வேதாந்தம் கற்றுக் கொள்ளும் காலத்தில், என் நண்பர்களுடன் அளவளாவும்போது ஏற்பட்ட வாதங்களில் குருவைப் பற்றி எழுந்த வாதத்திற்கு நான் கொடுத்த கவி வடிவம்.
குரு என்பது ஒரு மனிதன் அல்ல. உண்மை தான் குரு என்பதே இதன் சாராம்சம்.
நண்பன் 1:
========
கருவறை வாழும்
கரிய தெய்வமும்
மறுவுரை பகரா !
மதியிலீர் ! ஞானக்
குருவரை சென்று
குவிகரம் செய்து
திருவுரை கேட்டே
திருந்துதல் வேண்டும்
குறுகிய மனமும்
குவலயமாகும்
இறுகிய இதயம்
இளகியே போகும்
அறியா மையது
அண்டாதொழியும்
குறையா மையது
குணமென ஆகும்
நண்பன் 2:
========
குருவெனச் சொன்னால்
குறுகிய மனித
உருவினில் உண்டென
உருவகிக்காதே !
பரந்த வானம்
விரிந்த பூமி
சுரந்த நீரும்
நகர்ந்த காற்றும்
எரிந்த தீயும்
எண்திசைக்கோளும்
செரிந்த சான்றோர்
கண்டதைப் பகரும்
கண்டது எல்லாம்
விளங்கிட நீயும்
சிந்தனை செய்தே
உய்தலும் வேண்டும்
பொறிகள் மூலம்
புரிகிறதாலே
பொறியும் குருவே !
புரிதலும் குருவே!
நூலும் குருவே !
நுண்ணியம் குருவே!
நாலும் குருவே !
உண்மைதான் குருவே !
அபாரம் முரளி !! :)
ReplyDeleteகாணும் பொருளும்,காட்சியும் நிகழ்வும், காலமும் கணமும், படித்தலும் கேட்டலும், பகர்தலும் நுகர்தலும், அண்டமும் அனுபவமும் பகராத மொழி ஏது. புரிதலே புரிந்து போனால் எதிலும் உண்மை அறியாமலா போய்விடும் :)
Thanks Sowmya. These kind of debates keep coming in my mind all the time.
ReplyDeleteSuperb Murali. You have a wonderful mind:)
ReplyDeleteVery good Thought!! Well rendered. Beautiful flow of words. Good Old Murali.
ReplyDeleteBut, there is a difference, I believe. Guru is a medium. Realization of Truth is end result.
End result cannot be identified as Means.
Of course, everything is unified Reality. But, that is mot the subject here. Intent is to define Guru.