In TFMPAGE, there used to be a song satire threads where we would write alternate comical lines for tfm numbers. Here is one I wrote for kalaivaaNiyE from sindhu bhairavi..there is not much meaning..just for fun.
களவாணியே
உனைத்தானே பிடித்தேன்
உயிர்போக உதைத்தேன்
தர வேண்டும்
களவானதை
இடித்தேன் கடித்தேன் உதிரமும்
குடித்தேன் அடித்தேன் ஓடிடும்
(களவாணியே)
சுரம் வாங்கி அடித்தாய்
சுருதி ஏற்றிக் கவிழ்த்தாய்
தடி கொண்டு அடித்தேன்
தலை தெறிக்க பறந்தாய்
சிறு விரல்களால் களவாடி
வங்கிக் கணக்கினை வளர்த்தாய்
காவல் படை வெள்ளம் வரும் நேரம்
திசை சொல்லவில்லை பறந்தாய்
முகம் காட்ட மறுத்தாய்
முகவரியை மறைத்தாய்
நீ முன் வந்து
தான் குந்து
பசும்நரம்பு புடைக்கிறது
அடங்கிவிடு
(களவாணியே)
கள்ளம் செய்தது கபடம் செய்தது
உனது கதையில் சரிபாதி
சங்கை அரிந்தது கொள்ளை செய்தது
இரண்டும் உலகில் வெகு பீதி
மாமன் ஒருவகை மச்சான் ஒரு வகை
இவர்கள் பங்கு சரிபாதி
அங்கே திருடுதல் இங்கே வருடுதல்
அதுவும் இதுவும் ஜன வியாதி
தொல்லை பெருகியதே..
தொல்லை பெருகிய காலம் உன்மேல்
அழுகிய முட்டைகள் பறக்கும்
மவனே..
ஓடுற மவனே..
வையுறென்..
நல்லா வையுறேன்
இனி ஒரு வழி இல்லை
உன்னால் ரொம்ப நாளா தொல்லை
காவல்காரன் போட்டான் எல்லை
ஓடுவதில் பயனில்லை..பணிவாய் !!
Introduction and Announcements
Aankhon ko - आँखों को
Monday, June 15, 2009
கலைவாணியே -->களவாணியே --->Song Satire
Wednesday, June 10, 2009
குரு வந்தனம்
வேதாந்தம் கற்றுக் கொள்ளும் காலத்தில், என் நண்பர்களுடன் அளவளாவும்போது ஏற்பட்ட வாதங்களில் குருவைப் பற்றி எழுந்த வாதத்திற்கு நான் கொடுத்த கவி வடிவம்.
குரு என்பது ஒரு மனிதன் அல்ல. உண்மை தான் குரு என்பதே இதன் சாராம்சம்.
நண்பன் 1:
========
கருவறை வாழும்
கரிய தெய்வமும்
மறுவுரை பகரா !
மதியிலீர் ! ஞானக்
குருவரை சென்று
குவிகரம் செய்து
திருவுரை கேட்டே
திருந்துதல் வேண்டும்
குறுகிய மனமும்
குவலயமாகும்
இறுகிய இதயம்
இளகியே போகும்
அறியா மையது
அண்டாதொழியும்
குறையா மையது
குணமென ஆகும்
நண்பன் 2:
========
குருவெனச் சொன்னால்
குறுகிய மனித
உருவினில் உண்டென
உருவகிக்காதே !
பரந்த வானம்
விரிந்த பூமி
சுரந்த நீரும்
நகர்ந்த காற்றும்
எரிந்த தீயும்
எண்திசைக்கோளும்
செரிந்த சான்றோர்
கண்டதைப் பகரும்
கண்டது எல்லாம்
விளங்கிட நீயும்
சிந்தனை செய்தே
உய்தலும் வேண்டும்
பொறிகள் மூலம்
புரிகிறதாலே
பொறியும் குருவே !
புரிதலும் குருவே!
நூலும் குருவே !
நுண்ணியம் குருவே!
நாலும் குருவே !
உண்மைதான் குருவே !
குரு என்பது ஒரு மனிதன் அல்ல. உண்மை தான் குரு என்பதே இதன் சாராம்சம்.
நண்பன் 1:
========
கருவறை வாழும்
கரிய தெய்வமும்
மறுவுரை பகரா !
மதியிலீர் ! ஞானக்
குருவரை சென்று
குவிகரம் செய்து
திருவுரை கேட்டே
திருந்துதல் வேண்டும்
குறுகிய மனமும்
குவலயமாகும்
இறுகிய இதயம்
இளகியே போகும்
அறியா மையது
அண்டாதொழியும்
குறையா மையது
குணமென ஆகும்
நண்பன் 2:
========
குருவெனச் சொன்னால்
குறுகிய மனித
உருவினில் உண்டென
உருவகிக்காதே !
பரந்த வானம்
விரிந்த பூமி
சுரந்த நீரும்
நகர்ந்த காற்றும்
எரிந்த தீயும்
எண்திசைக்கோளும்
செரிந்த சான்றோர்
கண்டதைப் பகரும்
கண்டது எல்லாம்
விளங்கிட நீயும்
சிந்தனை செய்தே
உய்தலும் வேண்டும்
பொறிகள் மூலம்
புரிகிறதாலே
பொறியும் குருவே !
புரிதலும் குருவே!
நூலும் குருவே !
நுண்ணியம் குருவே!
நாலும் குருவே !
உண்மைதான் குருவே !
Wednesday, June 03, 2009
Teaser 6 - Rajasthani Folk
Have been dabbling with quite a few compositions of mine and arranging them one by one (rather side by side). This is one among those songs.
Sax plays a placeholder for vocals.

Rajasthani Folk - Teaser | Upload Music
Sax plays a placeholder for vocals.
Rajasthani Folk - Teaser | Upload Music
Subscribe to:
Posts (Atom)

