Introduction and Announcements

  
New Original ! 
Aankhon ko - आँखों को

Older Compositions : Haule SeUdalin Thiriyaale , Choolena
Available in iTunes and Amazon !!

Learn Indian Classical Dance in Riyadh   !!

Friday, July 28, 2006

வேசியியல் 4,5

(4)

பகலவனைப் பார்த்தீரா நாளும் நின்று
பழுதற்ற ஒளிதருவான் பார்ப்போர்க்கெல்லாம்
தகலெவரோ கொண்டுள்ளார் தாரணியில் தான்
தருணமதும் தளர்வின்றி தரவே இன்பம் ?
இகல்இவரின் இன்மனதை குருதிக் கோலம்
இல்லாளால் செய்துவிடின் இனிமை வேண்டிப்
புகல்இவரைப் புன்முறுவல் பூத்தே சற்றும்
புழுக்கமது காட்டாது புணரல் செய்வோம்


சூரியனைப் பார்த்து இருக்கிறீர்களா ? அவன் ஒவ்வொரு நாளும் வானத்தில் வந்து நின்று, பார்ப்பவருக்கெல்லாம் பழுது இல்லாத ஒளி தருவான். சூரியனைப் போல எந்நாளும் உலகத்தில் எந்தத் தருணமும் தளர்வு இல்லாது, குறை இல்லாது இன்பம் தருவதில் எமக்கு நிகர் யாரும் உண்டோ ? இல்லாளின் சொல்லால் மனம் காயமுற்று விட்டால், இனிமையைத் தேடி எங்கள் வாசலில் புகும் இவர்களை, புன்முறுவல் காட்டி மனப் புழுக்கம் எதுவும் இல்லாமல் புணரலால் இன்பம் அளிக்கின்றோம்.

(5)

பெருங்கோவில் வாயிலது இரவில் மூடும்
பெரியார்தம் பள்ளிகளோ மாலை மூடும்
பெருங்கோவின் மனையினிலும் தர்மம் வேண்டி
கையேந்தி நின்றிடவும் காலம் உண்டு
உறங்காமல் கடல்ஒன்றே எக்கணமும்நல்
உவகையுடன் எவர்காலும் தீண்டும்; வதனம்
சுருங்காமல் வரவேற்று சுகங்கள் காட்டும்
சுந்தரிகள் யாங்களுமே வாரிதியன்றோ ?


பெரிய கோவிலின் வாசல் கூட இரவில் மூடி விடும். கற்றறிந்த பெரியவர்கள் போதிக்கும் பள்ளிகளோ மாலை மூடி விடும். பெருங்கோவின் (பெரிய அரசனின்) வீட்டினிலும் இரந்து கையேந்தி நின்றிடவும் ஒரு சமயம் இருக்கிறது. உறங்காமல் கடல் ஒன்று மட்டும் தான் எந்நேரமும் எத்தனை பேர் வந்தாலும் அவர்களின் கால்களைத் தீண்டி மகிழ்விக்கும். முகம் சுருங்காமல் எல்லாரையும் எந்நேரமும் வரவேற்று இன்பத்தை அளிக்கின்ற நாங்கள் அந்தக் கடல் (வாரிதி) போலத் தானே ?

10 comments:

  1. Hi Murali,

    I like to request you to post a translation of your hindi document so that people like myself who know too little can gain from it too.

    Please ignore my comment if it sounds out of place :D

    ReplyDelete
  2. Khan:

    I appreciate your interest to know what I have tried to scribble in the name of a poem :) But I wonder if it will really make any sense when translated. The theme of the poem : a prostitute is talking to the society (in a poetic fashion) about her plight and seeks recognition and respect as a fellow human being.

    ReplyDelete
  3. Anonymous6:08 AM

    arumaiyana kavidai adai vida arumai adan porul ,engal pol pamararkum purium vagaiyil thandarku migavum nandri .உறங்காமல் கடல் ஒன்று ....inda varigal migavum arumai ,neenda natkaluku piragu oru nalla kavidai padita sandosham nandri .
    -priya

    ReplyDelete
  4. வணக்கம் முரளி,

    எப்பவும் போல... உங்கள் தமிழ் அழகு, நல்ல உவமை.

    ஒரு சிந்தனை... உங்களுடைய முதலாம் பாகத்தில், ஒரு வேசி தனக்கு இழைக்கப்படும் கொடுமைகளை கோரி தனக்கு நீதியும், சமுதாயத்தில் சம உரிமையும் கேட்க போவதாக சொல்லி இருந்தீர்கள்.. ஆனால் இதுவரை உங்கள் பாடல்களில் அவள் தான் செய்வது ஒரு சேவையைப் போலவும் தான் கடலுக்கும் ஆதவனுக்கும் இனையானவள் என்றும் பாடுவதுபோல உள்ளது.

    இப்படி தன்னையும், தன் தொழிலையும் உயர்வாக நினைக்கும் ஒருத்தி, சமுதாயத்தோடு போராடுவாளா?

