Introduction and Announcements

  
New Original ! 
Aankhon ko - आँखों को

Older Compositions : Haule SeUdalin Thiriyaale , Choolena
Available in iTunes and Amazon !!

Learn Indian Classical Dance in Riyadh   !!

Showing posts with label கண்ணன் பாடல்கள். Show all posts
Showing posts with label கண்ணன் பாடல்கள். Show all posts

Thursday, August 25, 2016

My composition : Akhiya Tarsa- Meera Bhajan - Raag Hansvinodini

Song : Akhiya Tarasa
Raag : Hansvinodini / Hamsavinodni
Composed and Sung by : Murali Venkatraman


On this day of Gokulashtami, I thought I could share this composition of mine in the rare raga hamsavinodini. Given the paucity of time to record with elaborate arrangements, I am presenting only a simple rendition captured on a cell-phone backed up by shruti-box. Someday one my lady-singer friends may embrace the song and deliver it much more smoothly :)
Please let me know how you like it.

Lyrics:
अखयाँ तरसा दरसण प्यासी
अखयाँ तरसा दरसण प्यासी।।टेक।।
मग जोवाँ दिण बीताँ सजणी, णैण पड्या दुखरासी।
डारा बेठ्या कोयल बोल्या, बोल सुण्या री गासी।
कड़वा बोल लोक जग बोल्या करस्याँ म्हारी हांसी।
मीरां हरि रे हाथ दिकाणी जणम जणम री दासी।।
(तरसा=तरस रही है, दुखरासी=दुःखों का ढेर,
अत्यधिक दुःख, डारा=डाली, गासी=दुःख से भरा हुआ)

Sunday, May 29, 2016

கண்ணன் பாடல்கள் - 6 - கொன்றை மலர் கொய்து

Song: Kondrai Malar Koythu - கொன்றை மலர் கொய்து
Composition, Lyrics, Orchestration and Vocals: Murali Venkatraman
Raagam :  Madhyamavati
Mixing : Swamy Kitcha

கண்ணன் பாடல்களில் பல உணர்ச்சிநிலைகள் உண்டு.  தோழனாய், தந்தையாய், மகனாய், காதலனாய் பலரும் கண்ணனைப் போற்றியதுண்டு.  இந்தப் பாடல் தன்னிடம் கருணை காட்டாத கண்ணனால் ஒரு மனம் நொந்த  பக்தனின் புலம்பலாக இங்கே தந்திருக்கிறேன்.  இந்தப் பாடலை எழுதி மெட்டமைத்து கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு மேலாகி விட்டன.  இப்போதுதான் இசைக்கோர்வையுடன் பாட ஒரு வாய்ப்பு கிட்டி இங்கே பகிர்ந்துள்ளேன். இதை முறைமையுடன் தன் நேரத்தைச் செலவழித்து சரியான இசைக்கலைவையாக்கிய திரு சுவாமி கிச்சாவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

பெரும் செல்வந்தர்களை அழகிய கொன்றைப் பூவோடும்,  எளிய பக்தனைத் துளசி இலையோடும் ஒப்பிட்டு எழுதி இருக்கிறேன்.

===


கொன்றை மலர் கொய்து உன்முன்னிலே
கொட்டிக் குவிக்கின்ற பலர் தம்மிலே
ஒற்றைத் துளசியிலை போலுன்னடி
ஒற்றி நடக்கின்ற எனைப் பாரய்யா

அன்று சுதாமனுக்கு வாழ்வளித்த மாலவா
இன்று இவ்வதமனுக்கு அருள் செய்ய வா
நீ வரவில்லையேல் அருள் தரவில்லையேல்
உனை வரும்படியே தாயை உலுக்கிடுவேன்
உன்னைப் போல் அல்லாது அவள் கருணை வடிவம்

சிந்தும் கண்ணீர்த்துளி சாகரமானதே
கொஞ்சி கெஞ்சி விம்மி நொந்தேன்
கல்போன்று நிற்பவனே கரைவாய் மனம்
கைலாய நாதன்போல் தருவாய் வரம்
அடேய் ! உன்னை நான் வேண்டி
கூன் தாங்கி வலி வந்ததே !
உன்னாலே ஓரின்பம் மண்மீதில் நான் கண்டே
நாளானது என்ன சோதனை ?!


