த்தால் அன்றிக் காதலினால் மட்டும்
கருத்து ஒருமித்த வாழ்வும் தண்திடுவேன்! - ஆனால்

"இயம்புவதும் இயலாதே தோழி !
என் நாக்கினிலே வாக்கில்லை இன்று"

விழியைத் தொலைத்திட்டு வீதியில் நீ வந்தாய்
மொழியைத் தொலைத்திட்டு முன்னேனான் உள்ளேன்

ஏ வாணி !
என்னருகே வா நீ!

கண்மணி தன்னிடம் காதல் சொல்லிட்டே
கட்டாயம் தருகின்றேன் உன்னிடமே !

ஏ வாணி !
என்னருகே வா நீ!
=========================================

Friday, October 26, 2007

இலக்கிய Rap

1990 இல் எழுதிய ஒரு இலக்கிய Rap
=================================

கலையினிலேயொரு கலைமயிலே-யவள்
இடையினிலேவரு ஜதிகளிலே
மனதினிலிடையினில் மயங்கிடுமிதயமும்
மருகிடுதேசெய லிழக்கிறதே

தலையினிலேயொரு பூவுடனே-யவள்
வருகையிலேகண் படுகையிலே
தறிகெட்டு நெறிகெட்டு அலைகிறமனமதும்
குவிகிறதேதலை கவிழ்கிறதே

மலையினிலேவரு நதிகளைப்போன்றவள்
குழலினையேபிறர் பார்க்கையிலே
உலையினிலேசுடும் நீரினைப்போலுளம்
வெடிக்கிறதேமிகக் கொதிக்கிறதே

வலையினில்சிக்கிடு மீனினைப்போல்-தினம்
தவிக்கிறதேநிதம் துடிக்கிறதே
வஞ்சியின்நெஞ்சினில் தஞ்சம்புகுந்திட
விழைகிறதேதின முருகிடுதே

ஆறு

1993 இல் DAV 'இல் படிக்கும்போது எழுதிய ஒரு கவிதை.


ஆறு
====

மலைமுகட்டில் உதிக்கின்ற கதிரவன் தன்னை
மடந்தைபோல் தொடர்கின்ற பேராறே நீர்
அலைவீசிக் களிக்கின்ற கடலொடு நீயும்
அத்தமிக்கும் வேளையிலே சங்கமிக்கின்றாய்!
வலைவீசிக் கயற்செல்வம் தன்னை அள்ளும்
மீனவர்தம் வாழ்வினிலே இன்பம் தந்தே
நிலைமாறிப் போகாமல் நாளும் ஒற்றைப்
பயணம்தான் செய்கின்றாய் சோர்வே இன்றி!




கருக்கின்ற வானமதில் திரியும் பறவை
கவினோடு காட்சிதரும் கானப் பறவை
பருக்கின்ற தேய்கின்ற நிலவை நோக்கி
பாட்டென்றும் பாடிச்செல்லும் பறவை மற்றும்
இருக்கின்ற உலகுதனை விட்டே இன்ப
உலகுக்குச் செல்லுமுல் லாசப் பறவை
பெருக்கெடுத்துச் செல்லுகின்ற பேராறேநீ
பெருமையுடன் இவை பார்த்துச் செல்லுகின்றாய்





காற்றேதான் கார்முகிலின் தாளத்திற்கு
கருநீல வண்டோடு கானம் பாட
நாற்றேதான் அப்பாட்டின் தாளத்திற்கு
நாற்புறமும் சாய்ந்தேஓர் நடனம் ஆட
சேற்றில்தான் வீற்றிருசெந் தாமரையாளோ
செம்மைசேர் முகமலர்ந்து விரிந்து நோக்க
தோற்றேதான் போகுமடீ தேவர் சபையின்
ஏற்றமிகு புகழ்வனப்பும் எழிலும் இங்கே!




