Introduction and Announcements

  
New Original ! 
Aankhon ko - आँखों को

Older Compositions : Haule SeUdalin Thiriyaale , Choolena
Available in iTunes and Amazon !!

Learn Indian Classical Dance in Riyadh   !!

Friday, September 02, 2005

P.சுசீலாவுடன் ஒரு பாடல் நிகழ்ச்சி - part 5

இவ்வறாக தனித்து பயிற்சி ஒரு புறம் நடந்து கொண்டு இருந்தாலும், அடிக்கடி சுசீலாம்மாவை SL உடன் தொடர்பு கொண்டு பாடல்கள் பற்றிய கதைகளை கேட்பது வாடிக்கையானது. (அதாவது சுசீலாம்மாவையும் எங்கள் அரட்டைக் கச்சேரிக்கு இழுத்தோம்னு கொஞ்சம் மரியாதையாக சொல்றேன் :) ) SL ஒரு இசைக்களஞ்சியம். சுசீலாம்மாவும் உலகும் எல்லோரும் மறந்து போன பழைய பாட்டு சுரங்கங்களிலிருந்து தோண்டி எடுக்கும் ஒரு வித்தகர். மேடையிலே பாடக் கூடிய பாடல்களைத் தயார் செய்யும் போது, "அம்மா..அன்பில் மலர்ந்த நல் ரோஜா" பாடுங்க என்று சொல்ல, சுசீலாம்மா சிரிசிரியென்று சிரிக்க ஆரம்பித்து விட்டார்.

சுசீலாம்மா : "யேங்க ஸ்ரீராம் (SL)..இந்த பாட்டெல்லாம் மேடைக்கு ஒத்து வராதுங்க. ஜனங்க தூங்கி வழியுவாங்க"

SL : "அம்மா..என்னை மாதிரி ஆளுங்க விரும்பி கேப்பாங்கம்மா"

சுசீலாம்மா : "ஆனா மத்தவங்க கேக்க மாட்டங்கப்பா"

SL : "அம்மா..நீங்களும் லதா மங்கேஷ்கரும் ஒரு டூயட் பாடி கேக்கணும்னு ஒரு ஆசை அம்மா"

சுசீலாம்மா : "இப்போ அது சரிப்பட்டு வராதுங்க. ஆனா, ஆஷா (போன்சலே) கூட ஒரு டப்பிங் படத்திற்காக பாடியிருக்கேன். பாட்டு என்னன்னு ஞாபகத்துக்கு வரலை. ஆனா ரொம்ப தங்கமானவங்க. நல்ல கல கலனு பேசுவாங்க. சலீல் சௌதிரி அவர்கள் கூட என்னை இந்தில பாட கூப்பிட்டாரு. நான் தமிழ் நாட்டை விட்டு எங்கேயும் வரமாட்டேன்னு சொல்லிட்டேன்..என்ன முரளி சத்தமே இல்லை ?"

நான் : "என்ன பேசம்மா ? எனக்கு இவர் சொல்ர பாட்டு ஒண்ணு கூட தெரியலை. அதான் அவர் பேச Wஇங்க பாட நான் அமைதியா இருந்து கேட்டு கிட்டு இருக்கேன்"

சுசீலாம்மா : (சிரித்து விட்டு) "அது சரி..இங்க கனடாவுல..டி.எம்.எஸ். சார் வந்தார். அவருடைய மகன்களும் வந்து இருக்காங்க. முதலில் 3 பாடல் தான் பாட வலு இருக்குன்னு சொன்னார். அப்புறம் ஆறு பாடல்கள் பாடினார். அடேயப்பா...ரொம்ப பிரமாதம்"

SL : "முரளி..நீ நம்ப மாட்டே..முதல் முறையா அம்மா என் பேச்சை கேட்டு இருக்கங்க. அவங்க பாடாத பாட்டுக்கள்னு தேர்வு செஞ்சு ஒரு 25 பாட்டு வெச்சு இருக்கேன். அதை வெச்சு ஒரு கச்சேரி பண்ணலாம்"

சுசீலாம்மா : "அது பண்ணலாம். ஆனா கஷ்டமாசே..sponsor பிடிக்கணும்.. audience உக்காந்து கேக்கணும். நீங்க எதுக்கும் அந்த லிஸ்டை mail ல அனுப்பி வைங்க"

SL : "mp3 யோட அனுப்பி வைக்கறேன் மா"

இதுபோன்று ஒரு நாள் பேசி முடித்து விட்டு, நானும் SLஉம் பிற்பாடு பேசிக்கொண்டு இருந்தோம்.

SL : "டேய்..Do you realize the gravity of the situation ? We are talking to Susheela, the legend, do you even realize that ? Talking to her as if she is our friend, hearing songs over the phone, do you think you realize the weight of the situation ? This is something incredible man"

அப்டின்னார் உணர்ச்சி வசப்பட்டு. என் மண்டையில அப்போ அது உறைக்கல. ஆனா பிற்பாடு கச்சேரிக்காக முழுவதும் உழைத்த பின் சுசீலாம்மா பயிற்சி நேரத்துக்கு வந்து சேர்ந்தாங்களோ, அப்போது உறைத்தது.

==========================================

இதற்கு இடையே அட்லாண்டா தமிழ் சங்கம் (உமா முரளிதர்) முத்தமிழ் விழாவிற்காக வேண்டி சுசீலாம்மாவை தனியாக தொடர்பு கொண்டார்கள். அவர்களிடம் சுசீலாம்மா அவர்களுக்கே உரிய பிரியத்துடன் "நான் முரளிப்பையனிடம் எல்லாத்தையும் பேசிட்டேன். அவன்கிட்டே கேட்டுக்கோங்க. அவன் மட்டும் கூட பாடினா போதும். Local artists வேற யாரும் தேவை இல்லை இந்த முறை" என்று சொல்ல அவர்களுக்கு குழப்பம். குழப்பம் என்னவென்றால், அவரது கணவர் பெயரும் முரளி, என் பெயரும் முரளி. "நம் கணவரை பையன் என்று சொல்லுகிறார்களே..அதோடு அவர்கிட்ட பேச வேற செஞிருக்கஙன்னு சொல்றாங்களே..என்ன இது" இந்தக் குழப்பம் தீர இரண்டு நாட்கள் ஆனது. பின்னர் எல்லாம் தெளிந்து திரு நாகி நடராஜன் அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு பொறுப்பாளார் ஆனார். இப்போது இந்த நிகழ்ச்சி முழுவதும் GATS தமிழ் சங்கம் பொறுப்பு எடுத்துக்கொண்டு செய்வதாக வந்து அமைந்தது.

No comments:

Post a Comment