Sunday, April 17, 2016

Pachchaimaa Malai - பச்சைமா மலைபோல் - A rearrangement

Song : Pachchaimaa Malai - பச்சைமா மலைபோல்
Composer : K. V. Mahadevan
Rearrangement and Singing : Murali Venkatraman

This song is a beautiful composition rendered by Shri.  T.M Sounderarajan under the music direction for Shri. K.V. Mahadevan.  I took the liberty to rearrange the song and has sung it my way.



Wednesday, September 26, 2012

My composition : ஏனடா கண்ணா ஏனடா - Enadaa kaNNA Enadaa - rendered at Sydney Murugan Temple

 Song : ஏனடா கண்ணா ஏனடா - Enadaa kaNNA Enadaa
Composed, Written and Sung by : Murali Venkatraman

Veena : Lakshmi Narendra
Ghatam : Jeiram Jegatheesan
Tabla : Stephan Kantharaja  
Venue : Sydney Murugan Temple




In English for those who are unable to read tamil:

A poor peasant sees baby Krishna sleeping under the hood of the venemous serpent Adi Sesha.  The peasant gets concerned that the venom may affect Krishna  by making him dark, hot and thirsty.  He wonders if Krishna, after giving away all his wealth is unable to buy a bed for himself.  With kindness he offers Krishna :" Oh Krishna ! Come to me ! I will make yuo a bed of flowers and cotton".  (Here I have used the reference to Sudhama which is  poetic license since Krishna donates wealth to Sudhama, not as a baby, but as an adult).  When I composed this song, I had the image of Shri. PithukuLi murugadas singing to baby Krishna in mind.

 

ஒரு ஏழைக் குடியானவன் (விவசாயி) குழந்தை கண்ணன் பாம்புப் படுக்கையில் படுத்திருப்பதைப் பார்க்கிறான்.  அவன் மனம் பதறுகிறது.

"அடடா..குழந்தை கண்ணன் இப்படி பாம்பின் படத்துக்கடியில் படுத்துக் கொண்டு இருக்கிறானே ! அந்த பிஞ்சு உடம்பு அந்த நெஞ்சின் சூட்டை எப்படித் தாங்கும் ?" என்று எண்ணுகிறான். 

"ஒரு வேளை கையில் இருக்கும் பணத்தை எல்லாம் நண்பனுக்கு தானம் கொடுத்துவிட்டானே ! அதனால் கையில் மெத்தை வாங்கப் பணம் இல்லாமல் பாம்புப் படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கிறானோ ?" என்று எண்ணி:

"கண்ணா ..ஏனப்பா இந்தப் பாம்புப் படுக்கை ?  என்னிடம் வா..நான் பஞ்சும் பூவும் வைத்த மெத்தையைத் தருகிறேன்" என்று அன்போடு அழைப்பதாக இந்தப் பாடலை அமைத்து இருக்கிறேன்.  (இங்கே சுதாமனுக்கு தானம் கொடுத்தது என்பது மிகுதியாகச் சேர்க்கப்பட்ட விஷயம். ஏனெனில், கண்ணன் குழந்தையாக அல்ல, நாடாளும் மன்னனாக ஒரு முழு ஆண் மகனாக வளர்ந்த பின் தான் சுதாமனுக்கு தானம் செய்கிறான்.)



இந்தப் பாடலை இயற்றும்போது திரு பித்துக்குளி முருகதாஸ் அவர்கள் குழந்தைக் கண்ணனை நோக்கிப் பாடுவதாக நான் மனதில் உருவகப் படுத்திக் கொண்டேன்.  நீங்களும் செய்து பாருங்களேன் !