சிரிக்கின்ற சிறுமலர்தம் மூடே மெல்லச்
சிந்திவரும் பகலவனின் ஒளியேஉன் மேல்
தெறிக்கின்ற நற்காட்சி கண்ணைக் கொள்ளும்
கவிஞனவன் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்
விரைகின்ற வேளையிலே வீரம் காட்டும்
கற்களினைப் புறம்சாய்த்து சென்றாலும் நீ
மரிக்கின்ற மலருக்கு வாழ்வும் தருவாய்
மனதுனது என்னென்று அறிவார் யாரோ ?


Friday, September 16, 2005

கண்ணன் பாடல்கள் - 2 - வேண்டினேன் உனை வேண்டினேன்

கண்ணன் பாடல்களில் குழந்தை கண்ணன் பல ஆயர் குலத் தாய்மாரை வசீகரித்து இருப்பதாக சொல்லப் படுகிறது. முக்கால்வாசி பாடல்களில் அவன் வந்து வெண்ணையை திருடி உண்டான், அதை நான் கண்டும் காணமல் விட்டு விட்டேன் என்று சொல்வது போல் அமைந்து இருக்கும். என் மனதில் ஒரு சிறிய கற்பனை.

ஒரு ஆயர் குலத் தாய், தன் பிள்ளைகள் தாயமுது உண்ணாமல் சண்டித்தனம் செய்வதை நினைத்து வருத்தப் பட்டுக்கொண்டு இருக்கிறாள். அப்போது கண்ணன் தவழ்ந்து அங்கே வர அவளது தாய்மை பீறிட்டு எழுகின்றது. அதன் விளைவாக அவளிடம் பால் சுரக்கின்றது. குழந்தை கண்ணன் அதனை கண்டு வந்து பருகுகின்றான். இக்காட்சியைக் கண்டு அத்தாயின் பிள்ளைகளும் ஓடி வந்து பால் அருந்துகின்றன. இதை கண்டு அவள் மிகவும் ஆனந்தப் படுகிறாள்.

உண்ட பின்னே அக்குழந்தைகள் கண்ணனோடு அவள் உடல் மீதேறி விளையாடும் போது கடைவாய் நீர் வடிகின்றது. அதனை காணும் அந்தத் தாய் மனம் மிக மகிழ்ந்து "தாய்மையின் இன்பங்கள் தான் என்னே! அதனை கண்ணன் மூலமாக இன்று முழுவதும் அடைந்தேன். யசோதா, இப்படிப்பட்ட கண்ணனை சில நேரம் தினமும் எனக்குக் கடனாகத் தருவாய" என்று கேட்கிறாள்.

இந்தப் பாடலை ஆபோகி ராகத்தில் மெட்டமைத்தும் இருக்கிறேன். அதனைப் பின்னர் தருகிறேன்.

பல்லவி:
========

வேண்டினேன் உனை வேண்டினேன் - தினம்
கண்ணனை சில நேரம் கடனாகத் தா - யசோதா

சரணம் 1:
===========

நீ அறியாமல் அவன் என் வாயிலில்
கொலுசுகள் குலுங்க தவழ்ந்து வந்தான்
நான் அறியாமல் என் தாய்மையும் கிளர்ந்து
பாலினைப் பொழிய பருகி நின்றான்

எந்தனின் பிள்ளைகள் அவன் செயல் பார்த்து
வந்தன தங்கள் வன்பசி போக்க

கண்ணனால் அவரும் உண்டு மயங்கிட -என்
கண்ணிலே ஒர்குளம் ததும்பி வழிந்தது

சண்டியப் பிள்ளைகளும் சமர்த்தென ஆனது

சரணம் 2:
===========

பிள்ளைகள் எல்லாம் உண்ட பின்னெ - என்
உடல்மீதேறி அமர்ந்தனவே
கண்ணனும் மெல்ல ஏறி நின்றான் -தன்
பிஞ்சு பதங்கள் வைத்து நின்றான்

எந்தனின் பிள்ளைகள் அவன் செயல் பார்த்து
நின்றன தாமும் தன் பதத்தாலே

கண்ணனும் பிள்ளையும் கால் கொண்டு உதைத்திட
கடைவாய் அமுத நீர் கசிந்து விழுந்திட

தாய்மையின் சிகரங்கள் நான் கண்டேன்