தேகத்து உதிக்கின்ற தேவை எல்லாம்
தேவரவர் மூன்றெனவே கண்டார் மண்ணில்.
தாகத்தில் வீழ்காலம் தண்ணீர் வேண்டும்
தளருங்கால் வயிற்றுக்குச் சோறும் வேண்டும்
காகத்து அனைய ஒரு அழகிருந்தாலும்
காயத்தில் காதலெனும் நோய்நின் றாடி
மோகத்தீ மூண்டுவிடின் பெண்ணை நாடி
போகத்து உய்ப்பதுவே நன்மை என்பார்.
பொருள்:
உடலிலே தோன்றுகிற ஆசைகள் என மூன்றைச் சொல்லுவார்கள் பெரியவர்கள். தாகம் - அதுவரும் போது தண்ணீர் வேண்டும். பசி - அது வந்தால் வயிறு தளர்கிறது. சோறு வேண்டும். மோகம் - இது இயற்கையால் உந்தப் படும் தாபம். காகத்தை போன்ற அழகு படைத்தவராயிருந்தாலும், தன் காயத்தில் (உடலில்) காதல் நோய் பற்றி விட்டால், பெண் மட்டுமே அதனை தீர்க்க முடியும் என்று பெரியவர்கள் கூறி வைத்துள்ளானர்.
நாடாளும் மன்னர்கள் நங்கை தம்மை
நயம்பேசி பயம்தந்து பொருளும் தந்து
கூடாரம் பலவைத்துக் கூடிக் கொள்வார்
கூற்றுவனின் குரல்கேட்கும் வரையில் மண்ணில்.
ஈடாகப் பொருள் ஈட்ட இயலா மக்கள்
இம்மன்னர் போலவரைக் கொள்ளார் எனினும்
கூடாமல் உய்ப்பதுவும் கூடாதென்றே
கூச்சங்கள் நீக்கிஎம் வாயில் வந்தார்.
பொருள்:
இப்படிப்பட்ட மோகத்தீயானது நாடாளும் மன்னர்களை எப்படி ஆட்டுவிக்கிறது ? அவர்கள், நயமாகவும் தன் பதவி பற்றி பயமாகவும் பேசி, பின்னர் பொருளும் தந்து பல கூடாரங்களிலும் பல பெண்களைப் பராமரித்து சல்லாபம் புரிவர். கூற்றுவனின்(எமன்)அழைப்பு வரும் வரை இங்கனமே செய்கின்றார். ஆனால் அவர்களைப் போல பொருள் ஈட்டி பல பெண்களோடு கூட முடியாமல் போகும் பாமர மக்களோ காமத்தீ வந்து விட்டால் என்ன செய்வார் ? "ஒரு பெண்ணோடு கூடாமல் போனால் வாழ்க்கை முழுமை பெறாது. எனவே நாமும் சிறிது சிற்றின்பம் பெற வேண்டும்"என்று முடிவு செய்து கூச்சத்தை நீக்கி எங்கள் வாசலுக்கு வருகிறார்
Great site lots of usefull infomation here.
ReplyDelete»