பல்லவி:
========

ஏனடா கண்ணா ஏனடா ஒரு மெத்தை கிடைக்கலியா ?
ஒரு பாம்புமே உன் படுக்கையா ஒரு மெத்தை கிடைக்கலியா ?

அனுபல்லவி:
=============

பஞ்சுமே நல்ல பூவுமே உள்ள மெத்தையை நான் தரவா ?
நஞ்சினைக் கக்கும் நாகத்தை நீயும் விட்டு வர வேண்டுமே !

சரணம் 1:

========

நாகத்தின் கீழே தூங்கியே நெஞ்சில் மேனி கருத்ததடா ! - சூட்டில்
தாகமும் வரும் தேவையா இது விட்டு வர வேண்டுமே !

சரணம் 2:
========

கையிலே பணம் இல்லையா எல்லாம் தானம் கொடுத்து விட்டாய் ! - நண்பனுக்கு
தானம் கொடுத்து விட்டாய்- சுதாமனுக்கு
தானம் கொடுத்து விட்டாய் - பணம்
இல்லையேல் ஒரு மெத்தை நான் தர வந்து உறங்கிடடா !

Friday, August 19, 2011

வார்த்தையின்றி ஏது கண்ணா - A teaser

Song : வார்த்தையின்றி ஏது கண்ணா - vaarththaiyindri Edhu kaNNa 
Singers : Bhavadhaarini Anantharaman  
Lyrics : Murali Venkatraman

Composed By : Murali Venkatraman , Vijay Rajagopalan
Orchestrated by : Keyboardvijai


A teaser of a joint composition by me and Vijay Rajagopalan sung by Bhavadhaarini in the ragam Gowri Manohari.  Theme : Meera-Krishna



Saturday, September 26, 2009

Celebrating Shankarabharanam - 2 - Maanasa Sancharare

(pic courtesy : Sulekha.com)


Song : Maanasa Sancharare
Composer / Lyricist
: Sadashiva Brahmendra

Originally sung by
: Vani Jeyaram, S. P. Balasubramaniyam
Orignally Arranged By : K. V. Mahadevan
Movie : shankaraBharaNam

Singers
: Meera Manohar,
Murali Venkatraman
Karaoke/ Arrangement : Murali Venkatraman
Mixing
: Meera Manohar



Celebrating Shankarabharanam - 2 - Maanasa Sancharare with Meera Manohar | Upload Music



"Have you read all these books ?!"

My mother exclaimed innocently looking at the many cartons of books I have ranging from highly technical ones which ran for thousand pages or more to ones which were pocket-sized that captured popular science in an interesting way.
I was stunned for a moment since I did not know how to answer. I took a look at my big collection and responded:

"No amma. I hope I will read them some day"


She got busy with kitchen work and had forgotten the conversation. For her it was just a curiosity as to how much her son could study.

But the question reverberated in my mind. Why do I have so many books some of which I may never be reading ? For example, I have books on mathematical logic,topology etc but given my time constraints, I wonder if I will ever get to read them. It led me to an important decision - "No more books until absolutely necessary". My mother's simple innocence-laden question pushed me to rethink about my attitude towards buying books.


While talking about the life of the poet-philosopher-composer Sadashiva Brahmendra one cannot but admire how a simple instruction from his mother-in-law transformed his life from one of a possible ordinary family man into someone who moved freely like a gypsy and composed beautiful songs with deep philosophical thought. It may be a folklore, that his mother-in-law's words "Don't come inside the house" on the night of his marriage consummation, made him rethink about his real pursuits in life. However, consider another related question : "What is the purpose of life if there is one at all ?". This seemingly simple question has been addressed for centuries and people are still trying to find an answer. With brahmendra, the simple instruction/question did have a deep impact on the man who finally came to the public domain and we were blessed with an exceptional poet.
Thus seemingly simple innocent questions/instructions may bring about some dramatic irreversible transformations.

