Introduction and Announcements

  
New Original ! 
Aankhon ko - आँखों को

Older Compositions : Haule SeUdalin Thiriyaale , Choolena
Available in iTunes and Amazon !!

Learn Indian Classical Dance in Riyadh   !!

Wednesday, August 02, 2006

வேசியியல் - 9,10

All the verses from 1-10 can be downloaded in a PDF format from :
http://msvenkat.googlepages.com/vesiyiyal.pdf
(9)
கல்வெட்டு கணிதமென கல்வி பலதும்
கற்றவர்கள் நிலை வளர்க்க சங்கம் உண்டு
கல்வெட்டும் தொழிலுக்குச் சங்கம் உண்டு
கடைவைக்கும் வணிகர்க்கும் சங்கம் உண்டு
கள்கட்டும் தொழிலுக்கும் சங்கம் உண்டு
கயவர்க்கும் வேசியர்க்கும் சங்கம் இல்லை
முறையான வணிகத்தால் மோகம் தீர்க்கும்
காரிகையும் கயவருமே ஒன்றா சொல்வீர் !


பொருள்:

(கல்வெட்டு என்பது இங்கே இலக்கியத்தை குறிப்பதாக வைத்துள்ளேன்). இலக்கியம் கணிதம் என்று படிக்கும்/போதிக்கும் மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்த சங்கங்கள் இருக்கின்றன. கல்லை உடைக்கும் தொழிலாளிக்கும் சங்கம் இருக்கிறது. கடை வைத்து வியாபாரம் செய்கின்ற வணிகர்களுக்கும் சங்கம் இருக்கிறது. கள்ளைக் கட்டி இறக்கி வணிகம் செய்பவர்க்கும் சங்கம் இருக்கிறது. ஆனால், திருடர்களுக்கும் வேசிகளுக்கும் சங்கம் இல்லை!! நாங்கள் என்ன திருடுகிறோமா ? முறையான வணிகம் செய்து தானே வாழ்கிறோம் ? எங்களுக்கும் கயவ்ர்களுக்கும் வேறுபாடு இல்லையா ? இருவரும் ஒன்று தானா ? எங்களுக்கு நியாயமாக ஒரு சங்கம் வேண்டாமா ?

(10)
போராத காலத்தால் எம்மை விற்று
புண்ணாகி நொந்துள்ளோம் நீங்கள் மேலும்
தீராத மனவலியை தாராதீரும்
மதியாமல் இருந்தாலும் மிதியாதீரும்.
சீரோடு வாழ்கின்ற வாழ்வா கேட்டோம் ?
சிறிதளவே சிந்தித்து பார்ப்பீர் நீங்கள்.
நீரோடு உணவும்நல் நித்திரை யோடும்
நிம்மதியாய் வாழ்கின்ற வாழ்வே போதும்


பொருள்:

எங்களின் போராத காலத்தால், உடலை விற்று ஏற்கனவே மனம் புண்ணாகி நொந்துள்ளோம். ஏ சமுதாயமே! நீங்கள் வேறு எங்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்தி எங்கள் வலியை கூட்டாதீர்கள். எங்களை மதிக்காமல் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் துன்புறுத்தாமல், இருந்தாலும் போதும். நாங்கள் என்ன எங்களை தலையில் வைத்துக் கொண்டு ஆட வேண்டும் என்றா எதிர்பார்க்கிறோம் ? அப்படிப்பட்ட சிறப்பான வாழ்வையா கேட்டோம் ? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். ஒரு விலங்கிற்கும் மனிதனுக்கும் அத்தியாவசியம் எனப் படுகின்ற மூன்றான நீர், உணவு, நிம்மதியான நித்திரை - இது மூன்றையாவது தாருங்கள். அந்த வாழ்வே போதும். அதற்கு கூட வழியில்லாமல் செய்து எங்களை துன்புறுத்தாதீர்கள். நாங்களும் மனிதர்களே !

(முற்றும்)

18 comments:

  1. Read your poems, வேசியியல்

    Its nice to see few good hearts, being sympathetic towards them. Aanaal, enn karuthu
    “Ipadi vayitru pasikaaga, oru izhuvaana thozhil seyvadhai vida- maranathai thazhuvalaam.” But practically speaking, things have changed a lot now. There are so many good people in the world- who have homes for the dropouts! They can go for some other better job or even go work for a home or serve the old/orphans in any such organization. Tharkolai seydhu kolvadhu kozhaithanam engindranar!! Adhayum vida kozhai thanam- poraadamal, indha keezhthanamaana trick’la sila pengal vizhundhu viduvadhu dhaan!! …….
    Ungaladhu kavidhai- Nalla sindhanai!!

