நான் பெரிதும் மதிக்கும் இன்றைய எழுத்தாளர்களில் முதன்மையானவர் திரு. ஜெயமோஹன். நேர்மையையும், கற்பனை வளத்தையும் இலக்கியத் தமிழில் அழகாய்த் தருபவர். சில சமயம் அவரைப் போல் எழுத வேண்டும் அல்லது அவருடைய கவனத்தைக் கவர வேண்டும் என்று நினத்து சிலர் எழுதும் கடிதங்களில் மொக்கைத் தன்மையே முதலாவதாய் இருக்கிறது. திரு ஜெயமோஹன் அவர்களும் சில சமயம் அவற்றைப் பிரசுரித்து விடுகிறார். காலையில் எழுந்து காய்கறி வாங்கப் போவதையே இலக்கியமாக்கி விட வேண்டும் என்று வெறியுடன் எழுதும் சில பேரின் தமிழார்வத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்படிப்பட்ட ஒரு மொக்கைமிகு முனைவரின் புனைவை கிரஹித்து இங்கே சற்றே திரித்து எழுதி உள்ளேன். சுட்டியில் உள்ள மூலக் கட்டுரையைப் படித்தாலேயன்றி இது எதற்காக எழுதப் பட்டுள்ளது என்று புரியாது :)
மூலம் : http://www.jeyamohan.in/97469
(புறக்கடைக்குக்) கிளம்புதலும் திரும்புதலும்
================================
================================
இனியென்ன பயம்,
இன்றும் வழமை போல நான் அரைடிராயரைக் கழட்டிக் கைலி மாட்டுகையில் என் அம்மா மின்விசிறியை அணைத்தார்கள். பல வருட பழக்கம் அது அவர்களுக்கு. அவர்கள் என் பக்கம் நின்றால் இதை செய்யாமல் இருக்க மாட்டார்கள். முன்பு ஒரு சமயம் நான் கைலி மாட்டக் காலை உயர்த்தி சமநிலை தவறி சறுக்கி விழுந்தேன். அப்போது சற்றே விலகிய கைலியை மின்விசிறி மேலும் நன்றாய் உயர்த்திக் காட்டி உள்ளிருப்பை எல்லாம் உலக தரிசனம் செய்ய வைத்து மானத்தைக் கப்பலேற்றியதால் வந்த மனச்சோர்வுடன் ஒரு ஐந்து நாள் இடது கையால் எதையும் துடைக்க முடியாமல் இருந்தேன். இன்று இக்கோடையில் சில நிமிட விசிறியின் ஓய்வு, கட்டியிருந்த கைலியின் உள்ளே கசிகின்ற வியர்வை வெள்ளத்தை ”முன்னுக்கு வந்த வெள்ளம்” எனத் தவறாக எடை போடும் அளவுக்கு மோசமாக ஆக்கிவிடும்.
அம்மாவைப் பார்த்தேன். நான் கைலிக்கு மாறியதும் விசிறி சுவிட்சைப் போட அதன் அருகிலேயே நின்றிருந்தார்கள். உள்ளே ஏதோ பொங்க, சட்டென கிளம்பி வெளியேறி ஓடினேன் - புறக்கடைக்கு. ஒவ்வொருமுறையும் வெளியே தான் செல்கிறேன் -”வெளிக்கிப் போக” என்று சொல்லி வீட்டை விட்டு. முந்தாநாள் என் தங்கை மகனை ”உக்காந்து செய்டா” என்றேன். அம்மா குறுக்கிட்டு ”அம்மா உன்னைய என்னைக்காவது உட்கார்ந்து செய் என்று சொல்லாமல் இருந்திருக்கேனா ? ஆனா பாரு இப்போ நீ எப்படி கம்பங்கொல்லைக்குள்ளே புகுந்து கமுக்கமாய் கால்களை மடக்கி உட்கார்ந்து கக்கூஸ் போறே ? போகும்போது எத்தனை தடி தடிப் பயலுங்க எல்லாம் பக்கத்துலே வந்தும் காரியமே கண்ணா இருக்கே. அவனும் ஒரு நாள் அப்படிச் செய்வான் விடு ” என்றார்கள்.
ஆம் ஒவ்வொரு சமயமும் நான் கொல்லைப் பக்கம் ஒதுங்கும்போதும் உபதேசம் செய்த அம்மா. கவுண்டமணியாரின் ”ஆஹா இந்த outside போற சுகமே தனி” என்ற வேத வாக்கை வாழ்க்கை நெறியாக்கி இப்போது நான் விடிக்கும் முறையை சரியாகப் பின்பற்றும் போது “இப்போவாவது இந்த மக்கிப் போன மரமண்டையிலே உட்காரவேண்டும் என்று உறைச்சுதே” என்று ஆசுவாசப் படுத்திக்கொள்ளும் அம்மா.