Read more about Sadasiva Brahmendra here :

1. http://www.hinduonnet.com/fr/2003/05/02/stories/2003050201370400.htm
2. http://ssubbanna.sulekha.com/blog/post/2007/08/sadashiva-brahmendra-the-avadhuta.htm

To quote my mentor Dr. Bosco Emmanuel:

"Pioneers of science always asked and addressed simple questions. How did D. J. Thouless arrive at the branching in the theory of percolation ? He just asked a simple question. What will be the conductivity of carbon if I randomly punched a few holes in it ? He took a carbon sheet and punched a few random holes in it, measured the conductivity and plotted a graph of the conductivity versus available area. He finally ended up being an exponent in percolation theory
"

In this beautiful song which is set in the ragam shyama, which is a cousin of shuddha saaveri and aarabhi, Sadashiva expounds beautiful descriptions of a divine being (krishna) when he himself is in a state of trance. He instructs the mind to roam in the field of universal consciousness (the Brahman) aided sweetly by the music.


In the movie, this comes as a lullaby that the sishya sings for the guru. The director K. Vishwanath had tastefully used a break in the song in the guise of sishya forgetting the lyrics. This invariably invites the voice of guru (SPB) and an uninfringing melody which gently rocks the listener is born. In our version, I have expanded the song a little more to allow more room for the male singer to savor.

And this I believe is one of Meera's best renditions in which her gamakam laden voice has captured the soul of the song.

Lyrics:
====


maanasa sanchararE
brahmaNi maanasa sanchararE

madasikhi pinchaalankruta chikurE

mahaneeya kapOlajita mukurE


shri ramaNeekucha durga vihaari

sEvakajana mandira mandaarE

paramahamsamukha chandra chakOrE

pari poorita muraLeeravadhaarE


(courtesy : http://www.telugulyrics.net/Sankarabharanam-Movie-Lyrics/Manasa-Sancharare-Song-Lyrics/)


Meaning:

======


Oh, Mind ! Undertake your pilgrimage in the Brahmam !


The locks of Brahman, is adorned with the plumes of an exhilarated peacock (mada sikhi)!
The cheeks of the Supreme One outwit the brightness of a mirror !

He sports around in the fort of the breast-hillocks of Mahalakshmi (Sri). For his devotees, He is a Kalpavriksha in the court yard (mandira Mandaare)
Supreme ascetics (paramahamsa) delight in that face-moon (mukha chandraa) as a partridge bird (chakore - with obvious reference to the chakora bird that thirsts for moonlight) Oh, Mind! May your pilgrimage be complete in this Brahman that fills everything with the flow of the music from His flute(murali) ! !
(courtesy : http://www.ecse.rpi.edu/homepages/shivkuma/music/manasasancharare.htm )

Saturday, May 09, 2009

கண்ணன் பாடல்கள் - 5 - கண்ணனின் ஏக்கம்

கண்ணன் கதைகளில் ராதையின் இடம் மிக முக்கியமானது. ராதை கண்ணனுடனே பிறந்து வளர்ந்து காதல் செய்து களிப்புடன் வாழ்ந்த மங்கை. ஆனால், கண்ணன் ஏன் ராதையை மணமுடிக்காமல் போனான் என்ற கேள்விக்கு சரியான பதில் எதிலும் இல்லை. சில கதைகளில் கண்ணன் அக்ரூரருடன் கிளம்பிப் போனபின் தொலை தூரத் தொடர்பை (long distance relationship) காக்க முடியாமல் அந்தக் காதல் தடுமாறிப் போனதாக சொல்லப் படுகிறது. ஆனால், பல கதைகளில் மற்றும் பாடல்களில் ராதைக்கு கண்ணனின் ராசலீலைகள் பிடிக்காமல் போனதற்கான பல தகவல்கள் உள்ளன. தன்னிடம் மிக்க காதல் கொண்டிருந்தாலும், பிற பெண்டிரிடம் கண்ணன் கொண்டிருந்த அன்பு காரணமாக ராதையின் மனதில் கண்ணன் மேல் மிகுந்த கோபம் இருந்ததாகத் தெரிய வருகிறது. லகான் படத்தில் கூட வரும் பாடல் “ராத கைஸே ந ஜலே” என்ற பாடல் கூட இந்த கருத்தில் எழுதப்பட்டது தான்.

