Introduction and Announcements

  
New Original ! 
Aankhon ko - आँखों को

Older Compositions : Haule SeUdalin Thiriyaale , Choolena
Available in iTunes and Amazon !!

Learn Indian Classical Dance in Riyadh   !!

Friday, October 26, 2007

ஆறு

1993 இல் DAV 'இல் படிக்கும்போது எழுதிய ஒரு கவிதை.


ஆறு
====

மலைமுகட்டில் உதிக்கின்ற கதிரவன் தன்னை
மடந்தைபோல் தொடர்கின்ற பேராறே நீர்
அலைவீசிக் களிக்கின்ற கடலொடு நீயும்
அத்தமிக்கும் வேளையிலே சங்கமிக்கின்றாய்!
வலைவீசிக் கயற்செல்வம் தன்னை அள்ளும்
மீனவர்தம் வாழ்வினிலே இன்பம் தந்தே
நிலைமாறிப் போகாமல் நாளும் ஒற்றைப்
பயணம்தான் செய்கின்றாய் சோர்வே இன்றி!




கருக்கின்ற வானமதில் திரியும் பறவை
கவினோடு காட்சிதரும் கானப் பறவை
பருக்கின்ற தேய்கின்ற நிலவை நோக்கி
பாட்டென்றும் பாடிச்செல்லும் பறவை மற்றும்
இருக்கின்ற உலகுதனை விட்டே இன்ப
உலகுக்குச் செல்லுமுல் லாசப் பறவை
பெருக்கெடுத்துச் செல்லுகின்ற பேராறேநீ
பெருமையுடன் இவை பார்த்துச் செல்லுகின்றாய்





காற்றேதான் கார்முகிலின் தாளத்திற்கு
கருநீல வண்டோடு கானம் பாட
நாற்றேதான் அப்பாட்டின் தாளத்திற்கு
நாற்புறமும் சாய்ந்தேஓர் நடனம் ஆட
சேற்றில்தான் வீற்றிருசெந் தாமரையாளோ
செம்மைசேர் முகமலர்ந்து விரிந்து நோக்க
தோற்றேதான் போகுமடீ தேவர் சபையின்
ஏற்றமிகு புகழ்வனப்பும் எழிலும் இங்கே!




சிரிக்கின்ற சிறுமலர்தம் மூடே மெல்லச்
சிந்திவரும் பகலவனின் ஒளியேஉன் மேல்
தெறிக்கின்ற நற்காட்சி கண்ணைக் கொள்ளும்
கவிஞனவன் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்
விரைகின்ற வேளையிலே வீரம் காட்டும்
கற்களினைப் புறம்சாய்த்து சென்றாலும் நீ
மரிக்கின்ற மலருக்கு வாழ்வும் தருவாய்
மனதுனது என்னென்று அறிவார் யாரோ ?


2 comments:

  1. Hi you seem to know yappilakkanam well. Ethukakalum Monaikalum romba azhaga vanthirukku. Although I can see some immaturity in the porul itself...You said you wrote it when you were studying at DAV... school years ku this is quite . Unga meera bhajanum romba nalla irunthathu.

    ReplyDelete
  2. anitha:

    I am not really very familiar with yaappu. But thanks for your comment.

    ReplyDelete