Song : ஏனடா கண்ணா ஏனடா - Enadaa kaNNA Enadaa
Composed, Written and Sung by : Murali Venkatraman
Veena : Lakshmi Narendra
Ghatam : Jeiram Jegatheesan
Tabla : Stephan Kantharaja
Venue : Sydney Murugan Temple
In English for those who are unable to read tamil:
A poor peasant sees baby Krishna sleeping under the hood of the venemous serpent Adi Sesha. The peasant gets concerned that the venom may affect Krishna by making him dark, hot and thirsty. He wonders if Krishna, after giving away all his wealth is unable to buy a bed for himself. With kindness he offers Krishna :" Oh Krishna ! Come to me ! I will make yuo a bed of flowers and cotton". (Here I have used the reference to Sudhama which is poetic license since Krishna donates wealth to Sudhama, not as a baby, but as an adult). When I composed this song, I had the image of Shri. PithukuLi murugadas singing to baby Krishna in mind.
ஒரு ஏழைக் குடியானவன் (விவசாயி) குழந்தை கண்ணன் பாம்புப் படுக்கையில் படுத்திருப்பதைப் பார்க்கிறான். அவன் மனம் பதறுகிறது.
"அடடா..குழந்தை கண்ணன் இப்படி பாம்பின் படத்துக்கடியில் படுத்துக் கொண்டு இருக்கிறானே ! அந்த பிஞ்சு உடம்பு அந்த நெஞ்சின் சூட்டை எப்படித் தாங்கும் ?" என்று எண்ணுகிறான்.
"ஒரு வேளை கையில் இருக்கும் பணத்தை எல்லாம் நண்பனுக்கு தானம் கொடுத்துவிட்டானே ! அதனால் கையில் மெத்தை வாங்கப் பணம் இல்லாமல் பாம்புப் படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கிறானோ ?" என்று எண்ணி:
"கண்ணா ..ஏனப்பா இந்தப் பாம்புப் படுக்கை ? என்னிடம் வா..நான் பஞ்சும் பூவும் வைத்த மெத்தையைத் தருகிறேன்" என்று அன்போடு அழைப்பதாக இந்தப் பாடலை அமைத்து இருக்கிறேன். (இங்கே சுதாமனுக்கு தானம் கொடுத்தது என்பது மிகுதியாகச் சேர்க்கப்பட்ட விஷயம். ஏனெனில், கண்ணன் குழந்தையாக அல்ல, நாடாளும் மன்னனாக ஒரு முழு ஆண் மகனாக வளர்ந்த பின் தான் சுதாமனுக்கு தானம் செய்கிறான்.)
இந்தப் பாடலை இயற்றும்போது திரு பித்துக்குளி முருகதாஸ் அவர்கள் குழந்தைக் கண்ணனை நோக்கிப் பாடுவதாக நான் மனதில் உருவகப் படுத்திக் கொண்டேன். நீங்களும் செய்து பாருங்களேன் !
பல்லவி:
========
ஏனடா கண்ணா ஏனடா ஒரு மெத்தை கிடைக்கலியா ?
ஒரு பாம்புமே உன் படுக்கையா ஒரு மெத்தை கிடைக்கலியா ?
அனுபல்லவி:
=============
பஞ்சுமே நல்ல பூவுமே உள்ள மெத்தையை நான் தரவா ?
நஞ்சினைக் கக்கும் நாகத்தை நீயும் விட்டு வர வேண்டுமே !
சரணம் 1:
========
நாகத்தின் கீழே தூங்கியே நெஞ்சில் மேனி கருத்ததடா ! - சூட்டில்
தாகமும் வரும் தேவையா இது விட்டு வர வேண்டுமே !
சரணம் 2:
========
கையிலே பணம் இல்லையா எல்லாம் தானம் கொடுத்து விட்டாய் ! - நண்பனுக்கு
தானம் கொடுத்து விட்டாய்- சுதாமனுக்கு
தானம் கொடுத்து விட்டாய் - பணம்
இல்லையேல் ஒரு மெத்தை நான் தர வந்து உறங்கிடடா !