ஆனால் ஒவ்வொன்றிலும் கண்ணன் செய்கைகள சிறிதே நியாயப் படுத்தி அல்லது “அதுதான் பேராண்மைக்கு அழகு” என்று ரசிப்பது போன்று எழுதப் பட்டு இருக்கிறது. அப்படி என்றால் ராதை என்ன கிள்ளுக் கீரையா ? ஏன் ? அவள் பிரிதொரு ஆடவனிடம் கூடி வந்திருந்தால் இந்த உலகம் கண்ணனைப் போற்றிய அளவு அவளைப் போற்றி இருக்குமா ? கோவலனுக்குப் பதில் கண்ணகி தவறு செய்திருந்தால் அவளை இழித்து அல்லவா தூற்றி இருக்கும் ? எனவே இது ஒரு ஆணாதிக்கக் கண்ணோட்டததிலிருந்து எழுதப் பட்ட சரிதம் அல்லவா ?

அப்படி அல்லாமல் கண்ணனை ராதா பிரிந்து வேறு ஒருவரை மணம் செய்ய காரணம் கண்ணனின் இந்த நிலையில்லாத மனமாகக் கூட இருக்கலாமே ! அப்படி இருந்தக்கால், தன்னை மதித்து தன்னுடன் மட்டுமே உறவாடும் ஒருவனை அவள் திருமணம் செய்து கொள்வதாக தான் அவளின் வாழ்க்கை அமைந்திருக்க வேண்டும். அப்படி அவள் தன்னை விட்டுச் செல்லும்போது தான் கண்ணன் அவளுடைய அருமையை உணர்ந்திருக்க வேண்டும். அப்படி உணரும்போது, அவள் மணம் ஆகி செல்லும்போது, அவன் சோகப்படுதல் போல் ஒரு பாடலைத் தான் இங்கு தந்திருக்கிறேன். இதுவும் ஆஹீர் பைரவியில் அமைந்தது தான். வரிகள் தற்போது. பாடல் பிற்போது.


பல்லவி
=======

ஒளியும் கதிரை நீங்குமோ ?
சுவாசம் நின்ற பின்னும் சடலம்
என்ன காற்றைத் தேடுமோ ?

சரணம் 1
==========

காம வேள்வியில் நானும் விட்டிலாய்
கனன்று எரிந்தாலும்

காதல் தீயது ராதை அன்றியோர்
கண்ணில் கண்டதில்லை

ஆணுக்கொர் நீதி பெண்ணுக்கொர் நீதி
இல்லை என்று சொன்னாய்

வேறு கூடல்கள் வேண்டாம் என் காதல்
ஆணை என்று சொன்னாய்

ஆணையை நான் மறந்தேன் - இந்த
ஆணையே நீ மறந்தாய்

(ஒளியும்)

சரணம் 2
==========

காற்று இன்றி குழல் இதிலே
நாதம் ஏது சொல்லடி

ஊற்று இன்றி பாலையிலே
உயிர்கள் வாழ்வதெப்படி ?

