Introduction and Announcements

  
New Original ! 
Aankhon ko - आँखों को

Older Compositions : Haule SeUdalin Thiriyaale , Choolena
Available in iTunes and Amazon !!

Learn Indian Classical Dance in Riyadh   !!

Friday, September 02, 2005

P.சுசீலாவுடன் ஒரு பாடல் நிகழ்ச்சி - part 3

ஒரு மாத காலமாக சுசீலாம்மாவுடன் மேடைக் கச்சேரி செய்வதற்கான ஆலோசனைகள் நடந்தேறி வந்தன. இந்த மேடைக் கச்சேரி எப்படி அமைந்தது என்பது ஒரு சுவையான சமாசாரம். நண்பர் திரு Sriram Laxman(SL) அவர்களுடன் தொலைபேசியில் வெட்டிக் கலந்துரையாடல் செய்வது என்பது என்னுடைய ஒரு பொழுது போக்கு. அவரின் பழைய இந்தி, தமிழ் பாடல்கள் பற்றிய அறிவு மிகப் பரந்து விரிந்தது. ஒரு முறை இங்கனம் கதைக்கையில், "MS, சுசீலம்மா இங்கே தான் ஹ¥ஸ்டனில் இருக்கிறாங்க. இப்போ தான் அவங்களிடம் பேசினேன்" என்றார். SL சுசீலா, பி.பி.ஸ்ரீனிவாஸ் போன்ற கலைஞர்களுடன் அடிக்கடி அளவளாவுவார். ஆனால், அது எப்போதும் சென்னையில் தான் நடக்கும். (ஸ்ரீனிவாஸ் அவர்களுடன் அவர் பலமுறை உட்லாண்ட்ஸ் உணவு விடுதியில் அமர்ந்து பேசி இருக்கின்ற துளிகளை எல்லாம் என்னோடு பகிர்ந்து கொண்டு உள்ளார்.) இந்த முறை சுசீலம்மா உடன் அமெரிக்காவில் பேசினேன் என்று சொன்னதும், ஒரு ரசிகனுக்குரிய நப்பாசையில் கேட்டென்.

நான் : "எனக்கும் அவர்களுடன் பேச உதவுங்களேன்" என்றேன்.
SL: : "ஓ நிச்சயமா".
நான்: "அம்மா எப்படி நல்ல பேசுவாங்களா ?"
SL : "ஓ ..ரொம்ப நல்ல பேசுவாங்க. இப்போ கூட ஒரு மணி நேரம் பேசினேன்"

(ஓ. இந்த ஆளு கூட ஒரு மணி நேரம் பேசினாங்கன்னா அம்ம நல்ல பேசுர டைப் தான் என்று நினைத்துக் கொண்டேன் மனதில்)

நான் : "அப்போ என்னிக்கு பேசலாம் ?"
SL : "முரளி, அவங்க இங்க கச்சேரி செய்துகிட்டே வர்றாங்க. இந்த மாசம் கொஞ்சம் ஃரீயா இருக்காங்க போல. கச்சேரிக்கு தேதி கேட்க முடியும்னு தோணுது. உனக்கு ஏதாவது ஐடியா இருக்கா ?"

நான் : "அட்லாண்டா நண்பர்களை கேட்டு சொல்றேன்"




தரங் என்ற இசைக்குழுவை நிர்வகித்து வரும் நண்பர் கோபியை அணுகினேன்.

நான் : "சுசீலம்மா கச்சேரி செய்யரதுக்கு தேதி தருவாங்க போல இருக்கு. உங்களுக்கு விருப்பமா ?"
கோபி: "சுசீலம்மாவா ? நிச்சயமாப்பா. உடனே பேசு அவங்க கிட்ட"




நான் : "யோவ் SL, சீக்கிரமா மும்முனை தொலைபேசித் தொடர்பு ஏற்படுத்திக் கொடும்"
SL : "ஹி ஹி..அதுக்கு எனக்கு வசதி இல்லை..நம்பர் தரேனே.."
நான் : (மனசுக்குள்ள) சாவுகிராக்கி.. "கொடுத்து தொலையும்"
(டிரிங் டிரிங்)

