Introduction and Announcements

  
New Original ! 
Aankhon ko - आँखों को

Older Compositions : Haule SeUdalin Thiriyaale , Choolena
Available in iTunes and Amazon !!

Learn Indian Classical Dance in Riyadh   !!

Wednesday, July 18, 2012

தமி"ழீ"னத் தலைவர் வாழ்த்து !

சமீபகாலத்தில் கருணாநிதி அடித்த ஈழ அந்தர் பல்டியால் உந்தப் பட்டு அவரைத் "துதித்து" எழுதிய "கவிதை".  வெறும் நகைச்சுவைக்கே !

காப்பு / ஆப்பு:
==========

மிதிப்போர்க்கு நல்வினைபோம் இன்பம்போம் நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் - கதித்தோங்கும்
துஷ்டயையும் கைசேர்க்கும் இவனுமிருள் - நொந்தார்
வேஷ்டி/கவசம் இலை.

அமரர் இவர்-தீரா சபலம் செறிந்த
குமரர் - இவர் நெஞ்சே நரி.

நூல் / fool
========


சுழலும் ஆட்சிச் சக்கரந்தன்னில்
உழலும் மக்கள் உழைப்பும் உயிரும்
நிழலும் கூட வணிகம் செய்வோய்
நிழற்படம் இங்கெம் மாத்திர மய்யா ?


உற்றமும் சுற்றமும் குற்றமாய்ப் புரிய
கொற்றவனாகி கொடுங்கோல் கொண்டாய்
கற்றவனாகப் பாரிலே நடித்து
மற்றவனெல்லாம் மயங்கிடச் செய்தாய்


பகுத்து அறிதலை பெரியார் மொழிய
பகுத்து அரிவதை புரிந்தாய் - வாழ்க்கை
வகுத்துக் காட்டிட வேண்டிய தலை நீ
வகுப்பு வாதக் கொள்கையால் வளர்ந்தாய்
 
புத்தனைப் போல்மதி மிகவும் படைத்தும்
சித்தனைப் போலதி வார்த்தைகள் சிந்தியும்
அத்தனை ஆற்றலும் நல்வழி போகா(து)
எத்தனைப் போலொரு வாழ்க்கையைக் கொண்டாய்.


விந்திய மலையின் இப்புறம் உள்ளோர்
பிந்திய நிலையில் இருந்திட வசமாய்
தந்திர அரசியல் சூட்சுமத்தாலே
இந்திய நாட்டை பிளந்திட நினைத்தாய்

கைபேசி அலைக் கற்றையில் கொள்ளை
மைபூசி திகழ் திரையிலும் கொள்ளை
இணைவி துணைவி மற்றும் பிள்ளை
கையாடாமல் இருந்தததே இல்லை.


சித்தன் சிதம்பரனார் சென்னை வந்தமைந்து
சத்தம் செய்வதுவும் அன்னைக்கா காதென்று
பித்தம் தெளிவித்தார் பிள்ளைக்காய் நிலைவழுகி
எத்தன் கைவிட்டார் ஈழத்தின் மேல்பாசம்


கருவாய் திறவாய் பொய்யாய்ப் பகர்வாய்
வருவாய் நிறைப்பாய் பிறர்வாய் அடைப்பாய்
மருவாய் தமிழ்த்தாய் முகவாய் புகுவாய்
வளர்வாய் புற்றாய் கருணா நிதியே !

ஞாயிறைப் போற்றுதும் ஞாயிறைப் போற்றுதும் !
  ஊழல் வினை உறுத்தி வந்து (உமை) ஒட்டுமா ?