முன்பு ஒரு சமயம் அடுத்த வீட்டு பாத்ரூமிற்குப் போய் கடனைக் கழித்துத்திரும்பி வந்தபோது கேட்டார்கள். ”கம்பங்காட்டை விட்டு எங்கடா போன?” ஆம் கம்பங்கொல்லையில் இல்லாத இடம் என்று ”வெளிக்கி போவதற்கு” மகன் தேடிப் போவான் என்பது அவர்களால் நம்ப இயலா ஒன்று.
வேறொருநாள் இரவு. நல்ல பேதி. என் தலையைக் குட்டியபடியே கேட்டார்கள். ”தம்பி அன்னைக்கு எங்கடா போன? அங்கேயே போய் ராவிடிய உக்கந்துக்க வேண்டியது தானே ?” இதோ இன்று குதத்தின் வழி நீர்சொரியும் கும்பியிடம் சொல்லிக்கொண்டேன். ஏன் போகிறாய்? உடலை விட்டு வெளியேற… எங்கே போகிறாய்? குதத்தின் கீழ் கூம்பாரமாய்க் கூட்ட நினத்தாலும் கூழாகக் கசிந்து ஆறாக ஓடும் மஞ்சள் நதியே ? புவுயீர்ப்பு விசை எனை எங்கு அழைத்துச் செல்கிறதோ அங்கே !!
ஒவ்வொரு வெளியேற்றமும் உடல்சக்தியின் நீங்கலே. கம்பங்கொல்லைக்கு ஒவ்வொரு பயணமும் என் ஆவியைக் கரைத்தே. ஊமை வலி (வயிற்றில்), அரிக்கும் தேகம், போர்த்தி இருக்காவிடில் போய்விடும் மானம். கால்களின் நடுவே முன்னும் பின்னும் இரு வேறான மஞ்சள் கடல்கள் சங்கமம்.
பக்கத்துக் குளத்திலிருந்து எடுத்து வந்த ஆயிரத்து எட்டு குடம் நீர், பெருகி வந்த மஞ்சள் கடல்களின் மூலாதாரத்தில் அபிஷேகம் ஆகிக் கொண்டு இருந்தது. என் கைகள் அந்தக் கைங்கர்யத்தில் கருத்தாய் இருப்பினும் கேள்வி ஒன்று என் உள்ளுருவை உதைத்தது.
மலம் நின்று சுகிப்பேனா (இந்தப்) பஜாரி ? மலம் மிக மிகப் பீய்ச்சியது. பேதிதான் வியாதி. உடலின் மையத்திலும், எஞ்சியிருக்கும் ஆற்றலிலும் பேதிதான் மானுடத்தின் முதல் வன்மம். மலம் பீ. எல்லாப் பேதியரும் தனியர். பிறிதொருவர் அவர் பக்கம் வந்தால் அவர்மேல் தெறித்து அவர் சருமத்தில் ஒட்டிக் காய்ந்து மாசாய் மாற வாய்ப்பு உள்ளதால் தனிமையே வழமை.
வழியில் கண்டேன் ஒரு நாய் காலை உயர்த்தி மரத்தின் வேரைக் குறி பார்த்துக் கொண்டிருந்தது. கால பைரவரோ ? தன் காலை அகட்டித் தன் அந்தரங்கக் கூடாரங்களை மரமலவறைக்குக் காட்டியதில் அதற்கு ஒரு ஆனந்தம் போலும் - அதன் வாயில் வடியும் எச்சிலினூடே அந்த மரத்தின் பிம்பம் தெரிந்தது. மரத்திற்கு அந்த பைரவரின் சிந்தனை ஏற்புடையது இல்லை என்று தோன்றி இருக்க வேண்டும். காற்றின் துணை கொண்டு தன் வளைந்த கிளை மூலம் அண்டிய நாயை சண்டியனாய்ப் பாவித்து ஆங்காரமாய் அடித்தது. ஆனால் அந்த நாயோ எடுத்த காரியம் முடிக்காமல் போகக் கூடிய வர்க்கத்தில் இல்லை.
அடிபட்ட அதிர்ச்சியில் முன்பொழிவை முதலில் ஆரம்பித்தது. பின்பொழிவு தன்னியல்பாய் அரங்கேறியது. மரத்திற்கு வெறுத்து இருக்க வேண்டும். தன் ஆகப் பரந்து விரிந்த கிளைகளை சாமியாடிக் காட்டி நாயிடம் தன் கோபத்தைத் தெரியப் படுத்தியது. ஆனால் நாயோ அதீத அமைதி முகத்தில் தவழ அந்த மரத்தடியில் கழித்த இடத்திலேயே தன் காயத்தை விரித்துப் படுத்தது. பின்னர் தன் அந்தரங்க இடங்களை சிறிதே நக்கிக் கொண்டது.
இன்னொரு முறையும் திரும்பிச் செல்வேன் - நிற்காவிடில்.
உடல்-ஊர் பேனு