Dhool.com இல் எங்கள் குழுவிற்கு என்று ஒரு தனிப்பக்கம் இருக்கிறது. அங்கே அரட்டை அடிப்பது தான் வாடிக்கை. நண்பன் அருண் எழுதிய ஒரு கவிதையை பார்த்து விட்டு பாலாஜி (
bb) கிண்டல் அடிக்க அருண் சார்பாக நான்(
MS) பேச என்று ஒரு முறை கவிதைப் போர் நடந்தது. அருண் நெத்தியடி, நச் பூமராங் மாதிரி நையாண்டி சமாச்சாரங்களும், அரசியல் பத்தியும் எழுதுவான். அது பாலாஜிக்குப் பிடிக்கும். ஆனா அவன் எழுதற கவிதை.... இதிலே நடுவே மற்றவரும் இடைச்செருகல்கள் செய்தனர். பங்கு கொண்ட எல்லாரும் நணபர்கள். - அருணா பாலாஜியின் மனைவி. இதனை ஒரு நண்பர் குழாமில் நடந்த வாக்குவாதமாகக் கருதுங்கள்.
==============================================
bb:
நெத்தியடி இட்டுவிடு எத்தனை முறையேனும்
சுத்தியடிக் கும்நச்பூ மராங்குகளும் போட்டுவிடு
பக்தியடிக் கும்நல் சபரிகதையும் சரிதான்
கத்திஎடுப் பேன்உன் கவிதைப் பார்த்து.
MS:
கத்தி எடுத்தாலும் லத்தி எடுத்தாலும்
கத்தித் தடுத்தாலும் கவிதை - பத்தி
புரிந்து பதிவும் செய்துந்தன் சங்கை
அரிந்து நிற்பேன் நான்
bb:
கையை யுடைப்பேன் கவிதை யெழுதினால்
நைய புடைப்பேன் நெஞ்சு நனைந்தால்
தைய லிடுவேன் உதட்டை இறுக்கி
வையத்தி லினிசாகும் கவி.
MS:
நெஞ்சு நனைதற்கு உன்பிள்ளை காரணமே
நஞ்சு உமிழாதே நண்ப(¡) - கெஞ்சு
கொஞ்சு இறைஞ்சு இடித்தென்னை இழிந்திடுக
அஞ்சு தலைஅறியேன் நான்.
bb:
அருணாச் சலனே (அருண்)
கருணைக் கொள்ளு
கட்டுரை போதும்
கட்டளை இதுவே
இட்டது போதும்
சட்டென நிறுத்து
வேண்டாம் கவிதை
கூண்டோ டெரி.
MS:
அருணா மனையோனே
அரிவாள் முனையோனே
கருநா கொண்டோனே
கவியின் கூற்றோனே
கட்டும் உரைமேலே
கனன்று உமிழ்வோனே
சுட்டும் விதையாகி
செடியாய் விளைவேனே
bb:
அஞ்சு தலையறியா ஒற்றைத் தலையனே
கஞ்சி கிடைக்காது நீகவிதைப் பாடினால்
கெஞ்சினால் மிஞ்சாதே நிறுத்து இனியேனும்
பஞ்சுமிட் டாய்தருவே னுனக்கு.
MS:
பஞ்சுமிட் டாய்வாங்கிப் பகிர்ந்துண்டு வாழுமொரு
பஞ்சநிலை அவலமது எனக்கில்லை பாலாஜி
இஞ்சியினை தின்றவொரு மந்தியினைப் போல்வதனம்
கொஞ்சமெனும் காட்டாது குந்துவாய் ஓரமாய்.
bb:
எச்சில் முழுங்கும் கவிதை வேண்டாம்
நச்சென அடிக்கும் நெத்தியடி போதும்
சத்துணவு வேண்டாத பத்துவரி வேண்டாம்
சட்டென சினிமா கிரிக்கெட் போதும்
பூணூல் அறுக்கும் அறுவை வேண்டாம்
பூடக அரசியல் இழுவை போதும்.
MS:
எச்சில் கவிதை எழுதல் நன்றே
அச்சில் அதனை ஏற்றல் நன்றே
கொச்சை மன்னர் காய்கறி போலே (balaji had a blog titled of cabbages and kings)
எச்சில் பிறரின் அன்றே எந்தன்
நச்சில் ஊறிய நாவின் ஒன்றே.
Arun:
அய்யகோ...போதும் போதும்!
பிபிக்குப் பிடித்ததென்று
கட்டுரை எழுதுவேன்!
உதயாவுக்குப் பிடித்ததென்று
கவிதை எழுதுவேன்!
எழுத்து எனக்குப் பிடிக்குமென்பதால்
ஏதாவது எழுதுவேன்.
பிடித்தால் படி.
பிடிக்கவில்லையென்றால்
படித்துவிட்டு இடி.
மொத்தத்தில், இந்த விவாதத்தை முடி!
முரளிக்குப் பிடிக்குமென்பதால்
மூன்றாம் வாய்ப்பாடு கூட எழுதுவேன்
bb:
பிடிக்கும் எனக்கு சரோஜாதேவி
பிடிக்கும் ரங்காக்கு மல்கோவாமாமி
பிடிக்கும் முரளிக்கு காமலோககாமி
எழுதிடு இதையெல்லாம் முதலில்.
