Introduction and Announcements

  
New Original ! 
Aankhon ko - आँखों को

Older Compositions : Haule SeUdalin Thiriyaale , Choolena
Available in iTunes and Amazon !!

Learn Indian Classical Dance in Riyadh   !!

Friday, September 02, 2005

P.சுசீலாவுடன் ஒரு பாடல் நிகழ்ச்சி - part 6

இந்த சூழ்நிலையில் பரதன் அவர்களை மிருதங்கம் மற்றும் தபேலாவிற்காக தொடர்பு கொண்டேன். ஸ்ரீரங்கம் எம்பார் லக்ஷ்மி நாராயணனின் சீடரும், பல மாநில விருதுகளை வாங்கி 10 வருடம் நல்ல அனுபவமும் உள்ளாவரான அவர், எனக்கு முன்னமே பல கச்சேரிகளில் வாசித்துள்ளார். ஒரு முறை அட்லாண்டாவில் GAMA - மலையாளிகள் சங்க விழாவிற்காக என்னை பாட அழைத்தபோது, திரு சதிஷ் மேனன் அவர்களுடன் சேர்ந்து "தேவசபாதளம்" என்ற "His highness abdullah" படத்தின் பாடலை பாடினேன். மிக சிரமமான பாடல். தபேலாவும் (deepak shenoy), மிருதங்கமும் மாறி மாறி வருகின்ற கர்னாடக / இந்துஸ்தானி இசைக் கோர்வைகளைக் கொண்ட அற்புதமான பாடல். இருவரும் மிகஹ் சிறப்பாக வாசித்தனர். பின்னர் நாஷ்விலில் "பாட்டும் நானே" பாடலிற்கு மிகப் பிரமாதமாக வாசித்து அசத்தினார். பல அரங்கேற்றங்களில் வாசித்து அட்லாண்டா நகரில் வெகு நன்றாக அறியப் படுபவர். அவரது மனைவி ஸ்ரீதேவியின் "காற்றினிலே வரும் கீதம்" அட்லாந்தவில் மிகப் பிரசித்தம்.

குண்டை தூக்கி போட்டார்.

பரதன் : "முரளி - ரொம்ப கஷ்டமாச்சே..பயிற்சி weekends ல ஏற்கனவே எனக்கு வேற வேலைகள் இருக்கே..ஊரில் இருக்க மாட்டேனே"

நான்: "நீங்க இல்லாம அல்லது ஜோஸ் இல்லாம் இந்தக் கச்சேரி நடக்காது. கொஞ்சம் முயற்சி பண்ணுங்களேன்"

ஆனால் கடைசி ஐந்து நாட்களில் ஜோஸ் உடன் அமர்ந்து தூக்கம், உணவு பார்க்காமல் உழைத்து அத்தனை பாடல்களுக்கும் சுசீலாம்மா வருவதற்குள் தன்னை தயார் செய்து வைத்து இருந்தார். வியந்து போனேன். இப்படி ஒரு மனிதரா ? இப்படி ஒரு ஈடுபாடா என்று. கச்சேரியிலும் மிக அழகாக வாசித்து பிரமாதப் படுத்தி விட்ட்டார்.

இப்படி எல்லாறும் தயார் செய்து வைத்துக்கொண்டு வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணி அளவில் திரு நாகி வீட்டில் பயிற்சிக்காக ஒன்று சேர்ந்தோம். நாங்கள் பயிற்சி செய்யுங்காலை, சுசீலாம்மா ஜமுனாம்மாவுடன் வந்தார்கள். வந்து அங்கு போட்டு இருந்த சோ·பாவில் அமர்ந்தார். எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக பரிச்சயம் செய்து கொள்ள "யாருப்பா முரளி, கைதூக்குங்க" என்று வேடிக்கையாக கேட்க, நான் ஏழுந்து நின்றேன். அங்கு இருந்த கூட்டத்திலேயே நான் தான் மிக இளையவன். எனவே என்னை பார்த்து "இந்தப் பையன் இதை செஞ்சு முடிச்சுடுவானா"ங்குற மாதிரி ஒரு சந்தேக பார்வையுடன், "என்னப்பா practice எல்லாம் நல்ல வந்து program நல்ல வந்துடுமில்ல ?" என்று சிரித்தபடியே கேட்டார்.

