Introduction and Announcements

  
New Original ! 
Aankhon ko - आँखों को

Older Compositions : Haule SeUdalin Thiriyaale , Choolena
Available in iTunes and Amazon !!

Learn Indian Classical Dance in Riyadh   !!

Tuesday, January 18, 2005

சில சமயங்களில் சில நிகழ்வுகள்

சில சமயங்களில் சில நிகழ்வுகள்இந்த உலகத்தில் நடக்கின்ற சில விஷயங்களைப் பார்த்தால் பிரமிப்பு உண்டாகிறது. நாம் வாழ்வில் சந்திக்கின்ற சில சராசரி மனிதர்களின் குணங்கள் அவர்களை மனிதத் தன்மையிலிருந்து மேலே உயர்த்திக் காட்டுகின்றன. என் வாழ்வில் அது போன்ற ஒரு சம்பவம் இதோ..

அமெரிக்காவில் தெற்கு கரோலினா மாவட்டத்தில் கொலம்பியாவில் நான் எனது முனைவர் பட்டத்திற்குப் பெரு முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். எனது வழிகாட்டிக்கும் எனக்கும் சிறித்து மனஸ்தாபம் உண்டு ஆகையால், இந்தப் படிப்பு அவ்வளவு சீராக இல்லை. இந்தப் படிப்பிற்கு நடுவே எனது முதல் காதலான இசையின் மீது நிறைய நாட்டம் இருந்தும் பல இடங்களிலிருந்து வந்த வாய்ப்புகளை எடுத்துக்கொள்ளாமல் இருதலைக்கொள்ளி எறும்பு போன்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன். (எனக்கு பாடவும், கீ-போர்டு, கிதார் மற்றும் தபேலா வாசிக்கவும் தெரியும்).

என் நண்பனோடு சேர்ந்து "ஆவர்தனா" என்ற இசைக்குழு ஒன்று ராலேயில் அமைத்தேன். இசையில் நிறைய நேரம் செலவாகிறது, படிப்பை முடிப்போம் என்று முடிவு கட்டிய நேரத்தில் எதிர்பாராவிதமாக அட்லாண்டாவில் "தென்றல்" என்ற சிறு குழுவின் தலைவரான கோபியை சந்திக்க நேர்ந்தது. அவர் குழ்வினர் எல்லோரும் பிரிந்து போய்க்கொண்டு இருந்தனர். என்னிடம் குழுவை சீரமைத்து நடத்தித் தர முடியுமா என்று கேட்டார். ஒத்துக்கொண்ட நான், இருப்பவர்களை எல்லாம் திரட்டி, பயிற்சி அளித்து மலையாளிகளின் சங்கத்தில் ஒரு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திக் காட்டினோம்.

கொலம்பியாவில் இருந்து அட்லாண்டா போய் வருவது என்பது சிரமமான காரியம் - 3 மணி நேரம் வண்டியை ஓட்டிக்கொண்டு லொங்கு லொங்கு என்று போய் வர வேண்டும் - அதுவும் என்னிடம் இருக்கும் வண்டியும் மிகவும் நம்பகமற்றது - ரோட்டில் எப்போது படுத்துக்கொள்ளும் என்று தெரியாது. நிகழ்ச்சியினால் மிகவும் ஆனன்ந்தப்பட்ட எங்கள் குழு டிரம்மர் அவர்கள் இதனைக் கவனித்துக்கொண்டே இருந்திருக்கிறார். தென்றலின் அடுத்த செயற்குழுக் கூட்டத்தில் (நான் அதில் கலந்து கொள்ள செல்லவிலை), பல விஷயங்கள் அலசப்பட்டன. எனது வண்டியில்லா பிரச்சனையும் பேசப்பட்டு இருக்கிறது. கோபி, "முரளிக்கு இங்கு வரும்போதெல்லாம் வாடகை வண்டி அமர்த்திக் கொடுப்பது தான் சரி" என்று சொல்ல, அதை கேட்டு அந்த டிரம்மர்,

"தேவை இல்லை. அவனுக்கு என்னுடைய 1987 BMW வைத் தருகிறேன்"

என்று சொல்ல வாயடைத்துபோனார்கள் எல்லோரும். மேலும் "இந்த வண்டி என் குடும்பத்தின் பெருமைகளில் ஒன்று. அதனை என் கண் போலே நான் காத்து வந்து இருக்கிறேன். எனவே இது அவனுக்கு போய் சேருவது நல்லதாகத்தான் இருக்கும். அது மட்டுமல்ல, அவன் அட்லாண்டாவை விட்டு விலகி மிகவும் தொலைவு சென்று வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலையும், அதனால் விமானம் பிடித்து வர வேண்டிய சூழ்நிலையும் வந்தால், அந்த விமான போக்குவரத்து செலவையும் நான் ஏற்கிறேன்."

சிறித்து நேரம் பேச்சு மூச்சு இல்லை. பின்னர் எல்லோரும் எழுந்து கை தட்டி இருக்கிறார்கள். செய்தியைக் கேட்டு நான் ஸ்தம்பித்து போனென். அவரை எனக்கு ஒருவார காலம் தான் தெரியும்..அதற்குள்ளாக இப்படி ஒரு இன்ப அதிர்ச்சியா ? இப்படிப்பட்ட மனிதர்களை என் வாழ்க்கையில் காட்டியதற்கு இறைவனுக்கு நன்றி சொன்னென்.

அவரைப் பின்பற்றி எனது பழைய வண்டியை என் நண்பனுக்கு பணம் வாங்காமல் கொடுக்கப் போகிறேன்.

No comments:

Post a Comment