நான் : "ஹலொ..சுசீலாம்மாவா ? வணக்கம்மா. நான் முரளி பேசறேன். SL வோட ·ப்ரண்டு. அவர் லைன்ல இருக்கார். கொஞ்சம் இருங்க"
சுசீலா : "சரிப்பா"
SL : "அம்மா வணக்கம். உடலும் உள்ளமும் நலந்தானா ?"
சுசீலா : (பெரிதாக சிரித்துவிட்டு) "நலம் தாம்பா எல்லாம்.. நீங்க நல்லா இருக்கீங்களா ?"
SL: "மிகவும் நலம். அம்மா நம்ம கூட முரளி - என்னோட நண்பன் இருக்கான். ரொம்ப நல்லா பாடுவான்."
நான் : (திக் திக்) "வணக்கம் அம்மா. எத்தனையோ கோடி ரசிகர்களில் நானும் ஒருத்தன்"
சுசீலா : "அப்படியாப்பா ரொம்ப சந்தோஷம். எங்க இருக்கீங்க நீங்க ?"
நான் : "அம்மா நான் வயசுல ரொம்ப சின்னவன். கலையிலும் தான். அதனால நீங்க என்னை நீ வா போன்னே சொல்லுங்க"
சுசீலா : (பெரிதாக சிரித்துவிட்டு) "ஓ..சரி..எங்க இருக்கே நீ ?"
நான் : "தெற்கு கரோலினாவுல இருக்கேன் மா. அட்லாண்டாவில இருந்து 4 மணி நேரம்"
சுசீலா : "நல்லதுப்பா. என்ன விஷயமா கூப்டீங்க ?"
நான் : "விஷயம்னு பாத்தா - முதல்ல உங்க கூட பேசறதுக்கு உள்ள ஆசை. அதுக்கப்புறம் உங்க கச்சேரி அட்லாண்டவுல வெச்சுக்க உங்களுக்கு வசதிப்படுமான்னு கேக்க கூப்டோம்"
சுசீலா : எந்த தேதிப்பா ?
நான் : இந்த மாசக் கடைசி ஒத்து வருமா உங்களுக்கு ?
சுசீலா : நிச்சயமா. அப்பொ நான் ·ரீ தான். ஆனா நீ 4 மணி நேரம் தள்ளி இருக்கேன்னு சொல்றியே. இது நடக்குமா ?"
நான் : "நீங்க சரின்னு சொல்லுங்க. நான் இதை எப்படியும் நடத்திடறேன்"
சுசீலா : (மறுபடியும் சிரித்துவிட்டு) "சரிப்பா. நிச்சயம் செய்யலாம்"
நான் : "அம்மா என்ன பாட்டேல்லாம் வெச்சுக்கலாம்"
சுசீலா : "ஜமுனாம்மாவும் கூட இருக்காங்க. அவ்ங்களோட பாட்டுக்களையும் சேர்ந்து தான் பாடணும்."
நான் : "நிச்சயமா."

அப்படி தயாரான வரிசை:
=================

(1) மாணிக்க வீணை
(2) ஆலயமணியின்
(3) காளை வயசு
(4) சந்திரோதயம் ஒரு
(5) கண்ணன் என்னும் மன்னன்
(6) ஆதி மனிதன்
(7) காதல் சிறகை
(8) பால் போலவே
(9) மாமா மாமா
(10) துயிலாத பெண் ஒன்று
(11) புன்னகை மன்னன்
(12) நான் சிரித்தால்
(13) முத்துமணி மாலை
(14) விழியே கதை எழுது
(15) இயற்கை எனும்
(16) காற்று வெளியிடை கண்ணம்மா
(17) அழகிய மிதிலை நகரினிலே
(18) மலரே மலரே
(19) குங்கும பூவே
(20) மாலைப்பொழுதின்
(21) பாட்டொன்று கேட்டேன்
(22) காலைத் தென்றல்
(23) அத்தை மடி

சுசீலா : "யாருப்பா கூட பாடுறாங்க ?"
நான் : "நீங்களும் ஆடியன்சும் தப்ப நினைக்கலைன்னா நான் பாடலாம்னு.."
சுசீலா : " நீயா..அப்போ நான் வரேன் பா" (மறுபடியும் சிரிப்பு)
நான் : "அம்மா..நில்லுங்க.."
சுசீலா : "கொஞ்சம் பாடிக் காட்டு"
(விழியே கதை எழுது/ இயற்கை எனும்/ பாடிக் காட்டுகிறேன்)
சுசீலா : "ரொம்ப நல்லா இருக்குப்பா. நீயே எல்லா பாட்டுக்களையும் பாடு. தனி பாட்டு ஏதாச்சும் பாடுறியா ?"
நான் : "அம்மா..இது உங்க கச்சேரி. நான் தனிப் பாட்டெல்லாம் பாட விரும்பலை"
சுசீலா : "சரி. டி.எம்.எஸ் சார் குரல்ல வருதே - சந்திரோதயம் - அது பாட முடியுமா ? உனக்கு பாலு பாட்டும் யேசுதாஸ் பாட்டும் நல்லா வருது"
நான்: "இங்க யாராச்சும் கிடைக்கறாங்களான்னு பாக்கரேம்மா"
சுசீலா : "சரிப்பா மத்தபடி சுருதி கொஞ்சம் குறைச்சு பாடணும். வயஸாயிடிச்சு இல்லியோ.."
நான் : "யாருக்குமா..எனக்கா ?"
சுசீலா : (மறுபடி சிரிக்கிறார்).."இல்லைப்பா. எனக்கும் ஜமுனாவுக்கும்."
நான் : "உங்களுக்கு என்ன வசதிப்படுமோ, அப்படியே செஞ்சுக்கலாம்."

No comments:

Post a Comment