Introduction and Announcements

  
New Original ! 
Aankhon ko - आँखों को

Older Compositions : Haule SeUdalin Thiriyaale , Choolena
Available in iTunes and Amazon !!

Learn Indian Classical Dance in Riyadh   !!

Saturday, May 09, 2009

கண்ணன் பாடல்கள் - 5 - கண்ணனின் ஏக்கம்

கண்ணன் கதைகளில் ராதையின் இடம் மிக முக்கியமானது. ராதை கண்ணனுடனே பிறந்து வளர்ந்து காதல் செய்து களிப்புடன் வாழ்ந்த மங்கை. ஆனால், கண்ணன் ஏன் ராதையை மணமுடிக்காமல் போனான் என்ற கேள்விக்கு சரியான பதில் எதிலும் இல்லை. சில கதைகளில் கண்ணன் அக்ரூரருடன் கிளம்பிப் போனபின் தொலை தூரத் தொடர்பை (long distance relationship) காக்க முடியாமல் அந்தக் காதல் தடுமாறிப் போனதாக சொல்லப் படுகிறது. ஆனால், பல கதைகளில் மற்றும் பாடல்களில் ராதைக்கு கண்ணனின் ராசலீலைகள் பிடிக்காமல் போனதற்கான பல தகவல்கள் உள்ளன. தன்னிடம் மிக்க காதல் கொண்டிருந்தாலும், பிற பெண்டிரிடம் கண்ணன் கொண்டிருந்த அன்பு காரணமாக ராதையின் மனதில் கண்ணன் மேல் மிகுந்த கோபம் இருந்ததாகத் தெரிய வருகிறது. லகான் படத்தில் கூட வரும் பாடல் “ராத கைஸே ந ஜலே” என்ற பாடல் கூட இந்த கருத்தில் எழுதப்பட்டது தான்.

ஆனால் ஒவ்வொன்றிலும் கண்ணன் செய்கைகள சிறிதே நியாயப் படுத்தி அல்லது “அதுதான் பேராண்மைக்கு அழகு” என்று ரசிப்பது போன்று எழுதப் பட்டு இருக்கிறது. அப்படி என்றால் ராதை என்ன கிள்ளுக் கீரையா ? ஏன் ? அவள் பிரிதொரு ஆடவனிடம் கூடி வந்திருந்தால் இந்த உலகம் கண்ணனைப் போற்றிய அளவு அவளைப் போற்றி இருக்குமா ? கோவலனுக்குப் பதில் கண்ணகி தவறு செய்திருந்தால் அவளை இழித்து அல்லவா தூற்றி இருக்கும் ? எனவே இது ஒரு ஆணாதிக்கக் கண்ணோட்டததிலிருந்து எழுதப் பட்ட சரிதம் அல்லவா ?

அப்படி அல்லாமல் கண்ணனை ராதா பிரிந்து வேறு ஒருவரை மணம் செய்ய காரணம் கண்ணனின் இந்த நிலையில்லாத மனமாகக் கூட இருக்கலாமே ! அப்படி இருந்தக்கால், தன்னை மதித்து தன்னுடன் மட்டுமே உறவாடும் ஒருவனை அவள் திருமணம் செய்து கொள்வதாக தான் அவளின் வாழ்க்கை அமைந்திருக்க வேண்டும். அப்படி அவள் தன்னை விட்டுச் செல்லும்போது தான் கண்ணன் அவளுடைய அருமையை உணர்ந்திருக்க வேண்டும். அப்படி உணரும்போது, அவள் மணம் ஆகி செல்லும்போது, அவன் சோகப்படுதல் போல் ஒரு பாடலைத் தான் இங்கு தந்திருக்கிறேன். இதுவும் ஆஹீர் பைரவியில் அமைந்தது தான். வரிகள் தற்போது. பாடல் பிற்போது.


பல்லவி
=======

ஒளியும் கதிரை நீங்குமோ ?
சுவாசம் நின்ற பின்னும் சடலம்
என்ன காற்றைத் தேடுமோ ?

சரணம் 1
==========

காம வேள்வியில் நானும் விட்டிலாய்
கனன்று எரிந்தாலும்

காதல் தீயது ராதை அன்றியோர்
கண்ணில் கண்டதில்லை

ஆணுக்கொர் நீதி பெண்ணுக்கொர் நீதி
இல்லை என்று சொன்னாய்

வேறு கூடல்கள் வேண்டாம் என் காதல்
ஆணை என்று சொன்னாய்

ஆணையை நான் மறந்தேன் - இந்த
ஆணையே நீ மறந்தாய்

(ஒளியும்)

சரணம் 2
==========

காற்று இன்றி குழல் இதிலே
நாதம் ஏது சொல்லடி

ஊற்று இன்றி பாலையிலே
உயிர்கள் வாழ்வதெப்படி ?

செல்பவளே உன்னிதழில்
முன்னம் நான் வைத்த ஈரம் இனிது

நீ செல்லவே என் கண்ணிலே
இன்று நீ கொணர்ந்த ஈரம் கொடிது

(ஒளியும்)