Introduction and Announcements

  
New Original ! 
Aankhon ko - आँखों को

Older Compositions : Haule SeUdalin Thiriyaale , Choolena
Available in iTunes and Amazon !!

Learn Indian Classical Dance in Riyadh   !!

Sunday, May 29, 2016

கண்ணன் பாடல்கள் - 6 - கொன்றை மலர் கொய்து

Song: Kondrai Malar Koythu - கொன்றை மலர் கொய்து
Composition, Lyrics, Orchestration and Vocals: Murali Venkatraman
Raagam :  Madhyamavati
Mixing : Swamy Kitcha

கண்ணன் பாடல்களில் பல உணர்ச்சிநிலைகள் உண்டு.  தோழனாய், தந்தையாய், மகனாய், காதலனாய் பலரும் கண்ணனைப் போற்றியதுண்டு.  இந்தப் பாடல் தன்னிடம் கருணை காட்டாத கண்ணனால் ஒரு மனம் நொந்த  பக்தனின் புலம்பலாக இங்கே தந்திருக்கிறேன்.  இந்தப் பாடலை எழுதி மெட்டமைத்து கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு மேலாகி விட்டன.  இப்போதுதான் இசைக்கோர்வையுடன் பாட ஒரு வாய்ப்பு கிட்டி இங்கே பகிர்ந்துள்ளேன். இதை முறைமையுடன் தன் நேரத்தைச் செலவழித்து சரியான இசைக்கலைவையாக்கிய திரு சுவாமி கிச்சாவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

பெரும் செல்வந்தர்களை அழகிய கொன்றைப் பூவோடும்,  எளிய பக்தனைத் துளசி இலையோடும் ஒப்பிட்டு எழுதி இருக்கிறேன்.

===


கொன்றை மலர் கொய்து உன்முன்னிலே
கொட்டிக் குவிக்கின்ற பலர் தம்மிலே
ஒற்றைத் துளசியிலை போலுன்னடி
ஒற்றி நடக்கின்ற எனைப் பாரய்யா

அன்று சுதாமனுக்கு வாழ்வளித்த மாலவா
இன்று இவ்வதமனுக்கு அருள் செய்ய வா
நீ வரவில்லையேல் அருள் தரவில்லையேல்
உனை வரும்படியே தாயை உலுக்கிடுவேன்
உன்னைப் போல் அல்லாது அவள் கருணை வடிவம்

சிந்தும் கண்ணீர்த்துளி சாகரமானதே
கொஞ்சி கெஞ்சி விம்மி நொந்தேன்
கல்போன்று நிற்பவனே கரைவாய் மனம்
கைலாய நாதன்போல் தருவாய் வரம்
அடேய் ! உன்னை நான் வேண்டி
கூன் தாங்கி வலி வந்ததே !
உன்னாலே ஓரின்பம் மண்மீதில் நான் கண்டே
நாளானது என்ன சோதனை ?!


No comments:

Post a Comment