நான் : "அம்மா.. என்னால என்னவெல்லாம் முடியுமோ அத்தனையும் செஞ்சுடறேன். நீங்க மேடைக்கு வந்து பாடினால் போதும். எல்லா வரிகளையும் நானே கைப்பட computerஇல் எழுதியும் வெச்சு இருக்கேன். நீங்க கவலையே படாதீங்க" என்று (குருட்டாம்போக்கு) தைரியத்துடன் சொன்னேன்.

இங்கே நான் ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். நான் எல்லா குழுவிலும் கீபோர்டு வாசிப்பேன் மற்றும் பாடுவேன். குழுவின் அங்கத்தினர் பாடும்போது நிறைய திருத்தி இருக்கிறேன். தமிழைத் திருத்தி இருக்கிறேன். சுரத்தை திருத்தி இருக்கிறேன். கமகங்களை திருத்தி இருக்கிறேன். ஆனால் இவ்வளவு பெரிய இசைக்குயிலோடு பாடும்போது என் வேலை என்ன என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என்னுடைய பாடல் வரிகளை முடிந்த வரை நன்றாக பயின்று கொண்டு வந்தேன். அது போக எல்லா பாடல்களிலிம் எப்போது நிறுத்த வேண்டும் எடுக்க வேண்டும் என்ற விவரங்களையும் எடுத்து வந்திருந்தேன். பயிற்சி ஆரம்பமானது.

=============================================

ஆலயமணியின் ஓசையை பாடலில் இருந்து பயிற்சி ஆரம்பமானது. interlude இல் சில தவறுகள் இருப்பதை சுட்டி திருத்தினார் சுசீலாம்மா. இந்த பாடல் திருத்தபட ஒரு மணி நேரம் ஆயிற்று. கூட வந்தவர்களுக்கெல்லாம் tension எகிற ஆரம்பித்தது. ஒரு பாடலுக்கு ஒரு மணி நேரம் என்றால், மீதி ஒன்பது பாடல்கள் பார்க்க இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று. சுசீலாம்மாவிடம் முன்னமே நான் "அம்மா..ஒரு நாளைக்கு 4 மணி நேரம் வைத்து மொத்தம் 8 மணி நேரம் பயிற்சிக்காக ஒதுக்கித் தர வேண்டும் என்று கேட்டு இருந்தேன்". அதிலே ஒரு மணி நேரம் போய் விட்டதே என்று தேன்ராஜாவும் மற்ற்வர்களும் கவலைப்படலாயினர். ஆனால் எனக்கு ஜோஸ் அவர்கள் மீது நம்பிக்கை இருந்தது. ஆலய மணியின் அந்த ஷெனாய் வரியில் "மபமக மகரிச ரிசசா" என்று வருமிடத்தில் "மபமக மகரிச ரிசரிசசா" என்று ஒரு தவறு செய்திருந்தார். சிறிது களைப்புடன் காணப்பட்டதாலோ என்னவ்ள அவருக்கு அது சட்டென்று புரியவில்லை. கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டு அதனை சரி செய்தார். அதற்குப் பின் பாடல்கள் மளமளவென்று பயிற்சி செய்யப்பட்டன. ஜமுனாம்மாவின் காளை வயசு பாடலில் இது போல ஒரு சிறிய பிரச்சினை இருந்தது. அதுவும் சீர் செய்யப் பட்டது. பின்னர் வந்தது "ஆதி மனிதன் காதலுக்குப் பின்". இதை பற்றி விரிவாக எழுதுகிறேன்.

4 comments:

  1. Very very interesting Murali.
    I guess I know you as MS in tfmpage right ?!

    ReplyDelete
  2. oh yes..adhe MS dhaan :)

    ReplyDelete
  3. முரளி,

    அருணுக்கு நன்றி.. உங்கள் பதிவை அறிமுகப்படுதியதற்கு.

    அருமையான பதிவு... எனக்கு என் கல்லூரி நாட்கள் ஞாபகம் வந்தது... நான் கல்லூரி இசைக்குழுவில் கிட்டார் வாசிப்பது உண்டு..அப்போதெல்லாம் REC Festember மற்றும் CIT hormony போன்ற நிகழ்சிகளுக்காக பயிற்சி செய்வதற்காக கல்லூரி வகுப்பை மட்டம் போட்டுவிட்டு உட்கார்ந்து பயிற்சி செய்து கொண்டு இருப்போம்...

    ReplyDelete
  4. thanks suresh. I have also attended harmony in 1996 I think.

    ReplyDelete