An online friend Aisoorya Vijayakumar composed a song for which she requested I write lyrics. The project has been dormant for a while and in the meanwhile I thought I could share just the lyrics I wrote.
பல்லவி
=======
கவிதைகள் வரையும் கைகளின் விரல்கள்
கண்களைப் பறித்தல் கூடாது
காதலில் பூக்கும் மனமது தனிமை
காட்டுக்குள் கருகல் கூடாது
அனுபல்லவி
==========
கடல்பால தாண்டி நிலம்பல தாண்டி
காதங்கள் பல நீ கடந்தாயே
கருவிழி அடியில் கருவளையம் நான்
காலங்கள் காப்பதைக் காட்டுதுவே
சரணம்
======
நீ மறுமுறை என் விழியினிலே நுழைவதில் தாமதமா ?
உன் தொடுகையின் முன் மலர்வளையம் என்னுடல் தீண்டிடுமா ?
கண்ணின் இமை மேகமென
கண்ணீர் மழை பொழிகிறதே
நெஞ்சின் இடிபாடுகளில் -சுடும்
காற்றாய்ப் புகும் உன் நினைவே
கனவுகள் மனதினில் சுவடுகள் ஆகும்
சுவடுகள் வலிதரும் வடுவென மாறும்
இறுதி மூச்சின் முன்னே வா !
hook:
====
காதல் என்பது சுகமா ? -அதில்
காத்தல் இன்பமும் தருமா ?
பல்லவி
=======
கவிதைகள் வரையும் கைகளின் விரல்கள்
கண்களைப் பறித்தல் கூடாது
காதலில் பூக்கும் மனமது தனிமை
காட்டுக்குள் கருகல் கூடாது
அனுபல்லவி
==========
கடல்பால தாண்டி நிலம்பல தாண்டி
காதங்கள் பல நீ கடந்தாயே
கருவிழி அடியில் கருவளையம் நான்
காலங்கள் காப்பதைக் காட்டுதுவே
சரணம்
======
நீ மறுமுறை என் விழியினிலே நுழைவதில் தாமதமா ?
உன் தொடுகையின் முன் மலர்வளையம் என்னுடல் தீண்டிடுமா ?
கண்ணின் இமை மேகமென
கண்ணீர் மழை பொழிகிறதே
நெஞ்சின் இடிபாடுகளில் -சுடும்
காற்றாய்ப் புகும் உன் நினைவே
கனவுகள் மனதினில் சுவடுகள் ஆகும்
சுவடுகள் வலிதரும் வடுவென மாறும்
இறுதி மூச்சின் முன்னே வா !
hook:
====
காதல் என்பது சுகமா ? -அதில்
காத்தல் இன்பமும் தருமா ?
No comments:
Post a Comment