    ReplyDelete
  2. மருதம்:

    நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. வேசியாக வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப் படும் ஒரு பெண், தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்கிறீர்களா ? கூடாது என்கிறீர்களா ? என் கருத்து - கூடாது என்பதுதான்.

    மனித உயிர் விலை மதிக்க முடியாதது. ஒரு சாண் வயிற்றிற்காக இந்த உலகில் நடக்காத கொடுமைகளே இல்லை எனலாம். பல வேசிகள் தன் குழந்தைகளைக் காப்பாற்றும் பொருட்டு அந்தத் தொழிலைச் செய்கின்றனர். தன்னுயிரைப் பற்றிக் கூட அவர்கள் கவலைப் படாமல் இவ்வாறு தன் குழந்தைக்காக வாழ்வதனால் தான் இன்னும் தாய்மையின் அன்பால் வேசியின் பிள்ளைகள் எல்லாருமே பின்னாளில் கயவர்களாக மாறாமல் வாழ்வில் முன்னேறி விடுகின்றனர். எனக்குத் தெரிந்தே கணவனால் இரு பிள்ளைகளோடு கைவிடப்பட்ட ஒரு வேசிப் பெண் தன் மகனையும் மகளையும் நன்றாகப் படிக்க வைத்துள்ளார். இப்போது அவர்கள் நல்ல நிலமைக்கு வந்து தங்கள் தாயை நன்றாகப் பார்க்த்து கொள்கின்றனர். எங்கு தங்கள் தாய் தொழில் செய்து வந்தாரோ, அந்த ஊரைக் காலி செய்து விட்டு வேறொரு மாநிலத்திற்கே சென்று வாழ்க்கையைத் தொடங்கி விட்டனர்.
    நீங்கள் சொல்வது போல தற்கொலை செய்து கொண்டு இருந்தால், அந்த 2 பிள்ளைகளின் கதி ? தற்கொலை தீர்வு ஆகாது.

    அது மட்டும் அல்ல - எல்லாரும் சொல்வது போல் தற்கொலை ஒன்றும் முழுவதும் கோழைத் தனமானது அல்ல என்பது என்னுடைய கருத்து. நான் கல்லூரியில் இருக்கும்போது என்னுடைய தோழன் தூக்கு மாட்டி இறந்தான். அவன் உடல் தொங்கிய கோலத்தை பார்த்த போது தற்கொலை என்ற முடிவு எத்தனை பயங்கரமானது என்று புரிந்தது. தன் சொந்த பந்தங்களையெல்லாம் விட்டு தன் உயிரை ஒடுக்கி துடி துடிக்க இறப்பது நிச்சயம் பயங்கரமான முடிவு. அதற்கும் மனத் திண்மை வேண்டி இருக்கிறது. ஆனால், தற்கொலை செய்து கொள்ளாமல் பிறரைக் கெடுக்காமல் வாழ்ந்து ஜெயிக்க வேண்டும் என்று நினப்பது அதனைக் காட்டிலும் உயர்வானது. அதுவும் தனக்காக அன்றி தன் குழ்னதைகளுக்காகவாவது, திருடாமல், கொலை செய்யாமல், தன் உடலை விற்று பிள்ளைகளை வளர்க்கும் வேசிப் பெண்கள் மற்ற தாய்களை விட ஒரு படி மேலாகத் தான் எனக்குத் தெரிகின்றனர்.

    முயல்:

    நன்றி.

    ReplyDelete
  3. முரளி,

    தற்கொலையைப் பற்றி உங்களுடைய கருத்து மிக சரியானது.. ஒரு உயிர் தன் உடலை சுமையாக நினைக்க தொடங்கியதும் மீதம் உள்ள தன் வாழ்க்கையின் மீது ஒரு இனம் புரியாத பயம் வருகிறது... தன்னுடைய இந்த சுமையை, வலியை மற்றவர்கள் சொந்தங்களாகவே இருந்தாலும் கேட்கவும்... அந்தோ பரிதாபம் என்று வருந்த முடியுமே தவிர அதனை குறைக்க முடியாது என்ற நிஜம் புலப்படும் போது அந்த பயம் நம் உணர்வுகளை பற்றோ ஒட்டுதலோ இல்லாமல் போகச் செய்கிறது..