Sri:
எனக்கு பிடிக்கும் சரோஜாதேவி
எனக்கு பிடிக்கும் சரோஜாதேவி
எனக்கு பிடிக்கும் சரோஜாதேவி [pause]
எனக்கு பிடிக்கும் சரோஜாதேவி
bb:
உதயா கெடக்கான்
கதையாய் விடுவான்
நம்பாத சரக்கை
வம்பாகப் புகழ்வான்
வேலியின் ஓணானை
வேட்டியில் விட்டிடுவான்
சந்தடியில் கேட்டுத்தான்
சந்தையில் வாங்குவான்
கால்கிலோ கவிதை
நாலரை ரூபாயென.
உதயா புகழ நீயும் எழுத
கதையா ஆகும் ஸ்ரீகாந்த் போல
அவனும் மயங்கிப் போனான் இப்படி
அதனால் வந்தது நந்தவன போண்டி.
Ranga:
ஒரு கானாவும் இருந்துட்டு போகட்டுமே...
அருணு போட்ட நெத்தியடி டாப்பூ
அவரோட கவிதைக்கு தான் ஆப்பூ
நா ஒரு பல்லு போன சீப்பு- பகிள்ள
உட்டேன்னா போட்டுக்குவே காப்பு
வெளியே சேறு
வீசினால்
உள்ளம்
தூய்மையாகிறது.
தூர்வாரி.....தூர்வாரி...
MS (குணா style):
ரங்கா, கூடவே சோமாறி, கேப்மாறி எல்லாம் போட்டுக்கணும்.
Sri:பூணூல்
rendu natkaLil unaku
renewal.
vetinalum valar ven.
mazithalum valarven
na periya m'ir...
AruNa:
எழுதுவதெல்லாம் கவியல்ல
எதுகை மோனை இருந்துவிட்டால்-மட்டும்
பத்து வரி தமிழ்ச்சொல் கொண்டால்-மட்டும்
கர்த்தனை காணாமல் -மட்டும்
போடும் பத்துவரி எழுதுவதெல்லாம் கவியல்ல.
MS:
கர்த்தனைக் காணமலா ?என்ன திடீர்னு யேசு க்ரிஸ்து மீது எல்லாம் கவிதை ?
AruNa:கர்த்தனை = கருத்தினை
bb:
அழியா அன்புடன்
பழியாய் கிடந்து
கழியா மலம்போல்
வழியை அடைத்து
நுழையா வாயிலை
ஒழியா துதிறந்து
கழுவா முகத்தோனே
எழுதா தேஇனி;
Ranga:
கவிதை நாறுது
MS:
உதயா மிடுக்கான்
உதையாய் தருவான்
கதையோ விடுவாய் ?
காதை பிடிப்பான்.
மொந்தையில் கள்ளும்
முற்றிய சுருட்டும்
சந்தையில் வாங்கி
சடுதியில் தீர்ப்பான்
சந்தமும் தருவான்
சந்தடி சாக்கில்
நிந்தனை செய்தால்
உந்தனை தீர்ப்பான்.
bb:
சரிதான் போ நீ எழுதிக்கோ
கரிதான் முகத்தில பூசிக்கோ
நகல்எடு இங்கே போட்டுடு
அவல்தான் எங்க வாய்க்கு.
MS:
எழுதாதே என்றிட பேனாவோ உனதன்று
கழுவாதே என்றிட கழிவாயில் உனதன்று
கழியாதே வீணாக பயனுன்னால் ஏதுமிலை
பழியாதே வந்தென் பிட்டத்தில் முத்தமிடு
--------------------------------------------------------------------------------
Late Responses:
Udhaya:
தனக்கெட்டிய எதிலும்
திறமையில்லை என்பார் இவர்
தினசரி தென்படுவதால்
சூரியனும் சராசரி
இவர்களுக்கு
என்றோ ஒருவன் அலங்கரித்துவிட்டுப்
போன அடுக்குமொழிதான்
இவரின் அளவுகோல்
இவர்வழிப்படி இன்றும்
செக்குமாடுதான் ஏருக்கு
பாய்மரம்தான் விரிந்த கடலுக்கு
உடன்கட்டைதான் இழந்த உறவுக்கு
பழமையின் களஞ்சியத்தில்
புலமை முக்கியமே தவிர
நிகழ்ந்த காலத்தின்
கோட்பாடுகள் அல்ல
அன்று மண்டை வெல்லம்
இன்று தொழிற்சாலை தைக்கும்
சிறு காகிதப் பை
இரண்டும் இனிப்பை ஏந்திவரும்
சுவைக்கத் தெரிந்தால்
சர்க்கரையை உருட்டி
மண்டை வெல்லம் தேடும் மனிதர்கள்
இருந்துவிட்டுப் போகட்டும்
என் உலகில் உண்டு
எல்லோருக்கும் அனுமதி
bb:
dhOdaa, vandhuttaaru serious kavignaru. yov U, innikku jolly kavidhai day. padikkaliyaa?
மண்டை வெல்லம் கொண்டை ஊசி
கெண்டைக் காலு சண்டைக் கோழின்னு
கண்டபடி எழுதவந்த குண்டுபுஸ்கு உதயா
மண்டை காய வைக்குதுங்க பாட்டு :))