Introduction and Announcements

  
New Original ! 
Aankhon ko - आँखों को

Older Compositions : Haule SeUdalin Thiriyaale , Choolena
Available in iTunes and Amazon !!

Learn Indian Classical Dance in Riyadh   !!

Sunday, February 15, 2009

Beggary of the Disabled

பாலாவின் "நான் கடவுள் " படத்தில் காட்டிய பிச்சைக்காரர்களின் வாழ்க்கை மனதை விட்டு அகல மறுக்கின்றது. அதன் பிரதிபலிப்பாக இதோ எனது சிறுகவி.
(இது பாடலாக வர வாய்ப்பு உள்ளது)

=====
கால்கள் வளர்ந்தது காலளவே -மன
ஊனம் வளர்ந்தது முழு அளவே
கரமாய் சிரமாய்
திசைக்கு ஒன்றாய் தசைகள்

ஊழ்வினையோ ? பெற்றோர் வினையோ ?
இயற்கையின் ஓர வஞ்சனையோ ?

எண்சாண் உடம்பில்லை
ஒரு சாண் வயிறுண்டு
வயிறு வாழ நிதம்
உயிரைக் கரைக்கிறது

ஊனம் ஒன்று தான்
விற்கும் பொருள் இங்கு
விற்ற பின்னாலும்
விட்டுப் போகாமல்
பற்றிக் கொண்டு நிதம்
விற்கும் பொருள் இங்கு

இணையம் கணினி என
இகமோ இன்புறுது
இதயம் பணி விட்டு
இருண்டு உறங்கிடுது

சதையின் அவலமாய்
சடலமாய் வாழ்கின்ற
ஊன வறியார்கள்
உய்ய வழி என்ன ?

===================

4 comments:

  1. அன்றாட வாழ்க்கையில் மறைக்கப்பட்ட நிஜமான நிதர்சனங்கள் ஏராளம் !அறியாமை ஆனந்தம் தானே ! வலி வேதனை, சூழலுக்கேற்ற பாதிப்பு அனைவருக்கும் உண்டு. கண் முன்னே காட்சியாய் தோன்றும் போது, அதன் தாக்கம் வலுப்பெறுகிறது. உற்று நோக்கும் பாங்கு, ஒருமித்த எண்ணத்தை உண்டாக்குகிறது. தாக்கம் இருக்கத்தான் செய்யும்.வேதனை தான். ஆனால், அது ஒப்பிட்டு பார்க்கும் எண்ணத்தை உண்டாக்குகிறது என்றால்,அதுவே உள்ளத்தில் வடுவாய் ப்தியவும் வாய்ப்புகள் உண்டு. தன்னை இழந்து பிறர் இல்லையே !!

    ReplyDelete
  2. Hi Murali....Can you post it in English as well :) I am strugling to read Tamil :)

    ReplyDelete
  3. Yet to see the movie..

    "Oonam ondru thaan virkum porul ingu, vitra pinnaalum vittu pogaamal"

    Touching lines. I'll come again here to read this after seeing the movie.

    ReplyDelete
  4. thanks sowmya and sundar.

    rajesh - It is a tough job to translate :(

    ReplyDelete