    வாழ்க்கையின் மீது நமக்கு இருக்கும் பயம் பெருகிக் கொண்டே போக.. ஒரு விணாடியில் அது மரணத்தின் மீது உள்ள பயத்தை சுருக்கி விட்டும்... அந்த விணாடியில் எடுக்கும் ஒரு முடிவுதான் இருண்டு போன அந்த சுதந்திரம்...

    இப்படி ஒரு விணாடி எல்லோர் வாழ்க்கையிலும் எட்டி பார்க்கும்... ஆனால் எல்லோரும் தற்கொலை செய்து கொல்வது இல்லை... காரணம் நமக்குள் இருக்கும் "animal instinct"... கல்வி நம்மை முட்டாளாக்குவதற்கு முன்பு வரை நாம் நம்முடைய உள் உணர்வுகளை மிகவும் கவனமாக உணர்ந்து வந்தோம்...

    நெருப்பில் கை வைத்தால் சுடும் என்பது தொட்ட பிறகு தெரிவதை விட.. தொடுவதற்கு முன்னமே நன் கையை விலக்கும் இந்த உணர்வு... ஆனால் நமக்கு கல்வி கிடைத்ததும்... எல்லா விஷயத்திற்கும் ஒரு லாஜிக் தோடுகிறடு மனம்... அந்த தேடலின் குழப்பத்தில் நம் உள் உணர்வு சொல்வதை நம்மால் கேட்க முடிவதில்லை...

    என்னக்கு தெரிந்த ஒரு இளைஞன் மரித்தபோது அவன் சொந்தங்கள் எல்லாம் ... இவ்வளவு படித்து இருக்கிறான்.. இப்படி ஒரு முட்டாதனமான காரியம் செய்துவிட்டானே என்று புலம்பினார்கள்...

    அது மட்டுமல்ல... மரணம் என்பது நிஜமே ஒழிய அது நமக்கு என்றுமே புரியாத ஒரு புதிர்... காலங்களாய் சுவாசம் ஓடிக்கொண்டிருந்த இந்த உடல், அதன் சிந்தனை, உணர்வு.. நினைவுகள் அத்தனையும்.. ஓடும் சுவாசம் நின்றதும் பொய்யாகி போவது எனக்கு எட்டாத ஒரு புதிர்...

    நேற்று என் முன் உட்கார்ந்து சிரித்துக் கொண்டு இருந்தான் ஒருவன்.. அடுத்த நாள் அவனுக்கு மௌன அஞ்சலி... சொல்ல முடியாத ஒரு பயத்தை விட்டு சென்றது அந்த நாள்...

    காலனை விரும்பித் தழுவ அசைக்க முடியாத ஒரு துணிவு வேண்டும்!!!

    ஆனால் மருதம் அவர்கள் சொல்வது இந்த காலத்தில் கைவிடப்படும் பெண்கள் வேசிகளாக வேண்டிய அவசியம் இல்லை... தற்கொலை செய்ய வேண்டியதும் இல்லை... இன்றைய பெண்களுக்கு நிறைய வழி இருக்கிறது.. அதற்கு உண்டான துணிவும் இருக்கிறது...

    நீங்கள் சொல்வது போல 20 வருடங்களுக்கு முன்பு ஒரு வேசித்தாய் உயர்ந்தவள்தான்... ஆனால் இன்று ஒரு பெண் தன் குழந்தைகளுக்காக அப்படி ஒரு வழியை தேர்ந்து எடுத்தால் அவளை உயர்ந்தவளாக ஏற்க தோன்றுமா??

    ஒரு விஷயம் பாராட்டப் பட வேண்டும்... எனக்கு தெரிந்த ஒரு நன்பர், வாழ்க்கையில் திசை தவறிய ஒரு பெண்ணை திருமனம் செய்து கொண்டார்.. இன்று வரை தான் தியாகம் செய்ததாக அவர் நினைத்தது கூட இல்லை.. அவரைப் போல பல இளைஞர்கள் இன்று இருக்கிறார்கள் என்பது மிகவும் வாழ்த்த வேண்டிய ஒரு நோக்கம்... அந்த நன்பரைப் போன்ற எல்லா இளைஞனையும் உயர்வாக நினைக்கிறேன்.

