கண்ணன் பாடல்களில் கண்ணம்மாவிற்கு காதல் கடிதம் தந்தவர் பாரதியார். அந்த மேதை எழுதியது போல் இல்லாவிடினும் அச்சாயலில் எழுத முனைந்து நான் எழுதிய ஒரு படைப்பு
வாடும் பயிரினையே கண்ணம்மா
வாழ்த்திடும் மழையினைப்போல்- உனை
நாடும் உயிரினுக்கே நீயுமே
நல்முகம் காட்டாயோ ?
ஓடி ஒளியாதேடி என்முகம்
உன்னழகில்லை என்று - நீ
சூடிய தாமரையும் சேற்றில்
சுகமாய் இருந்த ஒன்றே.
மேனி வைரமடி கண்ணம்மா
மின்னுதென்று உனைப்புகழ்ந்தால்
தேனிசை சொற்களினைக் கொட்டாது
தேனி போல் கொட்டுகின்றாய்
நடையின் நளினங்களை கண்ணம்மா
நான் கண்டு மூச்௪¢ரைத்தேன் - அந்த
இடை கரம் இவை இடையே கதிரோன்
இடறுதல் நான் ரசித்தேன்
சொல்லினில் கடுமையுண்டு கண்ணம்மா
கண்ணிலே கருணையுண்டு -இது
கள்ள மழை பெய்து சூரியன்
கனல்தரல் போலன்றோ ?
என்னைத் தள்ளாதேடி கண்ணம்மா
என்றுநான் கெஞ்சி விட்டால் - நீ
அன்னை போலிரங்கி என்மனம்
ஆறிடச் செய்திடுவாய்.
கண்கள் கிடக்கட்டுமே கண்ணம்மா
கால்களை போலுனது
அங்கமெதிலும் ஒரு உயர்வையும்
அழகையும் கண்டதில்லை.
Excellent poem.. choice of words superba irukku.. Feels like reading Bharathiyar's.. congrats..
ReplyDeleteLalitha Swaminathan
Wow... Great poem Murali Anna... watever little i understood i loved it :-)
ReplyDelete