    அப்படி போராட வேண்டிய அவசியம் என்ன?

    The catch is... if i want to be treated as an equal in the society, were i am being ill treated.... i wudn't be bragging abt myself to be someone above the world. Infact, I have read in some stories that when a devadasi took a lot of pride on her art and beauty, she became more available and flirtious and then was treated badly by other women!! but these are only stories... i am not sure if they were credible evidence.

    Looking forward for the rest of this verse!!

    Kanya

    ReplyDelete
  5. கன்யா,

    தங்கள் சிந்தனையை வறவேற்கிறேன்.

    ஒடுக்கப்பட்ட எந்த ஒரு சமுதாயமும் தங்கள் உரிமையை நிலை நாட்ட சற்று தங்களை மிகைப்படுத்தி காட்டிக்க்கொள்ளுதல் ஒரு வழக்கம் ஆகும். எடுத்துக்காட்டாக ஆப்பிரிக்க இனத்தினர் தாங்கள் ஒடுக்கப்பட்ட காலத்தில் புரட்சி செய்யும்போது, "கருப்பர் இனப் பெருமைகள்" எனப் பலதையும் பறை சாற்றினர். "ராப்" இசையை பற்றி அறிந்து இருப்பீர்கள். பெரியார் தலைமையில் நடந்த பிராமண எதிர்ப்பு இயக்கங்கள் சிறிதே கடுமையாக கடவுள் எதிர்ப்பாக மாறியது மற்றொரு உதாரணம். அது போல ஓரினச் சேர்க்கையில் ஈடுபாடு உள்ள மக்கள் தங்கள் உரிமையை கேட்டு வாங்க "ஓரினச் சேர்க்கையின் பெருமை ஊர்வலம்" நடத்துகின்றனர். இவர்களெல்லாம் நீதி கிடைக்க வேண்டும் என்ற உந்துதல் வரும்போது தங்களை சற்று தனித்துவத்துடன் பிரதிபலித்தால் தான் சமுதாயத்தின் ஈர்ப்பை தங்கள் பக்கம் கவர முடியும் என்று இவ்வாறு மிகைப்படுத்தி தங்கள் பழக்கங்களில் வேறுபடுத்திக் காட்டுகின்றனர்.

    அதையே தான் இங்கு முயற்சி செய்து பார்த்து இருக்கிறேன். தன் பெருமையை சற்றே பாடினால் தான் மக்கள் "என்னடா இவளுக்கும் இப்படி ஒரு எண்ணம் இருக்கிறதா ?" என்று திரும்பிப் பார்க்க வாய்ப்பு உண்டு என்று என்னுடைய கவிதையின் நாயகி நினைக்கின்றாள். அது மட்டும் அல்ல, இதனை ஒரு வணிகமாகத் தான் நான் கருதுகிறேன். வணிகத்தில், பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், தன்னிடம் இருக்கின்ற பொருளை விற்க, ஒரு வாணிகன் உயர்த்திக் கூறியே ஆக வேண்டும். அதற்காத் தான் இந்தப் பாடல்கள்.

    ஒன்றைத் தெளிவாகக் குறிப்பிட விரும்புகிறேன். இந்த பாடல்கள் தேவதாசியைப் பற்றி அல்ல. வேசியை பற்றியே ஆகும். தேவதாசிகளை வேசியின் முன்னோடிகளாகக் குறிப்பிட்டு இருக்கின்றேன் என் முன்னுரையில். அவ்வ்வளவே. அதற்கு மேல் நான் எழுதுவது எல்லாம் ஒரு வேசி தன்னை பற்றி பாடுவதாகத் தான் அமைத்து உள்ளேன்.

    இனி வரும் பாடல்களுக்காக சற்றே பொறுத்து இருக்கவும். அதிலே அவள் தனக்கு நியாயம் கேட்டு முறையிடுவதும் உள்ளது.

    ReplyDelete
  6. முரளி,

    தெளிவுக்கு நன்றி.

    எதிர்பார்ப்பு வளர்கிறது!! :)

    கன்யா

    ReplyDelete
  7. Murali

    Enna ippo Paatu padarathu illaya? ;-) I had a good song and i wanted you to try.. haha. When you get back to singing, let me know ;-)

    ReplyDelete
  8. கார்த்திக்:

    இசையும் தமிழும் மிகவும் மனதோடு ஒட்டிய விஷயங்கள். பல நாட்களாகப் பாடி ஆயிற்று. தமிழ்க்கன்னி என்றாவது தான் ஆசை அழைப்பு விடுக்கிறாள். அப்போது தட்ட முடியாமல் போகிறது :)

    ReplyDelete
  9. Anonymous10:07 AM

    Your are Excellent. And so is your site! Keep up the good work. Bookmarked.
    »

    ReplyDelete
  10. Murali:

    Africa example in your response to Sukanya is good.

    Tune pottachaaa indha paadalgalukellam?

    ReplyDelete