    கன்யா

    ReplyDelete
  4. கன்யா:

    நீங்கள் சொல்வது போல 20 வருடங்களுக்கு முன்பு ஒரு வேசித்தாய் உயர்ந்தவள்தான்... ஆனால் இன்று ஒரு பெண் தன் குழந்தைகளுக்காக அப்படி ஒரு வழியை தேர்ந்து எடுத்தால் அவளை உயர்ந்தவளாக ஏற்க தோன்றுமா??

    என்று கேட்டு உள்ளீர்கள்.

    20 வருடங்கள் என்ன ? உடலுறவுக்கான உந்துதலை விஞ்ஞானம் முற்றிலுமாக தன் அறிவு பலம் கொண்டு நீக்கி, இனப் பெருக்கத்திற்கு உறவு அல்லாத ஒரு வழியை தேடும் வரை, இந்தத் தொழில் நடை பெற்றுக் கொண்டு தான் இருக்கும். அதற்கு சில நூறு வருடங்கள் கூடப் பிடிக்கலாம்.

    என்னை பொறுத்தவரை, எந்தப் பெண்ணும் தன் பிள்ளையைக் காப்பாற்ற இத்தொழிலை விரும்பி ஏற்பதில்லை. கட்டாயங்களால் தான் ஏற்கிறாள். மற்றபடி, பல பெண்கள், படிப்பு அறிவு இல்லாமல் போனால் கூலி வேலையாவது செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று தான் நினைக்கின்றனர். அதையும் மீறி அவளால் வேசித் தொழிலைத் தவிர எதையும் செய்ய முடியாது என்ற நிலை வந்தால் தான் அவள் அந்த வழியைத் தேர்ந்து எடுப்பாள். இப்போது இருக்கிற வசதிகளால் பலர் வேறு ஊருக்குச் சென்று பிழைப்பு நடத்த நிச்சயம் முயற்சி செய்கின்றனர். ஆனால், பல பெண்களை அவர்களின் சொந்த பந்தமே வேசித்தொழிலில் ஈடுப்டுத்தி அந்த சிறையில் இருந்து மீளாதவாறு கைது செய்யும் போது அவள் என்ன செய்வாள் ? எடுத்துக்காட்டாக, மும்பையில் உள்ள விடுதிகளில் பல பெண்கள் எங்கேயும் போக முடியாதவாறு குண்டர்கள் தடுக்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அவளுக்கு ஒரு குழந்தையும் இருக்குமானால் அவள் பாடு சொல்லவே வேண்டாம். இப்போது நீங்கள் கேட்ட கேள்வியை அப்படியே திருப்பிக் கேட்கிறேன்.

    "ஆனால் இன்று ஒரு பெண் தன் குழந்தைகளுக்காக அப்படி ஒரு வழியை தேர்ந்து எடுத்தால் அவளை உயர்ந்தவளாக ஏற்க தோன்றுமா??"

    தோன்ற வேண்டும். அப்படி தோன்றவில்லை என்றால் தோன்றச் செய்ய வேண்டும். அவளை அச்சிறையில் இருந்து விடுபட்டு அழைத்து வரச் செய்ய வேண்டும். மீட்டு வந்து அவளுக்கு புதிய வாழ்வுக்கு வழி செய்ய வேண்டும்.

    அப்படிச் செய்ய வில்லை என்றாலும் தன் குழந்தைகளுக்காக, தன்னுயிரை மாய்க்காமல் உடலை விற்று பிழைத்து வாழவைக்கும் அந்தப் பெண்ணை மதிக்கவாவது கற்றுக் கொள்ளவேண்டும். கனிவுடன் நடத்த வேண்டும்.

    ReplyDelete
  5. Murai

    jeez. you removed my comment? thats was little bit rude ok this will be last comment. thanks.

    you can remove this one too. bye

    ReplyDelete
  6. Karthik:

    you are looking at the wrong page. Here it is:

    http://swara.blogspot.com/2006/07/45.html
    =======


    Karthik said...

    Murali

    Enna ippo Paatu padarathu illaya? ;-) I had a good song and i wanted you to try.. haha. When you get back to singing, let me know ;-)
    4:12 PM
    Murali said...

