Introduction and Announcements

  
New Original ! 
Aankhon ko - आँखों को

Older Compositions : Haule SeUdalin Thiriyaale , Choolena
Available in iTunes and Amazon !!

Learn Indian Classical Dance in Riyadh   !!

Friday, October 26, 2007

இலக்கிய Rap

1990 இல் எழுதிய ஒரு இலக்கிய Rap
=================================

கலையினிலேயொரு கலைமயிலே-யவள்
இடையினிலேவரு ஜதிகளிலே
மனதினிலிடையினில் மயங்கிடுமிதயமும்
மருகிடுதேசெய லிழக்கிறதே

தலையினிலேயொரு பூவுடனே-யவள்
வருகையிலேகண் படுகையிலே
தறிகெட்டு நெறிகெட்டு அலைகிறமனமதும்
குவிகிறதேதலை கவிழ்கிறதே

மலையினிலேவரு நதிகளைப்போன்றவள்
குழலினையேபிறர் பார்க்கையிலே
உலையினிலேசுடும் நீரினைப்போலுளம்
வெடிக்கிறதேமிகக் கொதிக்கிறதே

வலையினில்சிக்கிடு மீனினைப்போல்-தினம்
தவிக்கிறதேநிதம் துடிக்கிறதே
வஞ்சியின்நெஞ்சினில் தஞ்சம்புகுந்திட
விழைகிறதேதின முருகிடுதே

4 comments:

  1. அடேங்கப்பா.... என்ன முரளி எங்கேயோ மாட்டிகிட்டீங்க போல தெரியுது... பழய படைப்புக்களை தோண்டி எடுத்து இருக்கீங்க...

    சும்மா சொல்ல கூடாது பிச்சு உதரி இருக்கீங்க.. "மனதினிலிடையினில்" இந்த வார்த்தைய பிரிச்சு எழுதுறது ரொம்ப கஷ்டங்க.. இது என்ன மனதின் இடையினில்'அ இல்ல மனதினில் இடையினில்'அ?

    இப்படி வார்த்தைகளை சேர்த்து எழுதும் போது சில விஷயங்கள் கொஞ்சம் இடிக்கும்... உதாரணத்துக்கு..

    மலையினிலேவரு நதிகளைப்போன்றவள்
    குழலினையேபிறர் பார்க்கையிலே

    இந்த வரிகளில்..

    மலையினிலேவரு நதிகளைப்போன்றிவள்'ன்னு வந்து இருந்த அடுத்த வரிக்கு பொருத்தமா இருக்கும்...

    ஆனா இலக்கிய ராப்... அசத்தல்!!

    ReplyDelete
  2. கன்யா:

    நீங்கள் சொல்வது சரிதான். சில சமயம் தளை தட்டத் தான் செய்யும்.

    1: "மனதினில் இடையினில் மயங்கிடும் இதயமும்"

    ஒரு சிறிய எழுத்துப்பிழை.

    " மனிதினி இடையினில் மயங்கிடும்; இதயமும்"

    என்று வந்திருக்க வேண்டும்.

    மனதினி = மனது + இனி

    2: "நதிகளைப் போன்றவள் குழலினையே"

    - இதனை

    "நதிகளைப் போன்ற அவள் குழலினையே"

    என்று பிரிக்க வேண்டும். அப்படி நினைத்துத்தான் எழுதினேன்.

    பின்னூட்டத்திற்கு நன்றி.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. arrey mujhe to sab samajh aa gaya...

    yeh kya likha hai Murali?????

    ReplyDelete