செல்பவளே உன்னிதழில்
முன்னம் நான் வைத்த ஈரம் இனிது

நீ செல்லவே என் கண்ணிலே
இன்று நீ கொணர்ந்த ஈரம் கொடிது

(ஒளியும்)



Thursday, April 30, 2009

கண்ணன் பாடல்கள் - 4 - குசேலனின் கலக்கம்

கண்ணன் பாடல்களில் கோபியருக்கு கொடுத்த முக்கியத்துவத்தை சுதாமனுக்கு கொடுக்கவில்லை. சில வருடஙளுக்கு முன் நான் நான் எழுதிய ”கொன்றை மலர் கொய்து” என்ற பாடலில் ஒருமுறை சுதாமனைப் பற்றிக் குறிப்பிட்டேன். சில நாட்களுக்கு முன்னே சுதாமனைப் பற்றி இரண்டு பாடல்கள் எழுதத் தோன்றியது.

சுதாமன் கண்ணனைக் கண்ட பின்பு அவருக்கு கிடைத்த செல்வத்தை பற்றி பல கதைகள் வந்துள்ளன. ஆனால், அங்கு செல்லும்போது அவருடைய மனநிலை எப்படி இருந்தது ? அப்படி சென்ற பின், கண்ணன் நன்கு உபசரித்து அனுப்பினான் - வெறும் கையுடனே. அப்படி மீண்டு வரும்போது அவர் மன நிலை எப்படி இருந்தது ?

இந்த இரண்டும் இரண்டு பாடல்களாக என் மனதில் வந்தன. அதிலே முதல் பாடல் சுதாமனுக்கு கண்ணன் களைப்பு தீர பாத பூஜை செய்து வரவேற்கும் நேரத்தில் சுதாமனுடைய மனதில் எழும் சில ஏக்கங்கள் , பயங்கள் பற்றி ஆகும். முக்கியமாக அவர் வாய் விட்டு எதுவும் கேட்பதில்லை. ஆனாலும் அவரது மனதில் இருக்கின்ற சில கவலைகள் பற்றிய பாடல் இது. அதை இங்கே தருகிறேன். இதனை ஆஹீர் பைரவி அல்லது சக்ரவாகத்தில் மெட்டமைத்து இருக்கிறேன். பாடல் வரிகளை இப்போது தருகிறேன். பாடலைப் பின்னர் தருகிறேன்.

====

ராகம் : சக்ரவாகம்
தாளம் : ஆதி

பல்லவி:
=======

கால்களைக் கழுவும் கண்ணா - என்
கையறு நிலை கண்டு கை கழுவாதிருப்பாய்

அனுபல்லவி
===========

காடு மலை கடந்த வலி ஒன்றும் இல்லை - நீ
காண மறுத்திருந்தால் தரையில் மீன் என் நிலை

சரணம் 1:
=======

அடுப்பிலே தீ மூட்டி வாரங்கள் ஆனது
இடுப்பிலே ஈரமாய் கந்தலும் ஆடுது
இளமையை இயலாமை கொன்று தான் போட்டது
இயல்பென வறுமையும் இம்சையாய் ஆனது

கரும் பலகை கண்டு கரிந்த உணவு என
கொடும் பசி உந்தவே குழந்தை வாய் வைக்குது

சரணம் 2:
=======

கோபுரம் தேவையில்லை
கோடிப்பொன் தேவையில்லை
மாடமும் தேவையில்லை
மனை ஏதும் தேவையில்லை
இல்லக் கிழத்தியின்
இளைத்த பிள்ளகளின்
கொல்லும் வறுமை போக
கொஞ்சம் நெல் தாராய்


===

Wednesday, September 26, 2007

Karaigindra mEgam - My composition rendered by Sindhuja Bhaktavatsalam

Song : Karaigindra mEgam
Singer : Sindhuja Bhaktavatsalam
Lyrics: Murali Venkatraman
Composition : Murali Venkatraman
Genre : Meera Bhajans











Meera-Krishna is one of my favorite themes. Being a skeptic, I have asked myself so many times :

"Was Meera a deranged lady who sought the invsible Krishna in spite of all the wealth and pleasures that a palace had to offer ? Or was she a true representative of the concept of a devotee established to realize the invisible fabric of cosmic consciousness ?"

