ஞானங்கள் தருகின்ற பெரியோர்க்கெல்லாம்
நல்லமுறை செய்திடுவார் குருவே என்பார்
தானங்கள் பலதந்து வறியார் தம்மின்
பசிநீக்கும் பண்பாளார் புரவலராவார்
கானங்கள் செய்வோரைக் கவியே என்பார்
காதலெனும் அமிழ்தத்தை வார்க்கும் எம்மை
ஈனங்கள் என்றேனோ புறமும் தள்வார் ?
இவ்வுலகில் இஃதின்றி இன்பம் உண்டோ ?
பொருள்: கல்வியைக் கற்றுத் தருகின்ற பெரியவர்களுக்கு முறையான மரியாதைகள் செய்து குரு என்று போற்றுகின்றனர். தானங்கள் செய்து வறியவர்களின் பசியைப் போக்குகின்ற குணம் கொண்டவர்களை புரவலர்கள் என்று போற்றுகின்றனர். கானங்கள் செய்து பொருள் ஈட்டுகின்றவர்களைக் கவி என்பார். இப்படி பலரும் பலது செய்து வாழ்கின்றனர். சிலர் தொழிலாகவும், சிலர் சேவையாகவும் இதனை செய்கின்றனர். இவர்களுக்கெல்லாம் நல்ல மரியாதை கிடைக்கிறது. ஆனால், காதல் எனும் அமிழ்தத்தை தருகின்ற எங்களை மட்டும் ஈனப் பிறவிகள் என்று எள்ளி நகையாடி ஒதுக்கி வைக்கின்றார்களே ? ஏன் ? காதலும் காமமும் இல்லாமல் உலகின் இன்பமும் இயக்கமும் இருக்குமா ?
No comments:
Post a Comment