காலையில் கணவனும் மனைவியும் கட்டிலில் காதல் உறவாடுகின்ற நேரம் எழுவது
போல் அமைந்த பாடல். வரிகளும் மெட்டும் தயார். இசைக்கோர்வை
(orchestration) இன்னும் முடியவில்லை..முதலில் வரிகள் இங்கே..
பல்லவி :
========
பெ : கனவு கலையும் காலையில்
கண்கள் திறக்க மறுக்கிறாய்
கைகள் கோர்த்து வருடியே
காதல் மீண்டும் கேட்கிறாய் !
மனமே மார்கமா ?
முழுதும் தாபமா ? - விழி
திறக்கும் நேரம் வீம்பாய் - எனை
திணறச் செய்கிறாய் !
ஆ: கனவு கலையும் காலையில்
கவிதை போலப் பேசுவாய்
இலவம் பஞ்சின் மென்மையாய்
இதயப் பூவை திறக்கிறாய் !
அழகே ! ஆறுமா ?
சுகங்கள் ! போதுமா ? - விழி
திறக்கும் நேரம் கூட - எனை
கிறங்கச் செய்கிறாய் !
சரணம் 1 :
==========
ஆ: உதய நேரம் வானிலே
உலவ வந்த சூரியன்
கலவி பழக நிலவைத் தேடி
கனலை உமிழ்கிறான்
பெ : இதயக் கூட்டின் சூட்டிலே
இன்பத் தீயின் வேள்விகள்
இரவு முழுதும் வளர்த்தும் இன்னும்
வேண்டும் என்கிறாய் !
ஆ: காதல் தீயின் நாளங்கள்
கடலின் அளவு ஆசைகள்
கடலைப் பருக முயன்று தோற்ற
கதிரின் வேதனை !
சரணம் 2 :
==========
ஆ: சுவாசக்காற்றின் ஊதலில்
உடல்கள் கணப்பு ஆனது
அதர மதுரம் கடைவதில்
உதிரம் சிறிது உதித்தது
பெ : உவகை ஊற்றில் என்னுடல்
உருகி வழியும் கணமதில்
வலிகள் மறந்து போனதே
வழிகள் இன்ப வானுக்கே !
ஆ: மனக்கடலின் மேற்புறம்
மகிழ்வலைகளின் தாக்கமே !
உடல்கள் நனைய உயிர்கள் கரைய
உதய இரவிது !
பல்லவி :
========
பெ : கனவு கலையும் காலையில்
கண்கள் திறக்க மறுக்கிறாய்
கைகள் கோர்த்து வருடியே
காதல் மீண்டும் கேட்கிறாய் !
மனமே மார்கமா ?
முழுதும் தாபமா ? - விழி
திறக்கும் நேரம் வீம்பாய் - எனை
திணறச் செய்கிறாய் !
ஆ: கனவு கலையும் காலையில்
கவிதை போலப் பேசுவாய்
இலவம் பஞ்சின் மென்மையாய்
இதயப் பூவை திறக்கிறாய் !
அழகே ! ஆறுமா ?
சுகங்கள் ! போதுமா ? - விழி
திறக்கும் நேரம் கூட - எனை
கிறங்கச் செய்கிறாய் !
சரணம் 1 :
==========
ஆ: உதய நேரம் வானிலே
உலவ வந்த சூரியன்
கலவி பழக நிலவைத் தேடி
கனலை உமிழ்கிறான்
பெ : இதயக் கூட்டின் சூட்டிலே
இன்பத் தீயின் வேள்விகள்
இரவு முழுதும் வளர்த்தும் இன்னும்
வேண்டும் என்கிறாய் !
ஆ: காதல் தீயின் நாளங்கள்
கடலின் அளவு ஆசைகள்
கடலைப் பருக முயன்று தோற்ற
கதிரின் வேதனை !
சரணம் 2 :
==========
ஆ: சுவாசக்காற்றின் ஊதலில்
உடல்கள் கணப்பு ஆனது
அதர மதுரம் கடைவதில்
உதிரம் சிறிது உதித்தது
பெ : உவகை ஊற்றில் என்னுடல்
உருகி வழியும் கணமதில்
வலிகள் மறந்து போனதே
வழிகள் இன்ப வானுக்கே !
ஆ: மனக்கடலின் மேற்புறம்
மகிழ்வலைகளின் தாக்கமே !
உடல்கள் நனைய உயிர்கள் கரைய
உதய இரவிது !
No comments:
Post a Comment