Introduction and Announcements

  
New Original ! 
Aankhon ko - आँखों को

Older Compositions : Haule SeUdalin Thiriyaale , Choolena
Available in iTunes and Amazon !!

Learn Indian Classical Dance in Riyadh   !!

Friday, November 01, 2013

கம்பன் விழா - வாழ்த்து - ஒரு கவி மடல்

ஆஸ்ட்ரேலியாவின் கம்பன் கழகம் நடத்தும் ”கம்பன் விழா”விற்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் வந்து சிறப்பித்துத் தருமாறு வேண்டி வாழ்த்தி நான் வரைந்த ஒரு சிறு கவி மடல்.

==================

பாரினில் உள்ளப ழங்குடி மக்கள்
போரினில் மூழ்கியே புண்களைச் சுமந்து
காரிருள் தன்னில் உழன்றிடும் வேளை 
சீர்களால் கவிதைகள் கோர்த்தவர் தமிழர் !

பேரின மெல்லாம் உலகிலே மெச்சப்
பேணினர் தத்தம் மொழியினை - தமிழர்
ஓரினம் தனித்துவ மானவர் என்றே 
உரைத்திடத் தமிழை ஓதுதல் செய்வோம் !

வீரிய முள்ள தமிழரே ! உமது
சீரிய வாழ்வில் தமிழொரு அங்கம் !

அணிகலன் அல்லநம் அருந்தமிழ் ! நெஞ்சக்
குருதியில் ஓடிடும் குன்றாச் செம்மை !
பணியெனக் கருதியே வாரும் நீக்க
பிணியெனப் பிடித்த மொழியின் சிதைவை !

பன்மொழி கற்பீர் கற்றபின் அவற்றின்
பண்புறு கலைகளை தமிழிலே தாரீர்
தொன்மொழித்  தொய்வை நீக்கிடும் கடமை
சேய்-உம தேயாம் ! சேவைகள் தாரீர் !

வடமொழி தொட்டே கம்பனும் கவினாய்
வரைந்தரா மாயணம் அதில்தலை அன்றோ ?
உவமைகள் பலதும் படிப்பார் உள்ளத்(து)
உவகை ஊற்றைப் பெருக்கிடச் செய்யும் !

ஆசிக் கண்டத் தமிழா ! உந்தன்
ஆவல் தன்னை தூண்டும் வகையே
நாசிக் காற்றில் தமிழை நிரப்பும்
கம்பன் கழகக் தமிழர் விழாவே !

ஆழ்நிலைச் சிந்தையில் கம்பன் இருந்தால்
வருகிற தலைமுறை வளர்ந்திட நல்ல
சூழ்நிலை வருமே ! சுணங்குதல் வேண்டா !
வருவாய் ! தமிழைச் சுவைப்போம் களிப்போம் !

========

No comments:

Post a Comment