I have not been able to satisfactorily answer myself either way till today. However, when I look at some of the beautiful poems by Meera Bai, I could see Meera representing a selfless, although unrequited love. She was definitely not deranged. So what was she ? I have wondered many times how this basic emotion - love - especially when unreturned could be explained scientifically. It is an unresolved question still. Till the day it is understood Meera has all my appreciation.

Sindhuja - one of my favorite singers - has been a singing force in the blogs. This particular song was composed by me with Vani Jayaram in mind. Sindhu has done a vey good job in capturing the soul of the song in a different but pleasing manner. Please let us know what you feel about it.


பல்லவி:
=======

கரைகின்ற மேகம்
தருகின்ற சாரல்
சுழல்கின்ற பூமிக்கு அமுதம் - என்

கரைகின்ற கண்கள்
தருகின்ற நீரும்
மறைகின்ற மாயனுக்கின்பம் - என்
நிலை கண்டு மாயனுக்கின்பம்

சரணம் - 1:
============

பூமியில் நீ பெண்ணாய் பிறவியும் பெற வேண்டும்
நீயாக நான் பிறந்து உன்னை மயக்க வேண்டும்

ஒரு முறையேனும் நீ காதலில் விழ வேண்டும்
பிரிவெனும் துன்பத்தை நீ உணர்ந்தழ வேண்டும்
நீ உணர்ந்தழ வேண்டும் நீ உணர்ந்தழ வேண்டும்

சரணம் - 2:
============

மனம் எனும் மாளிகை வாசலின் முன் வந்து
மண்டியிட்டுன் அன்பை மன்றாடிக் கேட்டாலும்

கணமேனும் நீ என் காதலை உணராமல்
கருணையே இன்றி எனைக் காண மறுக்கின்றாய்

இத்தனை இன்னல்கள் எதற்கென்று நான் உன்னை
விலக நினைக்கின்றேன் சபதங்கள் செய்கின்றேன்

உன் முகம் நினைவினில் நிழலாடத் தோற்கின்றேன்
நானே தோற்கின்றேன் நானே தோற்கின்றேன்

Friday, September 16, 2005

கண்ணன் பாடல்கள் - 2 - வேண்டினேன் உனை வேண்டினேன்

கண்ணன் பாடல்களில் குழந்தை கண்ணன் பல ஆயர் குலத் தாய்மாரை வசீகரித்து இருப்பதாக சொல்லப் படுகிறது. முக்கால்வாசி பாடல்களில் அவன் வந்து வெண்ணையை திருடி உண்டான், அதை நான் கண்டும் காணமல் விட்டு விட்டேன் என்று சொல்வது போல் அமைந்து இருக்கும். என் மனதில் ஒரு சிறிய கற்பனை.

ஒரு ஆயர் குலத் தாய், தன் பிள்ளைகள் தாயமுது உண்ணாமல் சண்டித்தனம் செய்வதை நினைத்து வருத்தப் பட்டுக்கொண்டு இருக்கிறாள். அப்போது கண்ணன் தவழ்ந்து அங்கே வர அவளது தாய்மை பீறிட்டு எழுகின்றது. அதன் விளைவாக அவளிடம் பால் சுரக்கின்றது. குழந்தை கண்ணன் அதனை கண்டு வந்து பருகுகின்றான். இக்காட்சியைக் கண்டு அத்தாயின் பிள்ளைகளும் ஓடி வந்து பால் அருந்துகின்றன. இதை கண்டு அவள் மிகவும் ஆனந்தப் படுகிறாள்.

உண்ட பின்னே அக்குழந்தைகள் கண்ணனோடு அவள் உடல் மீதேறி விளையாடும் போது கடைவாய் நீர் வடிகின்றது. அதனை காணும் அந்தத் தாய் மனம் மிக மகிழ்ந்து "தாய்மையின் இன்பங்கள் தான் என்னே! அதனை கண்ணன் மூலமாக இன்று முழுவதும் அடைந்தேன். யசோதா, இப்படிப்பட்ட கண்ணனை சில நேரம் தினமும் எனக்குக் கடனாகத் தருவாய" என்று கேட்கிறாள்.