    கார்த்திக்:

    இசையும் தமிழும் மிகவும் மனதோடு ஒட்டிய விஷயங்கள். பல நாட்களாகப் பாடி ஆயிற்று. தமிழ்க்கன்னி என்றாவது தான் ஆசை அழைப்பு விடுக்கிறாள். அப்போது தட்ட முடியாமல் போகிறது :)
    7:05 PM

    ReplyDelete
  7. Sorry murali. i guess i got confused. you can delete my post. ;-)

    srammathirku mannikavum..

    Nanri.

    ReplyDelete
  8. i guess velai athigamaaga irunthathalum, vesiyiyil yengali sariyaga parkaaathathalum, thavaru nadanthuvitathu. remove my comments or i will look stupid . hahaha

    ReplyDelete
  9. muual: - ithu enna paattunnu theriyaliye !

    ReplyDelete
  10. Anonymous12:54 PM

    MS:

    vaadaadha rOsaappoo naan oNNu paarththEn; paadaadha sOgaththOdu paattum paada kEttEn - solo by SPB+IR from the movie 'oru graamaththu adhyaayam'

    You have the track for it I think.

    ReplyDelete
  11. mural:

    can u please send the mp3 of the original ? I do have the karaoke track . thanks. cfdmodeler-dhool@yahoo.com

    ReplyDelete
  12. Many tracks were given to me by my friend. IS there at least a site wher eI Can listne to that song ?

    ReplyDelete
  13. Have read 'vesiyiyal'.! Good work Murali.!

    //"ஆனால் இன்று ஒரு பெண் தன் குழந்தைகளுக்காக அப்படி ஒரு வழியை தேர்ந்து எடுத்தால் அவளை உயர்ந்தவளாக ஏற்க தோன்றுமா??"

    தோன்ற வேண்டும். அப்படி தோன்றவில்லை என்றால் தோன்றச் செய்ய வேண்டும். அவளை அச்சிறையில் இருந்து விடுபட்டு அழைத்து வரச் செய்ய வேண்டும். மீட்டு வந்து அவளுக்கு புதிய வாழ்வுக்கு வழி செய்ய வேண்டும். //

    Intha theme varamaathiri oru paattu setheenganna nalla irunthirukkum...

    Good work.!

    ReplyDelete
  14. Anonymous9:17 AM

    Aiyoo.. ammma.... Erkanavae I was shocked at how beautifully you sing.

    This is beautiful. Firstly, the very thought to speak for the devadasis. Secondly, the thoughts itself ! Sorchuvai, Porutchuvai ... pichuteenga ponga.

    Innum vera enna talents olichu vechirukeenga. Aarambathula engalla oruthan nu ninaichu unga blog visit panninaen. Vishwaroopam eduthu nikkareenga manasula.

    Naan unga 100% FAN.

    rc.

    rc.

    ReplyDelete
  15. Anonymous4:48 AM

    Oru siru sandhegam.

    "இகல்இவரின் இன்மனதை குருதிக் கோலம்"

    Inga இகல் naa enna?

    Likewise "தகலெவரோ". Idhuvum puriyala. Please clarify when you have the time for it.

    Also, "தாரணியில்". தரணி kaelvi patrukkaen. Thaarani usage allowed aa?

    Thank you.
    rc.

    ReplyDelete
  16. thagal - thiramai, suitability
    ikal - pagai
    thaaraNi is same as tharaNi.

    Thanks for reading RC.

    ReplyDelete
  17. Anonymous12:01 AM

    Mikka nandri, Dr.

    I was recently listening to "Vaishnava Janatho" from HeyRam and was mesmerized by the Tamizh from what I think is Thiruppaavai (I could be wrong, but you get the idea). I was wondering if someone could write such, if I could write such, with every sentence to rhyme with the beginning of the one next to and prior to it. I was pleasantly surprised to see your Vesiyiyal.

    Excellent work. Niraiya ezhudhunga pls. Your vedanta blog is next on my list to do.

    RC.

    ReplyDelete
  18. Huh.. Read Vesiyiyal.. And reading the comments took more time..
    Thamizhai paraatuvadha, Adhan vilakathai paraatuvadha, manam negizha veikkum avvarigalai paraatuvadha..
    Tharkolai pattri neer ezhudhiya karuthukalum migachari..

    Brilliant work.. made my evening..

    ramya

    ReplyDelete