இந்தப் பாடலை ஆபோகி ராகத்தில் மெட்டமைத்தும் இருக்கிறேன். அதனைப் பின்னர் தருகிறேன்.

பல்லவி:
========

வேண்டினேன் உனை வேண்டினேன் - தினம்
கண்ணனை சில நேரம் கடனாகத் தா - யசோதா

சரணம் 1:
===========

நீ அறியாமல் அவன் என் வாயிலில்
கொலுசுகள் குலுங்க தவழ்ந்து வந்தான்
நான் அறியாமல் என் தாய்மையும் கிளர்ந்து
பாலினைப் பொழிய பருகி நின்றான்

எந்தனின் பிள்ளைகள் அவன் செயல் பார்த்து
வந்தன தங்கள் வன்பசி போக்க

கண்ணனால் அவரும் உண்டு மயங்கிட -என்
கண்ணிலே ஒர்குளம் ததும்பி வழிந்தது

சண்டியப் பிள்ளைகளும் சமர்த்தென ஆனது

சரணம் 2:
===========

பிள்ளைகள் எல்லாம் உண்ட பின்னெ - என்
உடல்மீதேறி அமர்ந்தனவே
கண்ணனும் மெல்ல ஏறி நின்றான் -தன்
பிஞ்சு பதங்கள் வைத்து நின்றான்

எந்தனின் பிள்ளைகள் அவன் செயல் பார்த்து
நின்றன தாமும் தன் பதத்தாலே

கண்ணனும் பிள்ளையும் கால் கொண்டு உதைத்திட
கடைவாய் அமுத நீர் கசிந்து விழுந்திட

தாய்மையின் சிகரங்கள் நான் கண்டேன்

Thursday, December 30, 2004

கண்ணன் பாடல்கள் - 1 - வாடும் பயிரினையே கண்ணம்மா

கண்ணன் பாடல்களில் கண்ணம்மாவிற்கு காதல் கடிதம் தந்தவர் பாரதியார். அந்த மேதை எழுதியது போல் இல்லாவிடினும் அச்சாயலில் எழுத முனைந்து நான் எழுதிய ஒரு படைப்பு

வாடும் பயிரினையே கண்ணம்மா
வாழ்த்திடும் மழையினைப்போல்- உனை
நாடும் உயிரினுக்கே நீயுமே
நல்முகம் காட்டாயோ ?

ஓடி ஒளியாதேடி என்முகம்
உன்னழகில்லை என்று - நீ
சூடிய தாமரையும் சேற்றில்
சுகமாய் இருந்த ஒன்றே.

மேனி வைரமடி கண்ணம்மா
மின்னுதென்று உனைப்புகழ்ந்தால்
தேனிசை சொற்களினைக் கொட்டாது
தேனி போல் கொட்டுகின்றாய்

நடையின் நளினங்களை கண்ணம்மா
நான் கண்டு மூச்௪¢ரைத்தேன் - அந்த
இடை கரம் இவை இடையே கதிரோன்
இடறுதல் நான் ரசித்தேன்

சொல்லினில் கடுமையுண்டு கண்ணம்மா
கண்ணிலே கருணையுண்டு -இது
கள்ள மழை பெய்து சூரியன்
கனல்தரல் போலன்றோ ?

என்னைத் தள்ளாதேடி கண்ணம்மா
என்றுநான் கெஞ்சி விட்டால் - நீ
அன்னை போலிரங்கி என்மனம்
ஆறிடச் செய்திடுவாய்.

கண்கள் கிடக்கட்டுமே கண்ணம்மா
கால்களை போலுனது
அங்கமெதிலும் ஒரு உயர்வையும்
அழகையும் கண்டதில்லை.